திமுக கூட்டணியை உடைத்து நடுத்தெருவுக்கு கொண்டுவர நினைக்கிறாங்க.. திருமாவுக்கு எதிராக விசிகவில் சதி?
சென்னை: திமுக கூட்டணியை எப்படியாவது உடைத்து அதிமுகவுக்கு பலம் சேர்க்க வேண்டும் என்ற அஜெண்டாவை செயல்படுத்த சோ கால்ட் வியூக வகுப்பாளர்கள் தீவிரம் காட்டுகின்றனர்; திமுக-விசிக கூட்டணியை உடைத்து என்னை நடுத்தெருவில் நிற்க வைக்க சதி செய்கிறார்கள் என விசிக தலைவர் திருமாவளவன் குறிப்பிட்ட சதிகாரர்கள் அக்கட்சியிலேயே வலம் வருகின்றனரா? என விசிகவிலேயே சலசலப்புகள் எழத் தொடங்கிவிட்டன.
திமுக கூட்டணியில் இணைந்து மதவாத சக்திகளுக்கு அச்சுறுத்தும் சக்தியாக தொடர்ந்து இருந்து வருகிறது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. திமுக கூட்டணியில் பல கட்சிகள் இணைவதால் தொகுதிப் பங்கீட்டில் அதிருப்தி இருப்பது இயல்பானதுதான். இந்த அதிருப்தியையே கொள்கைகளை குழி தோண்டிப் புதைத்துவிட்டு அரசியல் ஆதாயம் அடைய ஆயுதமாக்கும் சில வேலைகளை திமுக- விசிக கூட்டணியை உடைக்கும் 'தரகு' சக்திகள் கனகச்சிதமாக தொடங்கி இருக்கின்றன என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

இதன் முன் வெள்ளோட்டம்தான், மது ஒழிப்பு மாநாடு, ஆட்சி அதிகாரத்தில் பங்கு. திருமாவளவனே, என்னை இயக்குகிற இயக்குநர் யாருமே இல்லை என ஒரு பக்கம் பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால் அவரது கட்சியோ அவரது கையை மீறி செல்கிறதா? என சந்தேகிக்கும் வகையில் நிகழ்வுகள் அரங்கேறுகின்றன. திமுகவுடனான இணக்கமான போக்கை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுடன் ஒரே மேடையில் பேசிய ஆளுநர் ஷாநவாஸ் எம்.எல்.ஏ. வெளிப்படுத்துகிறார். ஆனால் திமுகவை சீண்டிப் பார்க்கும் வேலையை சிலரும் பகிரங்கமாக செய்யத் தொடங்கி இருக்கின்றனர்.
திமுக கூட்டணியில் இருந்து விசிகவை உடைத்து என்னை நடுத்தெருவில் நிற்க வைக்க நினைக்கிறார்கள் என சொன்னது திருமாவளவன் தான். இப்போது திமுக கூட்டணியை உடைக்கும் வகையில் விசிகவினரே செயல்பட களமிறங்கி இருக்கின்றனர் என்பது எப்படி திருமாவுக்கு தெரியாமல் போகிறது என்கின்றன அரசியல் வட்டாரங்கள்.
திமுக கூட்டணியில் இருந்து விசிக விலக வேண்டும்; அதிமுக கூட்டணியில் இணைய வேண்டும்; இதேபோல திமுகவை தனிமைப்படுத்தி அதிமுகவை அரியணை ஏற்ற வேண்டும் என்ற 'பண ஆதாயத்துக்கான' வியூக வகுப்பாளர்கள் செயல் திட்டத்தை திருமாவளவன் எப்போது புரிந்து கொள்வாரோ? என்கிற குமுறல்கள் விசிகவிலும் எழுந்திருப்பதாகவும் மூத்த பத்திரிகையாளர்கள் தெரிவிக்கின்றன.

இதனை பகிரங்கப்படுத்தும் வகையில் விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார் எம்பி தமது ட்விட்டர் பக்கத்தில், புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார் , மாமேதை மார்க்ஸ் ஆகியோரின் கொள்கை வழியில் எம்மை வழிநடத்திக் கொண்டிருக்கும் திருமாவளவன்,
இன்று இந்திய அளவில் உற்று நோக்கப்படும் கட்சியாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை உருவாக்கி இருக்கிறார். சனாதனத்துக்கு எதிரான சமரசமற்ற அவரது நிலைப்பாடுதான் அதற்கு முதன்மையான காரணம்.
'அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பது! சனாதனிகளின் அரசியலை வீழ்த்துவது!' என்ற நமது இலக்குகள் இன்னும் எட்டப்படவில்லை. நமது கொள்கை எதிரிகள் இன்னும் அதிகாரப் பீடத்திலிருந்து அகற்றப்படவில்லை. அவர்கள் தமிழ்நாட்டைக் குறிவைத்துக் காய் நகர்த்துகிறார்கள். தாம் செல்வாக்கு பெறுவதற்கு ஏதுவாகத் தமது எதிர்ப்பு வாக்குகளைச் சிதறடிப்பது அவர்களின் உத்திகளில் ஒன்று.
தமிழ்நாட்டிலுள்ள மதச்சார்பற்ற சக்திகள் அனைவரும் அடுத்துவரும் இரண்டு ஆண்டுகளிலும் முன்னிலும் விழிப்போடு இருக்க வேண்டும். ' சமூக நீதிக்கும், சமத்துவத்துக்கும் எதிரான பாஜகவை தமிழ்நாட்டில் காலூன்ற விட்டுவிடக்கூடாது ' என்பதே 2026 சட்டப் பேரவைத் தேர்தல் களத்தில் நமது முதன்மையான பணியாக இருக்க வேண்டும். என பதிவிட்டிருக்கிறார்.












Click it and Unblock the Notifications