"சம்மட்டி அடி".. எடப்பாடி அவ்வளவு போராடினாரே.. சல்லி சல்லியாக உடைத்த "அப்பாவு".. மொத்தமாக போச்சே!
சென்னை: தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிமுக எம்எல்ஏக்கள் இந்த கூட்டத்தை மொத்தமாக புறக்கணிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் தமிழ்நாடு சட்டசபையின் நடப்பாண்டு முதல் கூட்டத் தொடர் இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது. பொதுவாக சட்டசபை கூட்டத்தொடரின் முதல் நாள் ஆளுநர் உரையுடன் தொடங்கும். இன்று 2023-ம் ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத் தொடர் என்பதால் தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்ற உள்ளார்.
பொதுவாக ஆளுநர் உரைகளை, ஆளுநர் படித்தாலும் அது தமிழ்நாடு அரசு தயாரித்து தரக் கூடிய உரைதான். 2021ல் திமுக ஆட்சிக்கு வந்த பின் நடந்த ஆளுநர் உரையில் ஜெய் ஹிந்த் என்ற வார்த்தை இடம்பெறவில்லை என்பது சர்ச்சையானது.

சட்டசபை கூட்டம்
அதன்பின் மீண்டும் நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல்நாள் உரையில் ஆளுநர் ஜெய் ஹிந்த் என்று கூறினார். அதேபோல் இந்த முறை தமிழ்நாடு அரசு, தமிழக அரசு என்ற பெயர் சர்ச்சை எழுந்துள்ளது. தமிழ்நாடு என்ற பெயருக்கு பதில் தமிழகம் என்ற பெயர் இருப்பதுதான் சரியாக இருக்கும் என தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியிருந்தார் .இது பெரிய சர்ச்சையாகி உள்ளது. அவரின் பேச்சுக்கு கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆளும் திமுக தரப்பு நிர்வாகிகள் பலர் ஆளுநர் பேச்சை கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். அதிமுகவில் கூட ஜெயக்குமார் போன்றவர்கள் ஆளுநர் பேச்சை கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.

இன்று என்ன சொல்வார்?
இந்த நிலையில் இன்று நடக்கும் கூட்ட தொடரில் தமிழ்நாடு என்பதை ஆளுநர் உச்சரிப்பாரா? அல்லது தமிழகம் என மாற்றி சொல்வாரா? என்பது பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இன்று காலை 10 மணிக்கு ஆளுநர் ரவி தமது உரையை வாசிப்பார். ஆளுநர் ஆர்.என்.ரவி. உரையை வாசித்ததும் அதன் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசிப்பார். இந்த உரைகள் அனைத்தும் இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும். ஆளுநர் உரையுடன் இன்றைய கூட்டம் ஒத்திவைக்கப்படும். இன்று நடக்கும் கூட்டத்தொடரில் எடப்பாடி பழனிசாமி - ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் அருகருகே அமர்வார்களா, புதிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன் வரிசைக்கு வருவாரா போன்ற கேள்விகளும் எழுந்துள்ளன. முக்கியமாக எடப்பாடி பழனிசாமி - ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் அருகருகே அமர வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அருகருகே அமர்வார்கள்
இந்த கூட்டத்தொடரில் அதிமுக உட்கட்சி மோதல் கைகலப்பாக மாறும் அளவிற்கு, நிலைமை கைமீறி போகும் வாய்ப்புகள் உள்ளன. யார் எங்கே உட்காருவது என்ற இருப்பிட பிரச்சனை காரணமாக அதிமுகவில் இரண்டு தரப்பும் கடுமையாக மோதிக்கொள்ளும் வாய்ப்புகள் உள்ளன. எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கையில் ஓ பன்னீர்செல்வத்தை அமர வைக்க கூடாது என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு சபாநாயகர் அப்பாவுவிற்கு கடிதம் எழுதி இருந்தது. ஆர்பி உதயகுமார்தான் அதிமுகவின் எதிர்க்கட்சி துணை தலைவர். அதனால் அவரைத்தான் அந்த இருக்கையில் அமர வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. ஆனால், நான்தான் எதிர்க்கட்சி துணை தலைவர். அதனால் நான்தான் அந்த இடத்தில் தொடர வேண்டும். உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடக்கையில் இதில் முடிவு எடுக்க கூடாது என்று ஓ பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்தார்.

கோரிக்கை
இரண்டு தரப்பும் வைத்த கோரிக்கையால் இன்னும் அப்பாவு இருக்கைகளை மாற்றவில்லை. இருவருக்கும் அருகருகேதான் அப்பாவு இருக்கை போட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாடு சட்டசபையில் கடந்த முறை, அக்டோபர் மாதம் கூட்டம் கூடிய போது இருக்கைகள் மாற்றம் செய்யப்படவில்லை. எதிர்க்கட்சி தலைவர் இருக்கை எடப்பாடி பழனிசாமிக்கும், எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை ஓ பன்னீர்செல்வத்திற்கும் அளிக்கப்பட்டு இருந்தது. ஆர்பி உதயகுமாருக்கு அந்த இருக்கை அளிக்கப்படவில்லை. இதனால் எடப்பாடி இருக்கையில் அமராமல், ஒரு நிமிடம் இருந்துவிட்டு அதன்பின் அவைக்கு நடுவே வந்து தர்ணா செய்யும் நிலை ஏற்பட்டது. அப்போது கூட்டத்தொடர் சில நாட்கள் மட்டுமே நடந்தது என்பதால், இது பெரிதாக பிரச்சனை ஆகவில்லை. ஆனால் இந்த முறை கூட்டத்தொடர் ஒரு வாரத்திற்கு நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனவரி
எத்தனை நாட்கள் கூட்ட தொடர் நடக்கும் என்று இன்று முடிவு செய்யப்பட உள்ளது. அப்படி இருக்கும் போது இருவருக்கும் அருகருகே இருக்கைகள் ஒதுக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் எடப்பாடி பழனிசாமி கூட்டத்தை புறக்கணிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதாவது ஆர்.பி உதயகுமாரை எதிர்க்கட்சி துணை தலைவராக அங்கீகரியுங்கள். அவருக்கு ஓபிஎஸ் இடத்தை கொடுங்கள். இல்லையென்றால் கூட்டத்தை புறக்கணிப்போம் என்ற முடிவை எடப்பாடி எடுப்பாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இது தொடர்பாக முன்பே அப்பாவு அளித்த பேட்டியில், அதிமுகவில் மோதலில் ஈடுபடும் இரண்டு பேருமே மூத்த தலைவர்கள். இரண்டு பேருமே ஒரே சின்னத்தில் போட்டியிட்டு வென்றவர்கள். ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் முதலமைச்சர்களாக இருந்தவர்கள். நிச்சயம் கண்ணியமாக நடந்துகொள்வார்கள். அதேபோல் இருக்கைகள் ஒதுக்குவது தொடர்பாக சட்டமன்ற மரபுப்படியே நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் ஆணையத்தில் இருக்கும் ஆவணங்களின் அடிப்படையில்தான் முடிவு எடுக்கப்படும் என்று கூறி இருந்தார்.

தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணைய ஆவணங்களின்படி ஓபிஎஸ் இன்னும் அதிமுக உறுப்பினர்தான். அவர் இன்னும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்றுதான் தேர்தல் ஆணையம் சொல்லி இருக்கிறது. குறிப்பாக புலம் பெயர்ந்தோருக்கு அந்தந்தப் பகுதிகளில் வாக்களிக்க வசதி செய்யும் ரிமோட் வாக்குப்பதிவு முறை குறித்து விளக்கம் கேட்க அதிமுகவிற்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியது. ஜனவரி 16ம் தேதி நடக்கும் கூட்டத்தில் கலந்து கொள்ள அதிமுகவிற்கு கடிதம் அனுப்பப்பட்டது. அதிமுகவுக்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டது. இந்த கடிதத்தை எடப்பாடி தரப்பினர் திருப்பி அனுப்பி உள்ளனர். இதற்கு தற்போது தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு பதில் அளித்துள்ளார். அதில், தேர்தல் ஆணையத்திடம் இந்த தகவல்தான் உள்ளது. இந்திய தேர்தல் ஆணைய ஆவணத்தில் அப்படித்தான் இருக்கிறது. அதில், அதிமுகவில் இன்றைய தேதி வரை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள்தான் உள்ளது, என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் அப்பாவுவும் இதுவரை எதிர்க்கட்சி துணை தலைவர் மாற்றத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே நடப்பு சட்டசபை கூட்டத்தை புறக்கணிப்போம் என்ற முடிவை எடப்பாடி எடுப்பாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
-
அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..டபுள் ஆன ஊதியம்! அதிரடியாக வெளியான ஆர்டர்! யார் யாருக்கு? எவ்வளவு? -
Toll Charge: தமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்வு! பொதுமக்கள் அதிர்ச்சி! -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
இன்று முதல் புதிய வருமான வரி விதிகள் அமல்! சம்பளதாரர்கள் கவனிக்க வேண்டிய 'டாப் 10' மாற்றங்கள்! -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications