தென்னந்தோப்புகளில் வாழை -ஜாதிக்காய் ஊடுபயிர்! தமிழக வேளாண் பட்ஜெட்டில் ரூ.5.70 கோடி நிதி ஒதுக்கீடு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தென்னந்தோப்புகளில் வாழையும், ஜாதிக்காயும் ஊடுபயிராகப் பயிரிட, 5 கோடியே 70 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என தமிழக வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.

மேலும், தென்னை சாகுபடி பற்றி பேசும் போது சீவகசிந்தாமணி பாடல் வரிகளையும் மேற்கோள் காட்டியிருந்தார். இது தொடர்பாக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வாசித்த பட்ஜெட் உரை வருமாறு;

Tamil Nadu Agriculture Budget, 5.70 crore will be allocated to cultivate banana and nutmeg as intercrops in coconut groves


தென்னை சாகுபடி: ''தென்னை சாகுபடியை, 10,000 ஏக்கர் பரப்பில் புதிதாக ஊடுபயிர் சாகுபடி மேற்கொள்ள, ஏழு இலட்சம் தரமான தென்னை நாற்றுக்கள், 4 கோடியே 80 இலட்சம் ரூபாய் நிதியில் வழங்கப்படும். தென்னை பயிரிட்டு, ஐந்து வருடம் வரையிலான தென்னந்தோப்புகளில் வாழையும், நன்கு வளர்ந்த தென்னந்தோப்புகளில் ஜாதிக்காயும் ஊடுபயிராகப் பயிரிட, 5 கோடியே 70 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். ''

தென்னந்தோப்புகளைப் புதுப்பித்தல்: ''தென்னை நாற்றங்கால்கள் அமைத்தல், நாற்றங்கால் மேம்பாடு, பழைய தென்னந்தோப்புகளைப் புதுப்பித்தல், தென்னங்கழிவுகளை மக்கச் செய்து இயற்கை உரங்களாக மாற்ற இயற்கை உரம் தயாரிக்கும் கூடம் ஏற்படுத்துதல் ஆகியவற்றிற்கு மானியம் வழங்குவதோடு தென்னை சார்ந்த தொழில்நுட்பங்களை விவசாயிகள் அறிவதற்கு ஏதுவாக, விவசாய நிலங்களிலும், தென்னை நாற்றங்கால் மையங்களிலும், தென்னை செயல் விளக்கத் திடல்கள் அமைத்து உற்பத்தியினை அதிகரித்திட வழிவகை செய்யப்படும். இதற்கென ரூ. 12 கோடியே 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.''

25,000 ஏக்கர்: ''தென்னை சாகுபடிக்குத் தேவையான இடுபொருட்களை, உரிய நேரத்தில் குறித்த அளவில் அளிப்பதால் தென்னையில் உற்பத்தித்திறன் அதிகரிக்கும் என்பதை எடுத்துக்காட்டும் வகையில் 25,000 ஏக்கர் பரப்பில் செயல்விளக்கத் திடல்கள் அமைக்கப்படும். இதற்கென 12 கோடி ரூபாய் மாநில நிதி ஒதுக்கீடு செய்யப்படும். ''

கேரளா வேர் வாடல் நோய்: ''தென்னையில் கேரளா வேர் வாடல் நோயினையும், வெள்ளை ஈக்களையும் கட்டுப்படுத்தத் தேவையான ஒருங்கிணைந்த பூச்சி, நோய் மேலாண்மை உத்திகளை, விவசாயிகளுக்கு வழங்கிட, ஒரு கோடியே 15 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.''

சூரிய சக்தி மின் உலர்த்திக் கூடம்: ''உரிய நேரத்தில் தேங்காயினை அறுவடை செய்தல், சூரிய சக்தி மின் உலர்த்திக் கூடத்தில் உலர்த்துதல், எண்ணெய் தயாரித்தல் முதலியன ஐந்து தென்னை நாற்றுப் பண்ணைகளில் செயல்விளக்கமாக விவசாயிகளுக்குப் பயிற்சி அளிக்கப்படும்.''

நுண்ணீர்ப் பாசனத் திட்டம்: ''2024-2025-ஆம் ஆண்டில், 2 இலட்சத்து 22 ஆயிரம் ஏக்கர் பரப்பில், ஒரு இலட்சம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் 232 கோடியே 50 இலட்சம் ரூபாய் ஒன்றிய நிதியுடன், 540 கோடியே 73 இலட்சம் ரூபாய் மாநில நிதியை ஒருங்கிணைத்து 773 கோடியே 23 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் நுண்ணீர்ப் பாசன அமைப்புகள் நிறுவப்படும்.''

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+