இப்பவே அதிகாரத்தை கொடுங்க... சக்கரநாற்காலியில் உட்கார்ந்த பிறகு கொடுக்காதீங்க - சீமான்
உங்களை நம்பித்தான் தேர்தலில் தனித்து போட்டியிடுகிறேன் எனக்கு இப்போதே முதல்வர் நாற்காலியை கொடுத்து விடுங்கள் என்று சொன்னார்.
சென்னை: இலவசங்களையும் கவர்ச்சித் திட்டங்களையும் அறிவிக்கப் போவதில்லை. மக்களுக்கு இலவசங்களே தேவைப்படாத அளவிற்கு வாழ்க்கைத்தரத்தை மாற்றுவோம் என்று கூறியுள்ளார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். திருவொற்றியூர் தொகுதியில் முதல் பிரச்சாரத்தை தொடங்கிய சீமான், ஓடி ஆடி வேலை செய்யக்கூடிய தெம்பு இருக்கும் போதே அதிகாரத்தை கொடுங்கள் சிறப்பான ஆட்சியை தருகிறோம் என்று கூறி வாக்கு சேகரித்தார்.
சட்டசபைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது நாம் தமிழர் கட்சி. ஒரே மேடையில் வேட்பாளர்களை அறிமுகம் செய்து விட்டு பிரச்சாரத்திற்கு கிளம்பி விட்டார் சீமான்.
சென்னை திருவொற்றியூரில் களம் காண்கிறார் சீமான். விவசாயி சின்னத்தில் வாக்களிக்குமாறு வாக்கு சேகரித்த சீமான், முதல் பிரச்சாரத்திலேயே அதிரடியான வாக்குறுதிகளை அளித்தார். மிக்சி தருகிறேன், டிவி தருகிறேன் என்று இலவசங்களை கவர்ச்சி திட்டங்களை அறிவிக்க மாட்டேன் என்று கூறினார்.

தரமான கல்வி வேலை வாய்ப்பு
உங்களை நம்பி இந்த தொகுதியில் போட்டியிடுகிறேன். நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் தரமான இலவசக் கல்வியை அளிப்போம். அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் அரசு வேலை கிடைக்கும் வகையில் உத்தரவாதத்தை கொடுப்போம் என்றார்.

தரமான மருத்துவம்
இலவசங்களை மக்கள் எதிர்பார்க்காத அளவிற்கு அவர்களின் வாழ்வை உயர்த்த முயற்சி செய்வோம். தண்ணீர் விற்பனைக்கு தடை செய்வோம். தரமான மருத்துவம் ,கல்வி ,கல்விக்கு ஏற்ற வேலை வாய்ப்பினை அளிப்போம் என்றார்

மக்களின் வாழ்வாதாரம் பாதிப்பு
அனல் மின் நிலையத்தை உருவாக்கி வாழும் இடத்தை அழித்து சாம்பலாக்கி கொண்டிருக்கிறார்கள். காட்டுப்பள்ளியில் 6000 ஏக்கர் இடத்தை அதானி வாங்கி மக்களின் வாழ்வாதாரத்தை ஒழித்துக்கட்ட முடிவு செய்துள்ளார். பிரபாகரனின் தம்பி நான்; எதற்கும் சமரசம் செய்யாமல் சண்டை போடும் துணிவு கொண்டவன்.

இப்போதே பதவி கொடுங்கள்
உடம்பில் ஆடி ஓடி வேலை செய்ய தெம்பு இருக்கும் போதே கொண்டு போய் அதிகாரத்தில் அமர வைத்து விடுங்கள் நாங்கள் சிறப்பான ஆட்சியை உங்களுக்குக் கொடுக்கிறோம். சக்கர நாற்காலியில் அமர்ந்த பிறகு பதவி கொடுத்தால் வேலை செய்ய முடியாது எனவே இப்போதே ஜெயிக்க வைத்து விடுங்கள் என்று வாக்கு சேகரித்தார் சீமான்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications