தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2021 : வேளாண் செயலாளர் சமயமூர்த்தி விளக்கம்
சென்னை: பனை மரம், மாநில மரம் என்பதால் அதனை பாதுகாக்கும் வகையில் அவற்றை வெட்டுவதற்கு முன்பு மாவட்ட ஆட்சியரிடம் உத்தரவு பெற வேண்டும் என்கிற ஆணை விரைவில் வெளியிடப்படும் என்று வேளாண்துறை செயலாளர் சமயமூர்த்தி தெரிவித்துள்ளார். அதேபோல் கிண்டியில் வேளாண் ஏற்றுமதி நிலையம் விரைவில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் செயலாளர் தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசின் வேளாண் மற்றும் உழவர் நலத்துறையின் நிதிநிலை அறிக்கை தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து சென்னை தலைமை செயலகத்தில் வேளாண் உற்பத்தி ஆணையர், வேளாண் மற்றும் உழவர் நலத்துறை செயலாளர் சமயமூர்த்தி செய்தியாளர்களை சந்தித்தார்.

வேளாண்துறை
அப்போது அவர் கூறியதாவது : இந்த நிதிநிலை அறிக்கையில், வேளாண்மை துறை பட்ஜெட்டில் 34,220கோடியே 60லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. விவசாயத்தின் பரப்பளவை அதிகப்படுத்தி, சாகுபடியை அதிகரிக்க முதலமைச்சரின் தொலைநோக்கு திட்டத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.

விவசாயிகள் பொருட்கள்
விவசாயிகள் விலை பொருட்களை நேரிடையாக மக்களுக்கு விற்பனை செய்யும் வகையில் சந்தைகள் ஏற்படுத்தல், மானாவரி நிலைத்தை மேம்படுத்தவும், இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கவும், வேளாண் துறையில் முன்னேற்றம் காணவும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெருக்கவும், பயிற்சி ஆரய்ச்சிக்காகவும், கடந்த காலத்தை விட 1700கோடி கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது இதற்காக இடைநிலை நிதி அறிக்கையைவிட 900கோடி அதிகமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பனை மரம் பாதுகாப்பு
அதேபோல், இயற்கை விவசாயத்திற்கு, இயற்கை உரங்களை அளிப்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது . பனை மரம், மாநில மரம் என்பதால் அதனை பாதுகாக்கும் வகையில் அவற்றை வெட்டுவதற்கு முன்பு மாவட்ட ஆட்சியரிடம் உத்தரவு பெற வேண்டும் என்று இந்த நிதி நிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து அடுத்தகட்ட நடவடிக்கையாக, ஆணை பிறப்பிப்பது உள்ளிட்ட பணிகள் ஓரிரு வாரத்தில் தொடங்கப்படும்.

விவசாய இயந்திரங்கள்
விவசாயத்திற்கு, 400 புதிய இயந்திரங்கள் வாங்கி குறைந்த வாடகையை விவசாயிகளுக்கு கொடுக்கப்படும். செயலி மூலமாக பதிவு செய்து அதற்கான நலனை பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. கரும்பு விவாசயிகளுக்கு தர வேண்டிய நிலுவை தொகையில் தனியார் ஆலைகள் 314 கோடியும் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 187 கோடியும் நிலுவையில் உள்ளது.

வேளாண் கல்வி தமிழ் வழி
கிண்டியில் வேளாண் ஏற்றுமதி நிலையம் விரைவில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் . மத்திய அரசின் வேளாண் சட்டம் செயல்படுத்தலாமா என்பதை அரசுதான் முடிவெடுக்க வேண்டும். தமிழ் வழியில் வேளாண் கல்வியை வரும் கல்வியாண்டில் செயல்படுத்துவதற்கான சாத்தியம் உள்ளதா என்பதை ஆராய்ந்து வருகிறோம். இந்தாண்டு முடியாவிட்டாலும், அடுத்தாண்டுகளில் வேளாண் கல்வி தமிழ் வழியை கல்வி செயல்படுத்தப்படும்" இவ்வாறு கூறினார்.












Click it and Unblock the Notifications