சீமான் Vs வீரலட்சுமி- ’புது’ பிராது- 'புது’ கெடு! தலைமை ஆபீசை ‘தகர்க்க’ தலித் படை வரும் என வார்னிங்!
சென்னை: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும் தமிழர் முன்னேற்றப் படையின் தலைவர் வீரலட்சுமிக்கும் இடையேயான 'யுத்தம்' இப்போதைக்கு முடியவடையாது போலிருக்கிறது. தலித் மக்களை இழிவுபடுத்தியதாக சொல்லப்படும் விவகாரத்தை சீமானுக்கு எதிராக கையில் எடுத்துள்ளார் வீரலட்சுமி.
நடிகை விஜயலட்சுமி விவகாரத்தில் நாம் தமிழர் கட்சிக்கும் வீரலட்சுமிக்கும் இடையேயான மோதல் இன்னும் ஓயவில்லை. தற்போது திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து வீரலட்சுமி இன்று வெளியிட்ட வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜாதி ரீதியாக மக்களை பிளவுபடுத்தும் ஜாதியவாதி. பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள், மதரீதியாக மக்களை பிளவுபடுத்தும் மதவாதி. இந்த 2 பேரையும் எதிர்க்கிற இந்த வீரலட்சுமி ஒரு ஜனநாயகவாதி.

தலித்துகள் குறித்து இழிவான பேச்சு: மேடைகளில் நாம் தமிழர் கட்சியின் சீமான், மாமேதை அம்பேத்கர் பற்றி பேசுகிறார். அம்பேத்கரின் சித்தாந்தத்தை கொள்கைகளை மேடைகளில் வாய்கிழிய பேசுகிறார் சீமான். ஆனால் செயல்களில் நாம் தமிழர் கட்சி தொண்டர்களுக்கு ஜாதிய வன்மத்தை ஜாதி வெறியைத்தான் தூண்டிவிட்டு வளர்க்கிறார். இதற்கு ஆதாரமாக, ஆதி திராவிடர் மக்களை நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஒருவர் இழிவாக பேசியிருக்கிற வாட்ஸ் அப் வீடியோ பதிவு இருக்கிறது.

தாக்குதலை தடுத்து நிறுத்திட்டேன்: இதனால் கொந்தளித்து போன திருவள்ளூர் மாவட்ட ஆதி திராவிடர் மக்கள், சென்னை போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகம் மீது நேற்று இரவோடு இரவாக தாக்குதல் நடத்த முயற்சித்தனர். ஆனால் நான் தலையிட்டு சட்டத்தை கையில் எடுக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டிருக்கிறேன். தற்போது திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் இது தொடர்பாக புகார் கொடுத்திருக்கிறோம். இந்த புகார் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறோம்.

அடிச்சு துவம்சம் பண்ணிடுவாங்க: அத்துடன் சீமானும் அவரது தம்பிகளும் அடுத்த 15 நாளில் ஆதி திராவிடர்களை இழிவாக பேசியதற்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். அப்படி கேட்கவில்லை எனில் சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த ஆதி திராவிடர் மக்கள் சென்னையில் உள்ள நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகத்தை அடித்து துவம்சம் செய்திடுவார்கள். அப்படி ஒரு கலவரம் வருவதற்கான முழு பொறுப்பும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்குதான் உண்டு. அப்புறம் அவங்க வந்து உங்க அலுவலகத்தை அடிச்சு ஏதேனும் செய்துவிட்டால் நாங்கள் பொறுப்பு அல்ல. இவ்வாறு வீரலட்சுமி தெரிவித்துள்ளார்.

-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications