ரூ.1000 கலைஞர் மகளிர் உரிமை தொகை.. முதல் மாத பணம் எப்போது வங்கி கணக்கில் வரும்? ஸ்டாலின் மாஸ் முடிவு
சென்னை: நேற்று தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது, இந்த அமைச்சரவை கூட்டத்தில் கலைஞர் உரிமை தொகை திட்டம் தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்டது.
இது தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சர் "கலைஞர் மகளிர் உரிமை திட்டம்", அவர்கள் அதற்கான அறிவித்திருக்கக்கூடிய, முகாம்கள் சென்னையிலே நாளை துவங்கவிருக்கிறது. மற்ற இடங்களில் எல்லாம் திங்கள் கிழமை முதல் இருந்து அந்த முகாம்கள் துவங்கவிருக்கிறது.

இந்த முகாம்கள் ஏறத்தாழ கட்டங்களாக நடத்தப்படவிருக்கிறது இவைகள் ஆங்காங்கே அலகாக (Unit) இருக்கக்கூடிய நியாய விலைக்கடைகள் வைத்துக்கொண்டு முதல் கட்டமாக இருக்கக்கூடிய இந்த முகாம்களில் ஏறத்தாழ 21,031 முகாம்கள் இரண்டாம் கட்டமாக 14,894 ஒட்டுமொத்தமாக 35,925 முகாம்கள் ஆகஸ்ட் மாதம் இறுதிக்குள்ளாக மூன்று கட்டமாக நடக்கவிருக்கிறது. இந்த முகாம்களில் தனியாக எல்லோருக்கும் டோக்கன் வழங்கி விண்ணப்பப்படிவங்கள் வழங்கக்கூடிய அந்தப் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது.
ஏறத்தாழ 50 இலட்சம் பேர்களுக்கு வழங்கியிருக்கிறார்கள். தொடர்ந்து அந்தப் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்த முகாம்களையும் மிகவும் விரிவான வகையில் எந்த குழப்பமும் இல்லாத வகையில், சிறந்த முறையில் ஒவ்வொரு முகாம்களையும் நடத்துவதற்கு முகாம் அலுவலர்கள், இன்று பல அலுவலர்களையும், தன்னார்வலர்களையும் நியமித்து இந்தப் பணிகள் மிக சிறப்பாக செய்யப்பட்டிருக்கிறது என்பதையும் நான் உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்., என்று குறிப்பிட்டு உள்ளார்.
பெண்களுக்கு மாதம் ரூ1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் செப்டம்பர் 15-ந் தேதி அண்ணா பிறந்த நாள் முதல் வழங்கப்படும் என தமிழ்நாடு முதலவர் ஸ்டாலின் அறிவித்து இருந்தார். இதற்கான விண்ணப்பங்கள் இரண்டு நாட்களாக வழங்கப்படுகின்றன. அதேபோல் இதற்கான டோக்கனும் இரண்டு நாட்களாக வழங்கப்படுகின்றன.
இதற்காக வழங்கப்படும் விண்ணப்பத்தில் பல்வேறு அடிப்படை விவரங்கள் கேட்கப்பட்டு உள்ளது. அதாவது பெயர், போன் எண், ஆதார் எண், படிப்பு, வருமானம் என்று பல்வேறு விவரங்கள் கேட்கப்பட்டு உள்ளன. இன்னொரு பக்கம் இதனுடன் டோக்கன் ஒன்று வழங்கப்படுகிறது.இந்த டோக்கன் மிக முக்கியம் ஆகும். அதில் உங்களிடம் கொடுப்பதும் அப்ளிகேஷனில் நம்பர் இருக்கும். அதோடு சேர்ந்து ஒரு நம்பர் இருக்கும். இதுதான் டோக்கன் நம்பர் ஆகும். மேலும் டோக்கனில் உங்கள் பெயர் இருக்கும்.
பின்னர் நீங்கள் ரேஷன் கடைக்கு அல்லது முகாமிற்கு எந்த நாளில், எந்த நேரம் செல்ல வேண்டும் என்று நேரம் கொடுக்கப்பட்டு இருக்கும். எந்த முகாமிற்கு செல்ல வேண்டும் என்றும் விவரங்கள் இருக்கும். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் அந்த முகாமிற்கு குறிப்பிட்ட தேதியில் டோக்கனுடன் செல்ல வேண்டும்.உடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை எடுத்து செல்ல வேண்டும். அதோடு தேவையான ஆவணங்கள், ஆதார் இணைக்கப்பட்ட போன், ஆதார் கார்டு ஆகியவற்றை கொண்டு செல்ல வேண்டும்.
எப்போது பணம் வரும்: இந்த நிலையில் ரூ.1000 கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் முதல் மாத பணம் எப்போது வங்கி கணக்கில் வரும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி பெண்களுக்கு மாதம் ரூ1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் செப்டம்பர் 15-ந் தேதி அண்ணா பிறந்த நாள் முதல் வழங்கப்படும் என தமிழ்நாடு முதலவர் ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.
திட்டம் தொடங்கப்பட்டு 5 நாட்களில் அதாவது செப்டம்பர் 20ம் தேதி முதல் மாத தொகை வங்கி கணக்கில் செலுத்தப்படும். நேரடியாக வங்கி கணக்கில் மக்களுக்கு பணம் செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications