ஸ்தம்பித்த சென்னை - கோவை.. நள்ளிரவிலும் பஸ் - ரயில் நிலையங்களில் அலைமோதும் கூட்டம்.. கடும் நெரிசல்
சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் இன்று நடைபெற உள்ளது. இதனால் சென்னை, கோவை உள்பட வெளிமாவட்டங்களில் பணியாற்றி வரும் மக்கள் சொந்த ஊர் கிளம்பி வருகின்றனர். இதனால் சென்னை கிளாம்பாக்கம், கோவை சிங்காநல்லூர் பஸ் நிலையங்களில் நள்ளிரவிலும் கூட்டம் அலைமோதியது.
தமிழக சட்டசபை தேர்தல் இன்று நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் ஓட்டுப்போட பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வெளியூர்களில் இருந்து சொந்த ஊருக்கு கிளம்பி செல்கின்றனர். அந்த வகையில் சென்னை, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் வேலை செய்து வரும் பிற மாவட்டங்களை சேர்ந்த மக்கள் சொந்த ஊர் புறப்பட்டு வருகின்றனர்.

பொதுமக்கள் சிரமமின்றி சென்று வர சிறப்பு ரயில்கள், சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இருப்பினும் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. அதன்படி சென்னையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்லும் ரயில், பஸ்களில் கூட்டம் அதிகளவில் இருந்தது. தாம்பரம் ரயில் நிலையம், கிளாம்பாக்கம் பஸ் நிலையம் உள்ளிட்டவற்றில் அதிகளவில் மக்கள் காணப்பட்டனர். ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கட்டுக்கடங்காத கூட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் தனியார் பேருந்துகளை போக்குவரத்து துறை வாடகைக்கு எடுத்து இயக்கி வருகிறது. இருப்பினும் பஸ்களில் மக்கள் நின்றபடி பயணம் செய்ய வேண்டிய நிலை தான் இருந்தது. அதேபோல் நேற்று இரவு சென்னையில் தென்மாவட்டங்களுக்கு கிளம்பிய ரயில்களில் இடமின்றி பலரும் வாசல்களில் தொங்கியபடி பயணித்தனர்.
அதேபோல் கோவை சிங்காநல்லூர் பஸ் நிலையத்தில் நள்ளிரவிலும் கூட்டம் அலைமோதியது. பஸ் நிலையம் முழுவதும் ஏராளமானவர்கள் பஸ்களுக்காக காத்து நின்றனர்.
-
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
உச்ச நீதிமன்றத்தில் நேரடியாக நீதிபதியான 2-வது பெண் வழக்கறிஞர்! கோவையை சேர்ந்த மோகனா.. பின்னணி -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக்












Click it and Unblock the Notifications