தனிச்சின்னம் கிடையாது.. சிறிய கட்சிகளை விழுங்கும் திமுக - அதிமுக.. 2021 தேர்தலில் என்ன நடந்தது?
சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கிவிட்டது. இந்நிலையில் தான் தமிழகத்தில் அதிமுக, திமுக கட்சிகள் தங்களின் கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகளை முறையே இரட்டை இலை, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைத்து அவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்காமல் செய்து வருகின்றன. இதனால் பல கட்சிகள் இந்த முறை தனிச்சின்னத்தில் போட்டியிட போர்க்கொடி உயர்த்தி உள்ள நிலையில் 2021 சட்டசபை தேர்தலில் என்ன நடந்தது? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
தமிழகத்தில் ஒவ்வொரு சட்டசபை மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களிலும் கூட்டணியில் இணையும் சிறிய கட்சிகளை திமுக, அதிமுக கட்சிகள் தனிச்சினத்தில் போட்டியிட அனுமதிக்காமல் தங்களின் உதயசூரியன் மற்றும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வைக்கின்றன.

இதற்கு முக்கிய காரணம் கூட்டணி கட்சியினர் தனிச்சின்னத்தில் போட்டியிட்டால் மக்கள் வாக்களிப்பது சிரமம் என்பதும், நன்கு மக்கள் மனதில் பதிந்த இரட்டை இலை, உதயசூரியன் என்றால் மக்கள் எளிதாக வாக்கு செலுத்துவார்கள் என்பது தான்.
சிறுகட்சிகளுக்கு பிரச்சனை
இப்படி உதயசூரியன், இரட்டை இலை சின்னத்தில் சிறிய கட்சிகள் போட்டியிட்டு வெல்லும்போது அவர்கள் திமுக, அதிமுக எம்எல்ஏக்களாகவே கருதப்படுவார்கள். மேலும் சட்டசபையில் திமுக - அதிமுக கொறடாக்கள் பிறப்பிக்கும் உத்தரவுக்கு அவர்கள் கட்டுப்பட வேண்டும். தனித்து செயல்பட முடியாது. மீறினால் தகுதி நீக்கம் செய்யலாம். அதோடு அவர்கள் வென்றாலும் கூட அவர்கள் பெற்ற வாக்குகள் அதிமுக, திமுகவின் ஓட்டு சதவீதமாக தான் கணக்கில் எடுத்து கொள்ளப்படும்.
திமுக கூட்டணியில் பிரச்சனை
இதனால் தனி கட்சி தொடங்கி தேர்தல் ஆணையத்திடம் அங்கீகாரம் பெற வேண்டும் என்பதில் சிக்கல் வருகிறது. தற்போதும் கூட திமுக கூட்டணியில் தனிச்சின்னத்தில் போட்டியிட பல கட்சிகள் முயன்றாலும் முட்டுக்கட்டை போடப்பட்டுள்ளது. தொடர்ந்து திமுகவின் சின்னத்தில் போட்டியிட பணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அதிருப்தியில் உள்ளார்.
அதேபோல் கூடுதல் தொகுதி வழங்காதது, தனிச்சின்னத்தில் போட்டியிட அனுமதிக்காதது உள்ளிட்டவற்றால் வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமை கட்சி கூட்டணியில் இருந்து வெளியேறி உள்ளது. வைகோவின் மதிமுக, தனக்கு கிடைத்த 4 தொகுதிகளில் 3ல் உதயசூரியன் சின்னத்திலும், ஒரு தொகுதியில் தனி சின்னத்திலும் போட்டி போட உள்ளது.
அதிமுக கூட்டணியில் சிக்கல்
அதேபோல், அதிமுக கூட்டணியிலும் சிறிய கட்சிகளை இரட்டை இலை சின்னத்தில் களமிறக்க எடப்பாடி பழனிச்சாமி விரும்புகிறார். ஆனால் கூட்டணியில் உள்ள பாஜக தனது தாமரை சின்னத்தில் களமிறக்க வேண்டும் என்று கூறிவருகிறது. இதனால் திமுக - அதிமுக கூட்டணியில் சின்னத்தை மையப்படுத்தி பிரச்சனை உள்ளது. இதனால் கூட்டணியில் இழுபறி தொடர்கிறது.
2021 தேர்தல் நிலவரம்
இந்நிலையில் தான் 2021 சட்டசபை தேர்தலில் திமுக, அதிமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் உதயசூரியன், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
திமுக கூட்டணியில் யாருக்கெல்லாம் உதயசூரியன்
திமுக கூட்டணியை எடுத்து கொண்டால் வைகோவின் மதிமுக 6 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் களமிறங்கியது. பிறகு ஜவாஹிருல்லாவின் மனிதநேய மக்கள் கட்சி 2, ஈஸ்வரனின் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி 3, வேல்முருகனின் தவாக, கதிரவனின் அனைத்திந்திய பார்வார்டு பிளாக், அதியமானின் ஆதித்தழிழர் பேரை, முருகவேல் ராஜின் மக்கள் விடுதலை கட்சி உள்ளிட்டவை தலா ஒரு தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் களமிறங்கின.
இதுதவிர திமுக 173 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது. கூட்டணியில் விசிக 6 இடங்களில் பானை சினன்த்திலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 6 தொகுதிகளில் கதிர் அரிவள் சின்னத்திலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அரிவாள் சுத்தியல் சின்னத்தில் 6 தொகுதிகளிலும், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி 3 தொகுதிகளில் ஏணி சின்னத்திலும் போட்டியிட்டது.
அதிமுகவில் யாருக்கெல்லாம் இரட்டை இலை
அதேபோல் கடந்த 2021 சட்டசபை தேர்தலில் அதிமுக 179 தொகுதிகளில் இரட்டை இலை சின்னத்தில் களமிறங்கியது. அதேவேளையில் கூட்டணியில் 7 கட்சிகள் 15 இடங்களில் இரட்டை இலை சின்னத்தில் களமிறங்கின. அதேபோல், ஜிகே வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் 6 தொகுதிகள், என்ஆர் தனபாலனின் பெருந்தலைவர் மக்கள் கட்சி, ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், ஸ்ரீதர் வாண்டையாரின் மூவேந்தர் முன்னேற்ற கழகம், சேதுராமனின் மூவேந்தர் முன்னணி கழகம், ஜெகன்மூர்த்தியின் புரட்சி பாரதம், ஜோதி முத்துராமலிங்கத்தின் பசும்பொன் தேசிய கழகம் உள்ளிட்ட கட்சிகள் தலா ஒரு இடங்களில் இரட்டை இலை சின்னத்தில் களமிறங்கின. அதன்படி பார்த்தால் கூட்டணியில் 7 கட்சிகள் 12 தொகுதிகளில் இரட்டை இலை சின்னத்தில் களமிறங்கின. பாமக 23 தொகுதிகளில் மாம்பழம் சின்னத்தில் போட்டியிட்டது. பாஜக 20 தொகுதிகளில் தாமரை சின்னத்தில் களமிறங்கியது.
டார்ச்லைட் சின்னத்தில் களமிறங்கிய கட்சிகள்
இந்த கூட்டணியில் அதேபோல் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் தலைமையிலான கூட்டணியில் சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி 33 தொகுதிகளிலும் தமிழக மக்கள் ஜனநாயக டக்சி 9 இடங்களில், ஜேடிஎஸ் கட்சி 3 இடங்களிலும் டார்ச்லைட் சின்னத்தில் போட்டியிட்டன. இப்படி கடந்த முறை தனது கூட்டணியில் வேட்பாளர்களை டார்ச்லைட் சின்னத்தில் களமிறக்கிய கமல் இப்போது சிக்கலை எதிர்கொண்டு வருகிறார்.
அதாவது தற்போது மக்கள் நீதி மய்யம் திமுக கூட்டணியில் இணைந்துள்ளது. 2 தொகுதிகள் வழங்க திமுக முன்வந்துள்ள நிலையில் அவற்றில் திமுக சின்னமான உதயசூரியனில் களமிறங்க திமுக கூறுகிறது. இதனால் திமுக - மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் தொகுதி பங்கீடு இன்னும் சக்சஸ் ஆகவில்லை.
-
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
“திமுக தீயசக்தி”! கோஷம் போட்ட சிறுவர்கள்! த.வெ.க ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் மீது பாய்ந்தது வழக்கு -
அமமுகவுக்கு 12 சீட்? குக்கர் சின்னத்தில் போட்டி.. பியூஷ் கோயல் - டிடிவி தினகரன் சந்திப்பில் உறுதி?! -
பாஜக பஞ்சாயத்து ஓவர்..டேக் ஆஃப் ஆகுமா அதிமுக கூட்டணி! ப்ளானை மாற்றிய ’டெல்லி’ தலை! திடீர் ட்விஸ்ட்! -
30+ தொகுதியில் போட்டி? தமிழகத்தில் பாஜக எந்தெந்த தொகுதிகளில் களமிறங்குகிறது.. வெளியான முக்கிய தகவல் -
திருமங்கலம் வாக்காளர்களுக்கு திரும்பவும் திருவிழா.. போட்டி போட்டு தயாராகும் தலைகள்.. அடைமழை தான்! -
திமுக கூட்டணியில் 3 சீட் கேட்டுள்ளோம்.. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவோம்- எஸ்டிபிஐ தலைவர் தகவல் -
நள்ளிரவில் ‘செக்’ வைக்கும் காக்கிகள்.. சென்னையில் இரவு நேரத்தில் வெளியே போறீங்களா? இதை நோட் பண்ணுங்க -
தனித்தொகுதிகள்.. கோட்டையை இழந்த அதிமுக... களம் வென்ற திமுக! 2016 vs 2021 vs 2026 என்ன நடக்கும்? -
இன்னும் 4 நாள் ஆகும்.. அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு காலதாமதம்.. அமித்ஷா – எடப்பாடி மீட்டிங் முடிவு -
சுருண்டு விழுந்த சூரியன்! 91இல் வீசிய ‘ராஜீவ்’ அலை.. 2 வருடத்தில் ’நேஷனல் லீடர்’ ஆன ஜெயலலிதா












Click it and Unblock the Notifications