கிளைமேக்ஸ் இதுதான்.. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று! வந்து குவிந்த 7400+ வேட்புமனுக்கள்
சென்னை: தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்றோடு நிறைவடைந்தது. இந்தச் சூழலில் தான் தேர்தலில் போட்டியிடத் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடக்கிறது. மாநிலம் முழுக்க 7400க்கும் மேற்பட்டோர் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ள சூழலில், இன்று அவை பரிசீலனை செய்யப்படவுள்ளது.
தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. மாநிலத்தில் வரும் 23ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள சூழலில் அனைத்து கட்சிகளும் இறங்கி பிரச்சாரம் செய்து வருகிறது. இந்த முறை போட்டி கடுமையாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு தேர்தல்
இந்த சட்டசபைத் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் கடந்த 30ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. மொத்தம் 8 நாட்கள் கால அவகாசம் தரப்பட்ட போதிலும், 4 விடுமுறை நாட்கள் வந்துவிட்டதால் வேட்புமனு தாக்கல் செய்ய 4 நாட்கள் மட்டுமே இருந்தது. இந்த சூழலில் தான் நேற்றைய தினம் திங்களுடன் வேட்புமனு தாக்கல் செய்யும் காலக்கெடு நிறைவடைந்தது. கடைசி நாளில் பலர் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தனர்.
பரிசீலனை
இந்த சூழலில் தான் தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் போட்டியிடத் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் இன்று பரிசீலனை செய்யப்படும். வேட்புமனுக்கள் முறையாக நிரப்பப்பட்டுள்ளதா.. அனைத்து தேவையான தகவல்களும் தெரிவிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து விரிவாகப் பரிசீலனை செய்வார்கள். உரிய முறை நிரப்பப்படாத வேட்புமனுக்கள் காரணத்தோடு நிராகரிக்கப்படும்.
தொடர்ந்து வேட்புமனுக்களை வாபஸ் பெற கால அவகாசம் தரப்படும். போட்டியிட விரும்பாதவர்கள், மாற்று வேட்பாளர்கள் வேட்புமனுக்களை வாபஸ் பெறுவார்கள். இதுபோல வரும் 9ம் தேதி வரை வேட்புமனுக்களை வாபஸ் பெறலாம். அதைத் தொடர்ந்து தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதி பட்டியல் வெளியிடப்படும்.
7400 வேட்பாளர்கள்
தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கலுக்கான கால அவகாசம் ஆரம்பித்தது முதலே பலரும் ஆர்வமாக வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர். மாநிலம் முழுக்க 7400க்கும் மேற்பட்டோர் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். அதிலும் குறிப்பாகத் தலைநகர் சென்னையில் மட்டும் 600க்கும் மேற்பட்டோர் போட்டியிட வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்
தமிழ்நாடு தேர்தல்
தமிழகத்தில் வழக்கம் போல இந்த முறையும் ஒரே கட்டமாக சட்டசபைத் தேர்தல் நடக்கிறது. வரும் ஏப்ரல் 23ம் தேதி மாநிலத்தில் ஒரே கட்டமாகத் தேர்தல் நடக்கும் சூழலில், 4 மாநில தேர்தல் முடிவுகளோடு மே 4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டுத் தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும்.
மாநிலத்தில் இந்த முறை பல முனை போட்டி உருவாகியுள்ளது. களத்தில் திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் வழக்கம் போல வலுவான கூட்டணியை உருவாக்கியுள்ளன. நாம் தமிழர் கட்சி வழக்கம் போலத் தனித்துப் போட்டியிடுகிறது. தேர்தலில் முதல்முறையாகக் களமிறங்கும் விஜய்யின் தவெக கட்சியும் இந்த முறை தனித்தே போட்டியிடுகிறது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications