தாத்தா ஆகப் போறாரு கிங் காங்! பேரனைப் பெற்றுக் கொடுக்கப் போகும் மகள்! மகிழ்சி பொங்க பகிர்ந்த செய்தி
சென்னை: தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக நகைச்சுவை நடிகராக பயணித்து வரும் நடிகர் கிங் காங் ஒரு மகிழ்ச்சியான தகவலை பகிர்ந்திருக்கிறார். கடந்த ஆண்டு அவரது மகளுக்கு திருமணம் நடைபெற்ற நிலையில் தற்போது அவர் கர்ப்பமாக இருப்பதாகவும், தான் தாத்தா ஆகப்போகும் தகவலை சொல்லி இருக்கிறார். இதை எடுத்து பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் திரையுலகில் நீண்ட காலமாக நகைச்சுவை நடிகராக ரசிகர்களை சிரிக்க வைத்தவர் கிங் காங். சங்கர் மகாலிங்கம் என்பது அவரது இயற்பெயர். சென்னையைச் சேர்ந்த இவர், பிறந்தபோதே வளர்ச்சி குறைபாடு பாதிப்புடன் இருந்தாலும், அதை ஒருபோதும் தடையாக நினைக்காமல், அதைத் தனது பலமாக மாற்றிக் கொண்டு சினிமாவில் கால்பதித்தவர்.
"ஊரை தெரிஞ்சுகிட்டேன்" என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் காமெடி நடிகராக அறிமுகமான கிங் காங், அதனைத் தொடர்ந்து "அதிசய பிறவி" படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் நடித்தார். அந்தப் படத்தில் இடம்பெற்ற பிரேக் டான்ஸ் காமெடி காட்சி இன்றளவும் ரசிகர்களால் ரசிக்கப்படும் ஒன்றாக இருக்கிறது.

நடிகர் கிங் காங்
தனது உயரக் குறைபாட்டையே தனித்த அடையாளமாக மாற்றிக் கொண்டு, கிழக்குக் கரை, சாமுண்டி, நாம் இருவர் நமக்கு இருவர், பாஞ்சாலங்குறிச்சி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். விவேக், வடிவேல் போன்ற முன்னணி நகைச்சுவை நடிகர்களுடன் இணைந்து நடித்ததன் மூலம் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். கிங் காங் தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ள நிலையில், அவரது மகள் கீர்த்தனாவுக்கான திருமணம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் சென்னையில் நடைபெற்றது.
கிங் காங் மகள் திருமணம்
இந்தத் திருமணத்திற்காக, அரசியல் பிரபலங்கள் முதல் திரை பிரபலங்கள் வரை பலரின் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று அழைப்பிதழ் வழங்கியிருந்தார் கிங் காங். நடிகர் ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, டி.ராஜேந்தர் உள்ளிட்ட பலரையும் நேரில் சந்தித்து திருமண அழைப்பை வழங்கியது அந்த நேரத்தில் கவனம் பெற்றது. கீர்த்தனா - நவீன் தம்பதியின் திருமணம் பெசன்ட் நகர் முருகன் கோவிலில் நடைபெற்ற நிலையில், குடும்பத்தினர், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நடிகர் முத்துக்காளை உள்ளிட்ட சில திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
கிங் காங் குடும்ப மகிழ்ச்சி
திருமண வரவேற்பு சென்னையில் நடைபெற்றாலும், பெரிய நடிகர்கள் பலர் இதில் கலந்து கொள்ளவில்லை என்பது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியது. இதையடுத்து, சில நெட்டிசன்கள் ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நடிகர்களை விமர்சித்தும் பதிவுகள் வெளியிட்டனர். இந்தச் சூழ்நிலையில், தற்போது கிங் காங் தனது வாழ்க்கையில் இன்னொரு மகிழ்ச்சியான தருணத்தை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். அவர் விரைவில் தாத்தாவாகப் போகிறார்.
பூமுடிப்பு நிகழ்ச்சி
தனது மகள் கீர்த்தனாவின் 5ஆம் மாத பூமுடிப்பு நிகழ்ச்சியின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ள கிங் காங், அந்தப் பதிவின் மூலம் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். இந்த செய்தியை அறிந்த ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் என பலரும் நடிகர் கிங் காங் குடும்பத்திற்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications