சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தேர்தல் வாக்குறுதிகளை பற்றி திமுக வாய் திறக்கவில்லை! தமிழ் மாநில காங்கிரஸ் பாய்ச்சல்!

Google Oneindia Tamil News

சென்னை: தேர்தல் வாக்குறுதிகளை பற்றி திமுக வாய் திறக்கவில்லை என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.

கடந்த 16 மாத திமுக ஆட்சியில் விலை உயர்வு மட்டுமே சாதனையாக உள்ளதாக விமர்சித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞரணிச் செயலாளர் யுவராஜ் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது;

திமுக கூட்டணியில் ரீ எண்ட்ரிக்கான சாத்தியங்கள் கிடைக்குமா? டெல்லியை வைத்து கணக்கு போடுகிறதா பாமக?திமுக கூட்டணியில் ரீ எண்ட்ரிக்கான சாத்தியங்கள் கிடைக்குமா? டெல்லியை வைத்து கணக்கு போடுகிறதா பாமக?

 தேர்தல் வாக்குறுதி

தேர்தல் வாக்குறுதி

மக்கள் எந்த வாக்குறுதிகளை நம்பி திமுக விற்கு வாக்களித்தார்களோ அந்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. உதாரணமாக, திமுகவின் வாக்குறுதிகளில் நீட் தேர்வை ரத்து ஒரே கையெழுத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என மேடைக்கு மேடை தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக தலைவர்களால் பேசப்பட்டது. ஆனால் நீட் தேர்வு ரத்து செய்யப்படவில்லை. 30 வயதுக்கு உட்பட்ட தமிழகக் கல்லூரி மாணவர்களின் கல்விக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இது குறித்து அரசு வாய் திறக்கவில்லை.

என்னாச்சு வாக்குறுதி

என்னாச்சு வாக்குறுதி

கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட 5 சவரனுக்கு உட்பட்ட நகைகள் ரத்து செய்யப்படும் என தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்தவுடன் பல்வேறு நிபந்தனைகளை விதித்து கிட்டத்தட்ட 75 விழுக்காடு பயனாளிகளின் நகை கடன்களை தள்ளுபடி செய்ய முடியாது என அறிவித்தது. மற்றொரு வாக்குறுதி மாதம் ஒரு முறை மின் கட்டணம் செலுத்தும் முறையை கொண்டுவரப் போவதாக வாக்குறுதி அளித்தவர்கள் இப்போது அதைப்பற்றி வாய் திறக்க மறுக்கிறார்கள்.

நிர்வாகத் திறமையின்மை

நிர்வாகத் திறமையின்மை

திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மை காரணமாக, அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துக் கொண்டே செல்கிறது, கட்டுமான பொருள் தொடங்கி சொத்து வரி குடிநீர் மின்சார கட்டணம் ஆவின் பொருட்கள் விலை உயர்வு என எல்லா கட்டணமும் உயர்ந்து விட்டது. பிரதமர் விலையை குறைத்தும் தமிழகத்தில் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வில்லை. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. கடந்த 16 மாத திமுக ஆட்சியில் விலை உயர்வு மட்டுமே சாதனையாக உள்ளது.

பண கஷ்டம்

பண கஷ்டம்

கடந்த 16 மாத திமுக ஆட்சியில் விலை உயர்வு மட்டுமே சாதனையாக உள்ளது. தமிழக முதல்வருக்கு தன்னை விளம்பர படுத்தி கொள்வதிலேயே ஆர்வமாக உள்ளார் . தமிழகத்தில் வெளியாகும் அனைத்து திரைப்படங்களையும், முதல்வர் மகன் உதயநிதியின் நிறுவனம் வாங்கி வியபாரம் செய்கிறது. பாவம் அவர்களுக்கு அவ்வளோ பண கஷ்டம். அவர்கள் குடும்பமே கதை, திரைக்கதை வசனம் எழுதியவர்கள் என்பதால், மக்களை எப்படி எல்லாம் ஏமாற்றலாம் என்று யோசிக்கின்றனர். இனிவரும் காலங்களிலாவது வாக்களித்த மக்களுக்கு வஞ்சனை செய்யாமல் மக்களை வாட்டி வதைக்கும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மக்களுக்கு உற்ற அரசாக விளங்க வேண்டும் என தமாகா இளைஞர்களின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

English summary
Tamil maanila Congress Party has criticized the DMK for not being open mouth about its election promises.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X