"துணிவு".. ஆர்.என் ரவி சொல்லாமல் விட்ட வார்த்தைகளை.. ஓங்கி ஓங்கி ஒலித்த அப்பாவு.. என்ன நடந்தது?
சென்னை: ஆளுநர் ஆர். என் ரவி இன்று சட்டசபையில் பேச தவறிய வார்த்தைகளை அவருக்கு முன்பாகவே சபாநாயகர் அப்பாவு பேசினார்.
ஆளுநர் ஆர். என் ரவி இன்று தமிழ்நாடு சட்டசபையில் ஆற்றிய உரை பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த உரையை படிக்காமல், ஆளுநர் ஆர். என் ரவி அதில் சில பத்திகளை நீக்கியும், சில வரிகளை தாமாக சேர்த்தும் பேசி இருக்கிறார்.
ஆளுநர்கள் தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த உரையை மட்டுமே பேச வேண்டும் என்பதுதான் சட்டம். இதுதான் சட்டசபை விதி.

விதி மீறல்
ஆனால் ஆளுநர் ஆர். என் ரவி இந்த விதியை மீறி உள்ளார். ஆளுநர் ரவி தனது உரையில் 65வது பத்தியை அப்படியே தவிர்த்து இருக்கிறார். அந்த பத்தியில், சமூகநீதி, சுயமரியாதை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, சமத்துவம், பெண்ணுரிமை, மதநல்லிணக்கம், பல்லுயிர் ஓம்புதல் ஆகிய கொள்கைகள் இவ்வரசின் அடித்தளமாக அமைந்துள்ளன. தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் போன்ற மாபெரும் தலைவர்களின் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் பின்பற்றி, பார்போற்றும் திராவிட மாடல் ஆட்சியை இந்த அரசு வழங்கி வருகின்றது, என்ற பகுதியை மொத்தமாக தவிர்த்து உள்ளார்.

தவிர்த்த பகுதிகள்
அதோடு தமிழ்நாடு அரசின் கீழ் சட்ட ஒழுங்கு சரியாக இருக்கிறது. தமிழ்நாடு அமைதி பூங்காவாக இருக்கிறது என்ற வாசகத்தையும் ஆளுநர் ஆர். என் ரவி பயன்படுத்தாமல் தவிர்த்தார். இதெல்லாம் போக தமிழ்நாட்டில் முதலீடுகள் குவிகிறது. தமிழ்நாடு முதலீடுகளில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக இருக்கிறது என்று முதலீடுகள் தொடர்பான வார்த்தைகளையும் ஏனோ ஆளுநர் ஆர். என் ரவி அப்படியே தவிர்த்து இருக்கிறார். ஆளுநரின் இந்த செயல் கடுமையான விமர்சனங்களை சந்தித்து உள்ளது. இதற்கு சட்டசபையில் ஆளுநர் ரவி உடனே பதிலடி கொடுத்தார்.

பதிலடி
ஆளுநர் ஆர். என் ரவி இன்று சட்டசபையில் பேச தவறிய வார்த்தைகளை அவருக்கு முன்பாகவே சபாநாயகர் அப்பாவு பேசினார். சமூகநீதி, சுயமரியாதை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, சமத்துவம், பெண்ணுரிமை, மதநல்லிணக்கம், பல்லுயிர் ஓம்புதல் ஆகிய கொள்கைகள் இவ்வரசின் அடித்தளமாக அமைந்துள்ளன. தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் போன்ற மாபெரும் தலைவர்களின் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் பின்பற்றி, பார்போற்றும் திராவிட மாடல் ஆட்சியை இந்த அரசு வழங்கி வருகின்றது, என்ற பகுதியை சபாநாயகர் அப்பாவு அப்படியே வாசித்துக்காட்டினார். ஆளுநர் தவற விட்ட வார்த்தைகளை அப்பாவு அழுத்தம் திருத்தமாக சொன்னார்.

வாசித்தார்
தமிழ்நாட்டில் முதலீடுகள் குவிகிறது. தமிழ்நாடு முதலீடுகளில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக இருக்கிறது. தமிழ்நாடு அரசின் கீழ் சட்ட ஒழுங்கு சரியாக இருக்கிறது. தமிழ்நாடு அமைதி பூங்காவாக இருக்கிறது என்ற வாசகத்தையும் ஆளுநர் ஆர் . என் ரவி முன்பாக சபாநாயகர் துணிவாக படித்துக்காட்டினார். அதன்பின்தான் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆளுநர் ஆர். என் ரவி சுயமாக பேசி உரைக்கு எதிராக தமிழ்நாடு தீர்மானம் நிறைவேற்றினார். தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் பேச தொடங்கியதும் ஆளுநர் ஆர். என் ரவி அவையில் இருந்து வெளியேறினார்.தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய உரையை ஆளுநர் ஆர். என் ரவி முழுமையாக வாசிக்காததற்கு எதிராகவும், ஆளுநர் ரவி சுயமாக சில விஷயங்களை பேசியதற்கு எதிராகவும் தமிழ்நாடு சட்டசபையில் இன்று முதல்வர் ஸ்டாலின் உடனே தீர்மானம் நிறைவேற்றினார். இதையடுத்து ஆளுநர் சுயமாக பேசிய உரை நீக்கப்பட்டு அரசு தயாரித்த முழு உரை சேர்க்கப்பட்டது. தமிழ்நாடு சட்டசபை வரலாற்றில் இப்படி முதல்முறை நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications