நீண்ட நாளைக்கு பிறகு தமிழகத்தில் ஷாக் மாற்றம்.. சரிந்தது டிஸ்சார்ஜ் கேஸ்கள்.. உயர்ந்தது கொரோனா
சென்னை : தமிழகத்தில் செப்டம்பர் 9 ம் தேதி மாலை நிலவரப்படி ஒரே நாளில் 1,596 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேநேரம் கொரோனா பாதிப்பில் இருந்து 1,534 பேர் ஒரே நாளில் மீண்டனர். மீண்டவர்கள் எண்ணிக்கையை விட, பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. நீண்ட நாளைக்கு பிறகு அதிர்ச்சிகரமான இந்த மாற்றம் நடந்துள்ளது.
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் செப்டம்பர் 9 ம் தேதியான இன்று கொரோனா தொற்றால் 1,596 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 26,28,961 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் செப்டம்பர் 9 ம் தேதியான இன்று கொரோனா தொற்றால் 1,596 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதித்தவரகளின் எண்ணிக்கை 26,28,961 ஆக உயர்ந்துள்ளது.

எவ்வளவு
அதேநேரம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 1,534 பேர் ஒரே நாளில் மீண்டனர். இதனால் ஒட்டுமொத்தமாக கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 25,77,646 ஆக உயர்ந்துள்ளது.

உயிரிழப்பு எவ்வளவு
தமிழகத்தில் கொரோனா காரணமாக செப்டம்பர் 9ம் தேதி மாலை நிலவரப்படி 21 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதனால் இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 35,094 ஆக உயர்ந்துள்ளது.

சரிந்தது
தமிழகத்தில் தற்போதைய நிலையில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிரடியாக குறைந்து 16 ஆயிரத்திற்கு சரிந்துள்ளது . தமிழகத்தில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 16,180 ல் இருந்து 16,221 ஆக சரிந்தது. கொரோனா பாதிப்பு சிறிய அளவில் உயர்ந்து வருகிறது. இதனால் ஆக்டிவ் நோயாளிகள் எண்ணிக்கையில் பெரிய மாற்றம் ஏற்படவில்லை. இதனிடையே மீண்டவர்கள் எண்ணிக்கையை விட, பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. நீண்ட நாளைக்கு பிறகு அதிர்ச்சிகரமான இந்த மாற்றம் நடந்துள்ளது

எவ்வளவு
தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக கோவையில் 224 பேரும், சென்னையில் 186 பேரும், ஈரோட்டில் 130 பேரும், செங்கல்பட்டில் 108 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் கோவையில் மட்டும் அதிகமாக 2165 பேர் உள்ளனர். அதை தொடர்ந்து சென்னை, ஈரோடு, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications