"தி கேர்ள்ஸ்".. இந்த வருடமும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவிகள்தான் டாப்.. சொதப்பிய மாணவர்கள்!
சென்னை: 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் எல்லா வருடம் போல இந்த வருடமும் மாணவர்களை விட மாணவிகள் இந்த ஆண்டும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 8,51,303 மாணவ, மாணவிகள் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதினர். தமிழ்நாட்டில் மட்டும் 8,36,593 மாணவ, மாணவிகள் தேர்வை எழுதினர். இந்த முறை 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் மொழித்தேர்வை எழுதவில்லை.

இதையடுத்து அவர்களை நேரில் சந்தித்து மற்ற தேர்வுகளை எழுத வைப்பதற்காக ஆசிரியர்கள், பள்ளி கல்வித்துறையினர் தீவிரமாக முயற்சி செய்தனர். ஆனாலும் பலர் தேர்வு எழுத வர மறுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து விடைத்தாள்கள் திருத்தும் மையங்களுக்கு எடுத்து செல்லப்பட்டு பாதுகாப்பாக திருத்தப்பட்டன.
திருத்தப்பட்ட வினாத்தாள் மதிப்பெண்கள் இதையடுத்து தொகுக்கப்பட்டது. பின்னர் அவற்றை தேர்வுத்துறை அதிகாரிகள் சரிபார்த்து உள்ளனர்.
பின்னர் இறுதி மதிப்பெண்கள் தேர்வுத்துறையின் இணையதளங்களில் பதிவேற்றப்பட்டது. இதையடுத்து www.dge.tn.gov.in, www.tnresults.nic.in, www.dge.tn.nic.in ஆகிய இணையதளங்கள் இன்று காலை லைவ் செய்யப்பட்டது. இந்த இணைய பக்கங்கள் மூலமாக தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்துகொள்ளலாம்.
இன்று காலை 9 மணிக்கு வெளியிடப்பட வேண்டிய மதிப்பெண்கள் கொஞ்சம் தாமதமாக 9.55 க்கு வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் 92.67 சதவிகிதம் பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் எல்லா வருடம் போல இந்த வருடமும் மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பிளஸ் 2 பொதுத்தேர்வில் 94.03 சதவிகிதம் மாணவ - மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மொத்தம் தேர்வு எழுதியவர்களில் மாணவிகள் 96.38 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர்.
மாணவர்கள் 91.45 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழ்நாட்டில் 326 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 100% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மொத்த தேர்ச்சியில் 97.85% பெற்று விருதுநகர் முதலிடம் பிடித்து உள்ளது.
அரசு பள்ளிகள் தேர்ச்சியில் 96.45% பெற்று திருப்பூர் முதலிடம் பிடித்து உள்ளது.
12ம் வகுப்பு தேர்வில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் 89.20% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்த தேர்வு முடிவுகளை மாணவர்களின் செல்போன் எண்களுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த தேர்வில் சதம் அடித்தவர்கள் எண்ணிக்கை பின்வருமாறு:
1. தமிழ் 2
2. ஆங்கிலம் 12
3. இயற்பியல் - 812
4. வேதியியல் - 3909
5உயிரியல் - 1494
6.கணிதம் - 690
7.தாவரவியல் - 340
8 விலங்கியல் - 154
9. கணினி அறிவியல்- 4618
10. வணிகவியல் - 5678
11. கணக்குப் பதிவியல் - 6573
12 பொருளியல் - 1760
13. கணினிப் பயன்பாடுகள் - 4051
14. வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் - 1334
கடந்த மே-2022 பொதுத்தேர்வில் ஏதேனும் ஒரு பாடத்தில் 100
மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை : 23,957.
இந்தாண்டு மார்ச் / ஏப்ரல் 2023 பொதுத்தேர்வில் ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை. 32,501.












Click it and Unblock the Notifications