தமிழகத்தில் இன்று 1916 பேருக்கு கொரோனா.. அதிகரிக்கும் ஆக்டிவ் கேஸ்கள்..எப்படி இருக்கிறது மாவட்டங்கள்
சென்னை : தமிழகத்தில் கொரோனா தொற்றால் மேலும்1916 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேநேரம் கொரோனா பாதிப்பில் இருந்து 1866 பேர் ஒரே நாளில் மீண்டனர்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வந்தது. ஆனால் தற்போது மீண்டும் மெதுவாக உயர்ந்து வருகிறது. குணம் அடைபவர்களின் எண்ணிக்கையைவிட பாதிப்பவரகளின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
தமிழகத்தில் ஆகஸ்ட் 14ம் தேதி நிலவரப்படி கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 1916 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதித்தவரகளின் எண்ணிக்கை 25,86,885 ஆக உயர்ந்துள்ளது.

தேறியவர்கள்
அதேநேரம் கொரோனா பாதிப்பில் இருந்து 1,866 பேர் ஒரே நாளில் மீண்டனர். இதனால் ஒட்டுமொத்தமாக கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 25,31,962 ஆக உயர்ந்துள்ளது.

கொரேனா உயிரிழப்பு
தமிழகத்தில் கொரோனா காரணமாக ஒரே நாளில் 34 பேர் மரணம் அடைந்துள்ளனர்.இதனால் இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 34,496 ஆக உயர்ந்துள்ளது.

நேயாளிகள் அதிகரிப்பு
தமிழகத்தில் தற்போதைய நிலையில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது தமிழகத்தில் நேற்று 20,411 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அந்த எண்ணிக்கை 20,427 ஆக உயர்ந்துள்ளது.

சிசிச்சை எவ்வளவு
தமிழகத்தில் அதிகபட்சமாக கோவையில் 223 பேரும். சென்னையில் 219 பேரும், ஈரோட்டில் 185 பேரும், சேலத்தில் 130 பேரும், செங்கல்பட்டில் 116 பேரும், தஞ்சாவூரில் 112 பேரும், திருப்பூரில் 94 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களில் 100க்கும் கீழாகவே பாதிப்பு உள்ளது. சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை கோவையில் மட்டும் அதிகமாக 2380 பேர் உள்ளனர். சென்னையில் இந்த எண்ணிக்கை 2112ஆகவும், ஈரோட்டில் 1800 ஆகவும். செங்கல்பட்டில் 1193 ஆகவும், தஞசாவூரில் 1078 ஆகவும் உள்ளது.












Click it and Unblock the Notifications