தாம்பரத்துக்கு ஆபத்து.. வெள்ளத்தில் மூழ்கும்.. ராஜா பேச பேச.. திகைத்த அமைச்சர்.. சென்னையில் பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தாம்பரம் பகுதியில் மழைக்கால முன்னெச்சரிக்கை பணிகளை துரிதப்படுத்த வேண்டும் - விரிவுப்படுத்த வேண்டும் - விரைவுப்படுத்த வேண்டும் என்றெல்லாம் கோரிக்கைகள் எழுந்துள்ளன. அதிலும், நெடுஞ்சாலை துறையினர் அக்கறையின்றி செயல்படுவதாக, திமுக அமைச்சர் முன்னிலையிலேயே திமுக எம்எல்ஏ-க்கள் குற்றஞ்சாட்டியிருப்பது பரபரப்பை கூட்டி வருகிறது.

தலைநகர் சென்னையை பொறுத்தவரை, மழைக்காலம் வந்தாலே பெரிதும் பாதிக்கப்படக்கூடியது சென்னையின் புறநகர் பகுதிகள்தான்.. எனவேதான், மழைநீர் வடிகால் பணிகள் காரணமாக, தாம்பரம் - முடிச்சூர் சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் பலமுறை எழுந்து வருகிறது.

Tambaram Chennai Sub urban Areas

எனவேதான், மழைக்காலங்களில், மழை வெள்ள பாதிப்பு ஏற்படாமல் இருக்க, தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் அழகு மீனா, நிறைய நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

ஆய்வுக்கூட்டம்: இப்படிப்பட்ட சூழலில், பருவமழை தற்போது நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதையடுத்து, மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன..

அந்தவகையில், அமைச்சர் தா. மோ. அன்பரசன் தலைமையில், மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்துள்ளது.. இந்த கூட்டத்தில், செங்கல்பட்டு கலெக்டர், தாம்பரம் மாநகராட்சி ஆணையர், கவுன்சிலர்கள், காவல்துறை, தீயணைப்பு மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய எம்எல்ஏக்கள், அமைச்சர் முன்னிலையிலேயே கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.. "நெடுஞ்சாலைத் துறையினருக்கு மக்கள் மீது அக்கறையே இல்லை என்று பல்லாவரம் எம்எல்ஏ-வான இ.கருணாநிதியும் குற்றம்சாட்டினார்.

குற்றச்சாட்டுகள்: "பல்லாவரம் – துரைப்பாக்கம் சாலையில், கால்வாய் பணியை 2 மாதங்களில் முடித்துவிடுவோம் என கடமைக்காக சொல்லக்கூடாது.. பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்து, பொதுமக்களின் புகார்களை விரைந்து முடிக்க வேண்டும்" என்று செங்கல்பட்டு ஆட்சியர் அருண்ராஜ் கூறினார்.

ஆனால், ஆணையர் பாலச்சந்தர் பேசும்போது, "4.5 கோடியில் வெள்ளத்தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதால், இந்த ஆண்டு தாம்பரம் மழையால் பாதிக்கப்படாது" என்றார்..

பருவமழை: உடனே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, எம்எல்ஏ ராஜா பேசினார்.. "இப்படி திரையில் போட்டு காட்டுவதால் எந்தப் பலனும் இல்லை. மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினால் மட்டுமே, தாம்பரத்தில் வெள்ளப் பாதிப்பை தடுக்க முடியும். ஜிஎஸ்டி சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு கூறினால், அவர்கள் அதைவிட்டு மற்ற வேலைகளை தான் பார்க்கிறார்கள். நெடுஞ்சாலைத் துறையினர் மனிதாபிமானத்தோடு பணியாற்ற வேண்டும்

பருவமழை வேகமாக நெருங்கும் நிலையில் தாம்பரம் பகுதி மக்கள் இந்த வருடமும் வெள்ளத்துக்கு தப்ப முடியாது.. இந்த ஆண்டும் தாம்பரம் வெள்ளத்தால் பாதிக்கப்படும்.. அதை எதிர்கொள்ளத் மக்கள் தயாராக இருக்க வேண்டும்..

எம்எல்ஏ ஆவதற்கு முன்பே நான், இந்த தாம்பரம் நகராட்சி சேர்மனாக இருந்திருக்கிறேன்.. கடந்த 2015ம் ஆண்டு முதல் தாம்பரத்தில் ஏற்படும் வெள்ளபாதிப்புகளை கவனித்து கொண்டு வருகிறேன்.. ஒவ்வொரு வருடம் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டாலும், எல்லாமே தோல்வி அடைந்து விடுகிறது.. இந்த வருடம் தாம்பரம் வெள்ளத்தில் மூழ்கும்...

தாம்பரம்:
சூழ்நிலையை சமாளிப்பது குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்... ஒரு மாதத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி தயார் செய்ய வேண்டும்" என்று பேசிக் கொண்டே போனார்.

எம்எல்ஏ ராஜா பேச பேச, அங்கிருந்த அமைச்சர் மற்றும் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்து போனார்கள்.. காரணம், தலைநகர் மற்றும் அதன் சுற்றுப்புறங்கள் பருவமழையை சமாளிக்க, எந்நேரமும் தயாராக இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருக்கும் நிலையில், எம்எல்ஏ ராஜாவின் இந்த பேச்சு சலசலப்பை தந்துவருகிறது.. அதுவும் அமைச்சர் முன்னிலையிலேயே, திமுக எம்எல்ஏவின் இந்த பேச்சு சர்ச்சையை கூட்டிவருகிறது.

எம்எல்ஏ ராஜா: ஆனால், அதேசமயம், எம்எல்ஏ ராஜாவின் பேச்சு சரியென்றே பலரும் சொல்கிறார்கள்.. இதே பகுதியை சேர்ந்தவர் என்பதாலும், பல காலமாக தாம்பரம் பகுதியின் சூழ்நிலையை நேரடியாக பார்த்தவர் என்பதாலும், யதார்த்த நிலைமையையே ராஜா சொல்வதாகவும், மக்களை அலர்ட்டாக இருக்க சொல்வது தவறில்லையே? என்றம் ஆதரவாக சொல்கிறார்கள்.

அதுமட்டுமல்ல, கடந்த 2015ல் வந்த பெருவெள்ளத்திற்குப் பிறகு கால்வாய்கள் சுத்தம் செய்யப்பட்டும்கூட, கடந்த வருடம் மறுபடியும் தாம்பரத்தில் வெள்ளம் சூழ்ந்துவிட்டதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையை விரிவுப்படுத்த வேண்டும் என்றும் பலரும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

முடிச்சூர்: கடந்த மழைக்காலங்களில், முடிச்சூர் வரதராஜபுரம், தாம்பரம் போன்ற பகுதிகளில் அடையாறு ஆற்றின் கரையோர பகுதிகளில் உள்ள கரைகள் அகலப்படுத்தப்பட்டு, அதிக செலவில் ஆழப்படுத்தப்பட்டிருந்தன..

குறிப்பாக, முடிச்சூர் ஊராட்சிக்கு உட்பட்ட அமுதம் நகர், ராயப்பா நகரில் மக்கள் வருடந்தோறும் வெள்ளத்தால் பாதிக்கப்படுவதை தடுப்பதற்காக சிஎம்டிஏ. அதிகாரிகள் ஆய்வு செய்து சுமார் ரூ.4 கோடி செலவில் கால்வாய் அமைத்திருந்தனர்.. மேலும், அந்த பகுதி தண்ணீர், அடையாறு ஆற்றில் சென்று விழும்வகையிலும் வழிவகை செய்திருந்தனர்.

அடையாறு ஆறு: இவ்வளவு முயற்சிகள் எடுத்தும் எல்லாமே கடந்த டிசம்பர் மாதம் பெய்த வெள்ளத்தில் வீணாகிவிட்டது.. முடிச்சூர், வரதராஜபுரம் பகுதிகள், மறுபடியும் வெள்ளநீரில் மூழ்கி மிதந்தன.. இதற்கெல்லாம் காரணம், சரியான திட்டமிடல் இல்லாததுதான் என்கிறார்கள் அந்த பகுதி மக்கள்.. இதற்கு நிரந்தர தீர்வு வேண்டுமானால், அடையாறு ஆற்றை இன்னும் அகலப்படுத்தி ஆழப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+