குண்டு சத்தம் கேட்டுட்டே இருக்கு..எங்கள காப்பாத்துங்க..கண்ணீருடன் கோரிக்கை வைக்கும் தமிழ் மாணவர்கள்
சென்னை : உக்ரைனில் சிக்கி உள்ள தமிழகம் மற்றும் புதுச்சேரி இளைஞர்கள் தங்களை இந்திய அரசு மீட்டு இந்தியாவுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும் நாங்கள் ரஷ்யா எல்லையில் பாதாள அறையில் இருப்பதாக மேப் வெளியிட்டு கண்ணீர் மல்க உதவி கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளனர்.
Recommended Video
உக்ரைன் மீதான 4ஆம் நாள் போரை ரஷ்யா தொடங்கியுள்ள நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ் மீது குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர் ரஷ்ய ராணுவத்தினர்.
குறிப்பாக கீவ் நகரத்தை குறிவைத்து ரஷ்ய படைகள் தீவிர தாக்குதல் நடத்தி குண்டு மழை பொழிந்து வருகிறது. ரஷ்யாவுக்கு எதிரான போரில் நாங்கள் தனித்து விடப்பட்டுள்ளோம் எனவும், ஆனாலும் போராடுவோம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உருக்கமாக தெரிவித்தார்.

மீட்க நடவடிக்க
தலைநகரிலிருந்து வெறும் 3 கிலோ மீட்டர் தூரத்தில் வந்துள்ள ரஷ்ய ராணுவம் தொடர்ந்து தலைநகர் நோக்கி முன்னேறி வரும் நிலையில், உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்கள் ருமேனியாவின் எல்லைப் பகுதிகளுக்கு அழைத்து வரப்பட்டு எல்லைகளில் உள்ள இந்திய அதிகாரிகள் அவர்களை அழைத்துக்கொண்டு நாடு திரும்ப திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்காக இரண்டாம் கட்டமாக இரண்டு ஏர் இந்தியா விமானங்கள் தயராக உள்ளது.

வலுக்கும் கோரிக்கை
உக்ரைனில் உள்ள இந்தியர்களை வெளியேற்ற உதவ எல்லைகளுக்கு செல்வதாக வெளியுறவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. உக்ரைனில் தவிக்கும் மக்களை மீட்க நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும், இதற்கான செலவுகளை தமிழக அரசே ஏற்கும் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். இந்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் உள்ளிட்ட பலர் அங்கு சிக்கியுள்ளதாகவும், அவர்களை மீட்க வேண்டுமென்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

தாக்குதல் அச்சம்
இந்நிலையில் உக்ரைனில் சிக்கி உள்ள தமிழகம் மற்றும் புதுச்சேரி இளைஞர்கள் தங்களை இந்திய அரசு மீட்டு இந்தியா கொண்டு செல்ல வேண்டும் என்றும், நாங்கள் ரஷ்யா எல்லையில் பாதாள அறையில் இருப்பதாக மேப் வெளியிட்டு கண்ணீர் மல்க உதவி கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளனர். உக்ரைன் நாட்டில் போர் காரணமாக அங்கு படிக்க சென்ற தமிழகம்- புதுச்சேரி மாணவர்கள் அங்குள்ள பாதாள அறை மற்றும் மெட்ரோ ரயில் நிலையத்தில் தஞ்சம் அடைந்து உள்ளனர்.

கண்ணீர் வீடியோ
இந்த போர் காரணமாக தங்களது நிலை குறித்து புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்ட மாணவர் சந்துரு, தமிழக மாணவர்களுடன் சேர்ந்து வீடியோ வெளியிட்டு உள்ளார்.அந்த வீடியோவில் நாங்கள் ரஷ்யா எல்லை பகுதியில் உள்ளோம் என்றும், குண்டு சத்தம் தொடர்ந்து கேட்டுக்கொண்டு இருக்கிறது. அனைத்து மக்களும் பாதாள அறை மற்றும் பெட்ரோல் ரயில் நிலையத்தில் தஞ்சம் புகுந்துள்ளதாகவும், நாங்கள் பாதாள அறையில் நீண்ட நேரமாக நிற்கிறோம் என்றும் தங்களை எப்படி அழைத்து செல்வது குறித்து மேப் மூலம் விளக்கம் அளித்து புதுச்சேரி, தமிழக மாணவர்கள் கண்ணீர் வீடியோ வெளியிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications