திடீர் உடல்நலக்குறைவு.. அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி
சென்னை; தமிழ்நாடு வேளாண் துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் திடீர் உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலை அடுத்துள்ள முட்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் எம்ஆர்கே பன்னீர்செல்வம். குறிஞ்சிப்பாடி சட்டசபை உறுப்பினராக உள்ள இவர், தற்போது தமிழ்நாடு வேளாண் துறை அமைச்சராகவும் உள்ளார்.

இந்நிலையில், இவருக்கு இன்று மாலை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவ வல்லுநர்களைக் கொண்ட குழு சிகிச்சை அளித்து வருகிறது.
அவருக்கு என்ன மாதிரியான பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தவொரு தகவலும் வெளியிடப்படவில்லை.
எம். ஆர். கே. பன்னீர்செல்வம் குறிஞ்சிப்பாடி தொகுதியில் இருந்து 1996, 2001, 2006 மற்றும் 2016 ஆகிய தேர்தல்களில் வெற்றி பெற்றவர். 2006 முதல் 2011 வரையிலான மு.கருணாநிதி தலைமையிலான திமுக அரசில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர்.
2021ஆம் ஆண்டு மீண்டும் குறிஞ்சிப்பாடி தொகுதியில் களமிறங்கிய இவர் அட்டகாசமான வெற்றியை பதிவு செய்தார். இதையடுத்து மாநிலத்தின் வேளாண் துறை அமைச்சராகவும் பதவி ஏற்றார்.
தமிழ்நாட்டில் வேளாண் துறைக்கு என இந்த முறை தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தமிழக வரலாற்றில் வேளாண் துறைக்குத் தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது இதுவே முதல்முறையாகும். மாநிலத்தில் முதல் வேளாண் பட்ஜெட்டை வேளான் துறை அமைச்சர் என்ற முறையில் எம்ஆர்கே பன்னீர்செல்வம் கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
SC/ST நிதி வேறு துறைகளுக்கு மாற்றப்பட்டதா? அது வெறும் அவதூறு.. அமைச்சர் வன்னி அரசு விளக்கம்! -
வைகோ வருத்தப்பட போறாரு.. நிர்வாகிகளை தட்டித் தூக்கும் திமுக! ஆர்டர் போட்ட ஸ்டாலின்! துரை தான் பாவம்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால் -
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
ஒரு மேயர் ஜெயித்தாலும் ஒருபக்க மீசையை எடுக்கிறேன்.. தவெகவிற்கு சவால் விட்ட திமுகவின் ஆர்எஸ் பாரதி -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர் -
சர்ப்ரைஸ் ஆய்வில் ஷாக்கான அமைச்சர்.. அன்னூர் சமூக நீதி விடுதியின் அவலம்!












Click it and Unblock the Notifications