தாம்பரம் பத்திர ஆபீஸிலேயே சார் பதிவாளர் ரேவதி.. ஈஸியான ட்ரிக்ஸால் சிக்கியது எப்படி?
சென்னை: சென்னை தாம்பரம் அடுத்த ராஜகீழ்ப்பாக்கம் பகுதியில் தாம்பரம் மற்றும் சேலையூர் பகுதி சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. தாம்பரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் ரேவதி என்பவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக பொறுப்பு சார்பதிவாளராக பதவி வகித்து வருகிறார். சார் பதிவாளர் ரேவதி, இடத்தின் மதிப்பை குறைத்து பதிவு செய்ய ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கியதாக லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார்.
சிலர் பத்திரப்பதிவு செய்யும் நிலத்தை மதிப்பை குறைவாக காட்டி பத்திரப்பதிவு செய்ய விரும்புவார்கள். ஏனெனில் அங்கு நிலத்தின் வழிகாட்டிமதிப்பு அதிகமாக இருக்கும், அப்படியான நிலையில், குறைத்து பதிவு செய்ய சார் பதிவாளர்களை அணுகுவார்கள். அவர்கள் நியாயமான காரணமாக இருந்தால் அரசிடம் அனுமதி பெற்று அந்த பகுதியில் ஒரே மாதிரியான வழிகாட்டி மதிப்பை நிர்ணயம் செய்வார்கள்.

நிலத்தின் மதிப்பு
மற்றபடி வழிகாட்டி மதிப்பிற்கு கீழ் பத்திரங்களை பதிவு செய்ய முடியாது. எனினும் சிலர் சார் பதிவாளர்களின் துணையுடன் நிலத்தை குறைந்த மதிப்பாக காட்டி பத்திரப்பதிவு செய்து மோசடி செய்வதும் நடக்கிறது. இந்நிலையில் இடத்தின் மதிப்பை குறைத்து பதிவு செய்ய ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கியதாக தாம்பரம் பெண் சார்பதிவாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தாம்பரம் சார் பதிவாளர் ரேவதி
சென்னை தாம்பரம் அடுத்த ராஜகீழ்ப்பாக்த்தில் தான் தாம்பரம் மற்றும் சேலையூர் பகுதி சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. தாம்பரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக ரேவதி என்பவர் பொறுப்பு சார்பதிவாளராக பதவி வகித்து வருகிறார்.
இவரும், இவருக்கு கீழே பணிபுரியும் மற்றொரு பெண்ணும் சேர்ந்து தாம்பரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவுக்கு வரும் நபர்களிடம் அதிக அளவில் லஞ்சப்பணம் வாங்கி வருவதாக பல்வேறு புகார்கள் உயர் அதிகாரிகளுக்கு வந்த வண்ணம் இருந்ததாம். பத்திர பதிவுத்துறை உயர் அதிகாரிகள், இது தொடர்பாக ஆய்வு செய்து அவர்களை எச்சரித்து வந்ததாக கூறப்படுகிறது.
10 லட்சம் லஞ்சம்
இந்தநிலையில் தாம்பரம் அருகே நெடுங்குன்றம் பகுதியில் நிலம் பதிவு செய்ய வந்தவரிடம் நிலத்தின் மதிப்பை குறைத்து பதிவு செய்து தருவதாக கூறி ரூ.10 லட்சம் லஞ்சமாக தரும்படி சார்பதிவாளர் ரேவதி கேட்டாராம். அப்போது பத்திரம் பதிய வரும்போது ரூ.2 லட்சமும், பத்திரப்பதிவு முடிந்த பிறகு பத்திரத்தை வாங்கும்போது மீதி ரூ.8 லட்சமும் பணம் தருவதாக பத்திரம் பதிவு செய்ய வந்தவர் தெரிவித்துள்ளார்.
கையும் களவுமாக பிடிக்க முடிவு
ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத அவர், இதுகுறித்து சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். சார்பதிவாளரை கையும் களவுமாக பிடிப்பதற்காக ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை அவரிடம் கொடுத்து அதனை லஞ்சமாக கொடுக்கும்படி போலீசார் அறிவுறுத்தி அனுப்பினார்கள்.
2 லட்சம் லஞ்சம் வாங்கிய சார் பதிவாளர்
அதன்படி தாம்பரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச பணத்தை சார் பதிவாளர் ரேவதி அறிவுறுத்தலின்பேரில் பத்திரப்பதிவு பணிகள் செய்யும் பிரவீன் குமார் என்பவரிடம் கொடுத்தார்கள். அவர் ரூ.2 லட்சம் லஞ்ச பணத்தை வாங்கியதும், அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி. இமானுவேல் ஞானசேகரன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் பாய்ந்து சென்று சார்பதிவாளர் ரேவதி மற்றும் பிரவீன்குமார் ஆகிய 2 பேரையும் கையும் களவுமாக கைது செய்தனர்.
4 மணி நேரமாக விசாரணை
பின்னர் சுமார் 4 மணி நேரத்துக்கு மேலாக தாம்பரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக சார் பதிவாளர் ரேவதியை அழைத்து சென்றனர். இந்த சம்பவம் தாம்பரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications