சமூக நீதி சினிமா..கம்யூனிஸ்டாக நடித்திருக்கிறேன்- அரங்கம் அதிர உதயநிதி , வடிவேலு கலக்கும் மாமன்னன்!
சென்னை: தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நகைச்சுவை புயல் வடிவேலு இணைந்து கலக்கி இருக்கும் திரைப்படம் இயக்குநர் மாரி செல்வராஜின் மாமன்னன். இத்திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் இயக்குநர் வெற்றி மாறன் சமூக நீதி பற்றி பேசினார். நடிகை கீர்த்தி சுரேஷ், தாம் ஒரு கம்யூனிஸ்ட் பாத்திரத்தில் நடித்திருக்கிறேன் என்றார்.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்ற மாமன்னன் திரைப்பட இசைவெளியீட்டு விழாவில் பிரபலங்கள் பேசியதாவது:
நடிகை கீர்த்தி சுரேஷ்: நீண்ட இடைவேளைக்குப் பின்னர் பெரிய டீமுடன் தமிழில் வேலை பார்த்துள்ளேன். இந்த படத்தில் ஒரு கம்யூனிஸ்ட் பாத்திரத்தில் நடித்திருக்கிறேன். உதயநிதி, வடிவேலுவுடன் இணைந்து நடித்தது ஜாலியாக மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் படம் சீரியஸாக இருக்கும்.

இயக்குநர் வெற்றி மாறன்: சமூக நீதியை பேசுகிற படங்களை எடுத்து, சமூக நீதிக்காக போராடுவதும், சமூக நீதிக்கு எதிரானவர்களை எதிர்ப்பதும் தமிழ்நாட்டில் மட்டும் தான். அரசியல் ரீதியான படங்களை வைத்து வணிக ரீதியான லாபத்தை ஈட்டுவது என்பது தமிழ்நாட்டில் மட்டும் தான். மாமன்னன் கதாப்பாத்திரத்தை வடிவேலு நடித்திருக்கிறார். நாம் எல்லோரும் அவருடைய காமெடியை ரசித்திருப்போம். அவரை இப்போது சீரியஸான நடிப்பில் பார்க்கப்போகிறோம். வடிவேலுவின் நிலப்பரப்பை மையப்படுத்திய வசனங்களால் ஒரு ஊரை அனைத்து இடங்களுக்கும் கொண்டு சேர்த்திருக்கிறார். சமூக நீதியை சினிமாவை பேசியதால் தான் நீதி கிடைக்கிறது.
நடிகர் சிவகார்த்திகேயன் பேசுகையில், மாரி செல்வராஜ் எடுத்த படம் அனைத்துமே சிக்சர் தான். பரியேறும் பெருமாள், மாரி செல்வராஜ் சிறந்த இயக்குனர் என்று உலகத்துக்கு சொன்னது. இன்று வெற்றி மாறன் சாருக்கு கிடைத்த வரவேற்பு ஊக்கமளிக்கிறது. மாற்று சினிமாக்கான முயற்சியை எடுத்து கைத்தட்டல்களுக்குச் சொந்தமாகியிருக்கிறார். அதை தொடங்கி வைத்தது கமல் சார் தான் என்றார்.
இயக்குநர் மிஷ்கின் பேசுகையில், மாமன்னன் போன்ற படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க வேண்டும். சைக்கோ போன்ற படங்களில் நடிக்க கூடாது என்றார்.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் பங்கேற்றார். இயக்குநர்கள் மிஷ்கின், தியாகராஜன் குமாரராஜா, இசை அமைப்பாளர் ஏஆர் ரகுமான், நடிகர்கள் வடிவேலு, சிவ கார்த்திகேயன், சூரி, இயக்குநர்கள் வெற்றிமாறன், பா.ரஞ்சித் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
-
சிங்கப்பெண் நிகழ்ச்சியும் தள்ளி வச்சுட்டீங்க.. சட்டம் ஒழுங்குக்கும் அவகாசம் வேணுமா? விஜய்யை விமர்சித்த உதயநிதி -
சனாதனம் இருக்கக்கூடாதுனா பெற்றோரை துரத்திவிட வேண்டும்.. முடியுமா? உதயநிதியை தாக்குகிறாரா அர்ஜுன்? -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications