தமிழகத்தில் கொரோனா.. தஞ்சாவூரில் ஒரே நாளில் 23 பேர் மரணம்.. 'கோவையை முந்திய ஈரோடு'
சென்னை : தமிழகத்தில் இன்று ஒரே நாளில் . கொரோனா தொற்றால் 4,481 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 102 பேர் பலியாகி உள்ளனர். அதிகபட்சமாக தஞ்சையில் 23 பேர் பலியாகி உள்ளனர்.
தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று 5044 பேர் மீண்டனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 38,191ல் இருந்து 37526 ஆக குறைந்துள்ளது.
சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 4,481 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 24,84,177 ஆக உயர்ந்துள்ளது.

மொத்த பாதிப்பு
தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இன்று மட்டும் 5,044 பேர் மீண்டுள்ளனர். இதனால் இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 24,13,930 ஆக உயர்ந்துள்ளது. தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்புடன் 37,526 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கொரோனா மரணங்கள்
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 102 பேர் பலியாகி உள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32,721 ஆக உயர்ந்துள்ளது. இன்று அதிகபட்சமாக தஞ்சையில் 23 பேர் பலியாகி உள்ளனர். அதற்கு அடுத்தபடியாக கோவையில் 10 பேரும், வேலூரில் 7 பேரும், சேலத்தில் 5 பேரும் பலியாகி உள்ளனர்.

ஈரோட்டிலும் உயர்வு
தமிழகத்தில் அதிகபட்சமாக கோவையில் இன்று 498 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஈரோட்டில் 411 பேருக்கும், சேலத்தில் 279 பேருக்கும், சென்னையில் 249 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருப்பூரில் 256 பேருக்கும், தஞ்சாவூரில் 248 பேருக்கும், திருச்சியில் 198 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு முதலிடம்
தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்புடன் 37,526 பேர் சிகிச்சை பெறுகிறார்கள். அதிகபட்சமாக ஈரோட்டில் 4080 பேர் சிகிச்சை பெறுகிறார்கள். கோவையில் 3805 பேரும், சென்னையில் 2931 பேரும், சேலத்தில் 1685 பேரும், செங்கல்பட்டில் 1897 பேரும், தஞ்சாவூரில் 1990 பேரும், திருப்பூரில் 1666 பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications