நாளை வெளியாகிறது பிளஸ் 2 ரிசல்ட்.. மாணவர்கள், பெற்றோர்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான 10 பாயிண்ட்!
சென்னை: தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு வெளியாகிறது. சென்னையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, +2 தேர்வு முடிவுகளை வெளியிட உள்ளார். +2 தேர்வு முடிவுகள் வெளியாகும் நிலையில் மாணவ மாணவிகள், பெற்றோர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்களைப் பார்க்கலாம்.
தமிழக அரசின் மாநில பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளில், பிளஸ் 2 படித்த மாணவர்களுக்கு, கடந்த மார்ச் 3 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை பொதுத்தேர்வுகள் நடந்தன. மொத்தம், 8.21 லட்சம் மாணவ, மாணவிகள் மற்றும் தனித்தேர்வர்கள் பிளஸ் 2 தேர்வை எழுதிவிட்டு, முடிவுக்காக காத்திருக்கின்றனர்.

நாளை ரிசல்ட்
தேர்வு முடிவுகள் மே 9 ஆம் தேதி வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிந்த நிலையில், அறிவிக்கப்பட்ட தேதிக்கு ஒருநாள் முன்னதாக, நாளை காலை 9 மணிக்கு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன.
எப்படி ரிசல்ட் பார்ப்பது?
இந்த தேர்வு முடிவுகளை https://results.digilocker.gov.in, www.tnresults.nic.in என்ற இணையதள முகவரி மூலம் தெரிந்து கொள்ளலாம். இந்த இணையதளங்களில் தேர்வு பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளிட்டு தெரிந்து கொள்ளலாம். இதுதவிர படித்த பள்ளி, தொலைபேசி ஆகியவற்றின் வழியாகவும் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
தேர்வு எழுதிய அனைவருக்கும் அவர்களின் மொபைலுக்கு எஸ்எம்எஸ் மூலம் தேர்வு முடிவுகள் தனித்தனியாக அனுப்பி வைக்கவும் பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. 12 ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் பட்டியல், அந்தந்த பள்ளிகளில் சில நாட்களில் வழங்கப்படும்.
மாணவர்கள் கவனிக்க
1. தேர்வு எழுதியிருக்கும் மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். தேர்வு முடிவுகள் எப்படி இருந்தாலும் மாணவ, மாணவிகள் மன உறுதியை ஒருபோதும் இழக்கக்கூடாது.
2. எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காவிட்டாலும் வருத்தப்படாமல் அடுத்து செய்யவேண்டிய வேலைகளைப் பார்க்க வேண்டும். மதிப்பெண்கள் அதிகம் வரும் என உறுதியாகத் தெரிந்தால் மறு மதிப்பீடு, மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்.
3. மதிப்பெண்கள் நீங்கள் படிக்க வேண்டிய படிப்பையும், கல்லூரியையும் தீர்மானிக்கும் ஒரு தவிர தவிர உங்கள் வாழ்க்கையை தீர்மானிக்கும் விஷயம் கிடையாது.
4. கிடைக்கும் மதிப்பெண் மூலம் என்ன உயர்கல்வி படிக்கலாம், எங்கு படிக்கலாம் என்பதை சரியான வழிகாட்டிகள் மூலம் உங்களுக்கான பாதையை தீர்மானிக்கவும்.
5. உங்களுக்கு என்ன படிக்க விருப்பமோ, அதற்கு யார் சரியான வழிகாட்டல்களை கொடுக்கிறார்களோ அதனைப் பொறுத்து முடிவெடுக்கவும்.
6. பொருளாதாரம், குடும்ப சூழல் ஆகியவற்றையும் கருத்தில் கொண்டு உங்களுக்கான உயர்கல்வியை தீர்மானிக்கவும்.
பெற்றோர்கள் கவனிக்க
7. மாணவ, மாணவிகள் எவ்வளவு மதிப்பெண் எடுத்தாலும் அவர்களை திட்டாமல், பார்த்துக் கொள்ளலாம் என ஆறுதல் அளிக்கும் வகையில் பேசுவது நல்லது.
8. மாணவர்களுக்கு சரியான முறையில் வழிகாட்டி உயர்கல்வியையும் எதிர்காலத்தையும் திட்டமிடுங்கள்.
9. கலை அறிவியல், மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட துறைகள் மூலம் என்ன படிக்கலாம், எந்தப் படிப்புக்கு எப்படி வேலை கிடைக்கும் என வழிகாட்டல்களை கொடுக்கவும்.
10. தேர்வு முடிவுகளை ஒப்பிட்டு மாணவ, மாணவிகளை மன அழுத்தத்துக்கு உட்படுத்திவிடாதீர்கள்.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications