கட்சிக்காரங்கள விட்ருங்க..கல்யாண வீட்டுக்காரங்கள புடிங்க! தேர்தல் சீசனில் முகூர்த்தம்! பாவம் மக்கள்!
சென்னை: 2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டுள்ளதால் உரிய ஆவணங்களின்றி பொதுமக்கள் எடுத்துச் செல்லும் பணம் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், தேர்தல் சீசனின் போது 7 சுப முகூர்த்த தினங்கள் இருப்பதால் திருமண நிகழ்ச்சிகள் அதிக அளவில் நடைபெறவுள்ள நிலையில், உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்படும் நகைகள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
தமிழக சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதன் படி, பொதுமக்கள் ரூ.50 ஆயிரத்திற்கும் அதிகமான பணத்தை எடுத்துச் செல்லும் போது உரிய ஆவணங்கள் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

அதேபோல், ரூ.2 லட்சத்திற்கும் அதிகமான மதிப்புள்ள நகைகள் எடுத்துச் செல்லும்போதும் அதன் ரசீது மற்றும் உரிய ஆவணங்கள் அவசியம் வைத்திருக்க வேண்டும். இந்த விதிமுறைகளை மீறும் பட்சத்தில், அந்த பணம் அல்லது நகைகள் பறிமுதல் செய்யப்படலாம் என்றும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில், மதுரை கிழக்கு தொகுதிக்குட்பட்ட சக்குடி - பூவந்தி சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில், அந்த வாகனத்தில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.27 லட்சம் மதிப்பிலான சுமார் 25 பவுன் நகைகள் எடுத்துச் செல்லப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
விசாரணையில், அந்த நகைகள் அணையூர் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவருடையது என்றும், தனது மகளின் திருமணத்திற்காக அந்த நகைகளை எடுத்துச் சென்றதாகவும் அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் நகைகளுக்கான ரசீது அல்லது உரிய ஆவணங்கள் இல்லாததால், தேர்தல் விதிகளின் படி அவை பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அந்த நகைகள் தேர்தல் அலுவலர் மூலம் அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள ஏப்ரல் 23ஆம் தேதி வரை மொத்தம் ஏழு சுப முகூர்த்த தினங்கள் உள்ளன. இந்த நாட்களில் மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான திருமணங்கள் நடைபெற உள்ளது. ஏற்கனவே நகைகள் மற்றும் புத்தாடைகள் வாங்கி வீட்டில் வைத்திருப்பவர்களுக்கு எந்த சிக்கலும் இல்லை. ஆனால் தற்போது திருமணத் தேவைக்காக நகைகள் வாங்கி கொண்டு செல்லும் பலர் உரிய ஆவணங்கள் இல்லாமல் சோதனையில் சிக்கி சிரமத்தை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது.
தேர்தல் காலத்தில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் அல்லது நகைகளை மீண்டும் பெறுவது மிகவும் சிரமமான செயலாக இருக்கும் என்றும் அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். தேவையான ஆவணங்கள் சமர்ப்பித்து உரிய நடைமுறைகளை பின்பற்றினால் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை மீண்டும் பெற முடியும் என்பதால், பொதுமக்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.
இதனால், திருமண நிகழ்ச்சிகளுக்காக பணம் அல்லது நகைகளை எடுத்துச் செல்லும் பொதுமக்கள் அவற்றுக்கான ரசீதுகள், பில், வங்கி பரிவர்த்தனை ஆவணங்கள் போன்றவற்றை கட்டாயமாக எடுத்துச் செல்ல வேண்டும் என்று தேர்தல் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் கிராமங்கள் மற்றும் நகரங்களில் பொதுமக்களுக்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
தேர்தல் காலமும் சுப முகூர்த்த தினங்களும் ஒன்றாக சேர்ந்துள்ள இந்த காலகட்டத்தில், தேவையான ஆவணங்கள் இன்றி நகை மற்றும் பணத்தை எடுத்துச் செல்லும் பொதுமக்கள் சிரமத்தை சந்திக்க நேரிடும் என்பதால், அனைவரும் முன்கூட்டியே விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்று அதிகாரிகள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.
-
விசிகவுக்கு திருப்போரூர், பெரியகுளம் உள்பட 8 தொகுதிகள்! உத்தேச பட்டியல் வெளியீடு! -
164 தொகுதிகளில் களமிறங்கும் திமுக! வேட்பாளர்கள் யார்? மாலையில் அறிவிக்கும் ஸ்டாலின்? -
அட.. இதை கவனிச்சீங்களா? தமிழகத்திலேயே 2 குடும்பம் மட்டும்தான்! திமுகவில் களமிறங்கும் தந்தை - மகன்கள் -
தேவர் Vs தேவர் மகன்.. திண்டுக்கல் சீனிவாசனை எதிர்க்கும் ஐபி செந்தில்குமார்! வரலாறு படைக்குமா திமுக? -
விட்டு கொடுக்காத திமுக.. விஜய்யுடன் நேருக்கு நேர் போட்டி.. பெரம்பூர் சிட்டிங் எம்எல்ஏக்கு வாய்ப்பு -
பெண்கள், படித்தவர்களுக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்..டாக்டர் பட்டம் பெற்றவர்கள் மட்டும் இத்தனை பேரா? -
“ரெஸ்ட்டா? எனக்கா?” 13வது முறையாக தேர்தலில் களமிறங்கும் துரைமுருகன்.. மீண்டும் காட்பாடியில் போட்டி! -
Congress: விடாப்பிடியாக வாங்கிய காங்கிரஸ்.. திமுக கூட்டணியில் போட்டியிடும் 28 தொகுதிகள் எவை? லிஸ்ட் வெளியானது -
தேமுதிக போட்டியிடும் 10 தொகுதிகள் இறுதியானது.. திமுக தலைமையகத்தில் சுதீஷ் சொன்ன சேதி! -
பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்.. ஏப்.6 ஆம் தேதி வெளியாகும் புதிய வாக்காளர் பட்டியல்! -
Election Exclusive: வரம் கொடுத்த சாமி தலையில் கை வைத்த பிரேமலதா.. திமுக தொகுதிகளை கேட்டு அடம்! குட்டையைக் குழப்பு காங்.! -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு












Click it and Unblock the Notifications