மறைந்தார் மகேந்திரன்.. தமிழ் சினிமா உலகிற்கு பேரிழப்பு!
Recommended Video

சென்னை: பிரபல திரைப்பட இயக்குனர் மகேந்திரன் காலமானார். அவருக்கு வயது 79.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவர் மகேந்திரன். காலம் கடந்தும் பெயர் சொல்லக்கூடிய பல்வேறு திரைப்படங்களை அவர் தமிழ் கூறும் நல் உலகிற்கு வழங்கியவர்.

மகேந்திரனின் முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள், ஜானி, மெட்டி போன்ற திரைப்படங்கள் இன்றும் ரசிகர்கள் மனதில் பசுமையாக நிழலாட கூடியவை. அந்த காலகட்டத்தில் இவை புதிய பரிணாமத்தை வழங்கிய திரைப்படங்களாக பார்க்கப்பட்டன.
DIRECTOR MAHENDRAN PASSED AWAY THIS MORNING. pic.twitter.com/usCPXX7Qsr
— Dir.JohnMahendran (@johnroshan) April 2, 2019
சமீப காலத்தில் நடிகராகவும் அவர் ஜொலிக்க ஆரம்பித்து இருந்தார். விஜய் நடிப்பில் வெளியாகி இருந்த தெறி திரைப்படம், ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான பேட்ட, உதயநிதி நடித்துள்ள நிமிர் போன்ற திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் மகேந்திரன் நடித்திருந்தார்.
இந்த நிலையில் கடந்த வாரம் மகேந்திரனுக்கு சிறுநீரகப் பிரச்சினை ஏற்பட்டதால், சென்னையில் உள்ள மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.
ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலையில் அவரது உயிர் பிரிந்தது. தமிழ் திரையுலகத்திற்கும், ரசிகர்களுக்கும் மகேந்திரனின் இறப்பு பேரிழப்பாக பார்க்கப்படுகிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications