+2 முடித்த மாணவர்களுக்கு.. அரசின் மிக முக்கிய அறிவிப்பு.. இன்று வெளியாகும் முக்கிய லிஸ்ட்? ரெடியா?
சென்னை: தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகள் முடிந்துவிட்டன. இதில் 12ம் வகுப்பிற்கான தேர்வு முடிவுகள் கடந்த 8ம் தேதி வெளியானது.

12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. இந்த தேர்வில் மாணவ, மாணவியர் எடுத்த அதிக மதிப்பெண் உட்பட பல முக்கிய விவரங்கள் வெளியாகி வருகின்றன.
பிளஸ் 2 பொதுத்தேர்வில் 94.03 சதவிகிதம் மாணவ - மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் தேர்வு எழுதியவர்களில் மாணவிகள் 96.38 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். மாணவர்கள் 91.45 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழில் எப்போதும் சதம் அடிப்பது மிக மிக கடினம். ஆனால் கடந்த சில வருடங்களாக சதம் அடிப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. ஆனால் இந்த வருடம் சதம் அடிப்பவர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து உள்ளது. வெறும் 2 பேர் மட்டுமே 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழில் சதம் அடித்துள்ளனர்.
சேர்க்கை தொடக்கம்:
தமிழ்நாட்டில் கோடை விடுமுறை நடந்து வரும் நிலையில் அடுத்த கல்வி ஆண்டிற்கான சேர்க்கை நடைபெற்று வருகிறது. பள்ளிகளில் ஏற்கனவே அடுத்த கல்வி ஆண்டிற்கான சேர்க்கை தொடங்கிவிட்டது.
அதேபோல் கல்லூரிகளிலும் அடுத்த கல்வி ஆண்டிற்கான சேர்க்கை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில்தான் 12ம் வகுப்பு முடித்த பள்ளி மாணவர்களுக்கு பலரும் அரசு கலை கல்லூரிகளில் சேர விண்ணப்பம் செய்துள்ளனர்.
அதன்படி கடந்த 8ம் தேதியில் இருந்து 3 வாரமாக கலை, அறிவியல் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வந்தது. கலை, அறிவியல் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க கடந்த 22ம் தேதி வரை நேரம் கொடுக்கப்பட்டது.
முதலில் 19ம் தேதி இந்த விண்ணப்பம் நிறைவு அடைவதாக இருந்தது. ஆனால் மாணவர்கள் நலன் கருதி மேலும் 3 நாட்கள் இந்த விண்ணப்பங்கள் நீட்டிக்கப்பட்டது. கடந்த 22ம் தேதியோடு அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர அவகாசம் அளிக்கப்பட்டது.
164 கல்லூரிகளில் சேர்வதற்கு மூன்றரை லட்சம் மாணவ-மாணவியர் இதுவரை விண்ணப்பம் செய்துள்ளனர்.
tngasa.in என்ற தளத்தில் மாணவர்கள் விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
ஒவ்வொரு கல்லூரியிலும் அளிக்கப்பட்ட விண்ணப்பங்கள் ரேங்க் செய்யப்பட்டு இன்று கல்லூரி கல்வி இயக்குனர் அலுவலகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்படும். மொத்த ரேங்க் லிஸ்ட் இன்றே வெளியாகும் வாய்ப்புகள் உள்ளன. தமிழ், ஆங்கில மொழி பட்டப்படிப்புகள் மற்றும் பிற இளநிலை பட்டப்படிப்புகளுக்கு மதிப்பெண்கள் என்று பிரித்து தனியாக லிஸ்ட் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
மேலும் முதல் கட்ட கலந்தாய்வு ஜூன் 1-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை நடக்கும்.
2ம் கட்ட கலந்தாய்வு , ஜூன் 12-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை 2-ம் கட்ட வரை நடக்கும்.
ஜூன் 22-ந்தேதி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆலோசனை
இதில் 12ம் வகுப்பு தேர்வுகள் முடிந்த நிலையில் மாணவ, மாணவியர் பலரும் அடுத்து என்ன செய்யலாம், எந்த கல்லூரியில் சேரலாம் என்று ஆலோசனை செய்ய தொடங்கிவிட்டனர்.
பலருக்கும்.. முக்கியமாக கிராமப்புற மாணவர்களுக்கு எங்கே படிப்பது, எந்த கல்லூரியில் என்ன கோர்ஸ் எடுப்பது என்பது போன்ற தெளிவான திட்டமிடல் இல்லை.
இந்த நிலையில்தான் இவர்களுக்கான முக்கியமான அறிவிப்பு ஒன்றை தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ளது. நான் முதல்வன் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த திட்டமும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
நான் முதல்வன் திட்டம் மூலம் பல்வேறு துறைகளில் மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது. மாணவர்கள் எங்கே சேர வேண்டும், எப்படி படிக்க வேண்டும் என்று பல படிநிலைகளில் ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது.
விண்ணப்பம்:
அதன்படி விரும்பிய படிப்பை எந்த கல்லூரியில் படிக்கலாம், எப்படி விண்ணப்பிக்கலாம், கல்விக்கடன், உதவித்தொகை பெறுவது குறித்த ஆலோசனைகள் என அனைத்து விதமான சந்தேகங்கள் மற்றும் வழிகாட்டலுக்கு 14417 என்ற இலவச அழைப்பு எண்ணை அறிவித்துள்ளது பள்ளிக்கல்வித்துறை.
காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அழைத்து ஆலோசனைகள் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications