Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

OPS vs TAPS: உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தால் எந்த பலனும் இல்லை.. போர்க் கொடி தூக்கிய அரசு ஊழியர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் கிட்டத்தட்ட 22 ஆண்டுகளுக்கும் மேலாக பழைய ஓய்வூதிய திட்டம் வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் தமிழ்நாடு "உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை" ((Tamil Nadu Assured Pension Scheme - TAPS)) செயல்படுத்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்புக்கு பெரும்பாலான அரசு ஊழியர்கள் சங்கங்கள் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில், இந்தத் திட்டத்தால் எந்த பலனும் இல்லை எனக் கூறியிருக்கிறார் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் மாநில சிறப்பு தலைவரான பாலசுப்ரமணியன்.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 2003 ஆம் ஆண்டு வரை பழைய ஓய்வூதிய திட்டம் அமலில் இருந்த நிலையில், 2003 ஆம் ஆண்டு முதல் புதிய ஓய்வூதிய திட்டம், அதாவது பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது.

pension

இதனால் ஆத்திரமடைந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தனர். இதை அடுத்து ஒரு சில மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல்படுத்தப்பட்ட நிலையில் தமிழகத்தில் புதிய ஓய்வூதிய திட்டமே அமலில் உள்ளது.

பழைய ஓய்வூதிய திட்டம்

இந்த நிலையில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாக பழைய ஓய்வூதிய திட்டம் வேண்டும் என அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதற்கிடையே 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தப்படும் என வாக்குறுதி கொடுத்தது. நான்கு ஆண்டுகள் ஆகியும் அது நிறைவேற்றப்படாத நிலையில் தற்போது ஆட்சி நிறைவடையும் சூழலில், அரசு ஊழியர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம்

தொடர்ந்து தமிழ்நாடு அரசு பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து ஆராய்வதற்காக தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை செயலர் ககன்திப் சிங் பேடி தலைமையில் குழுவை அமைத்தது. கடந்த அக்டோபர் மாதம் இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்த இந்த குழு, தற்போது விரிவான அறிக்கையை தாக்கல் செய்துது. தமிழ்நாடு அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் கிட்டத்தட்ட 22 ஆண்டுகளுக்கும் மேலாக பழைய ஓய்வூதிய திட்டம் வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் தமிழ்நாடு "உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை" (Tamil Nadu Assured Pension Scheme - TAPS) செயல்படுத்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

ஜாக்டோ ஜியோ

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த உத்தரவால் மகிழ்ச்சி அடைந்துள்ள தமிழ்நாடு அரசு ஊழியர்கள் முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளனர். மேலும் ஜனவரி 6 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த ஜாக்டோ ஜியோ போராட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் இந்த ஓய்வூதிய திட்டத்தின் பெயர் அறிவிப்பில் ஈர்ப்பு மட்டுமே இருக்கிறது எந்த பலனும் இல்லை என குற்றம் சாட்டியுள்ளார் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் மாநில சிறப்பு குழு தலைவரான பாலசுப்ரமணியன்.

அரசு ஊழியர்கள் ஓய்வூதியம்

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர்," பழைய ஓய்வூதிய திட்டம், புதிய ஓய்வூதிய திட்டம், மத்திய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் என ஏற்கனவே மூன்று திட்டங்கள் அமலில் உள்ள நிலையில், நான்காவதாக தான் தமிழ்நாடு அரசின் உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் வரவேற்பும் குறைபாடுகளும் பாதிக்கு பாதி இருக்கிறது. பெயரில் ஈர்ப்பு இருந்தாலும் எந்த பலனும் இல்லை. இந்த அறிவிப்பு தேர்தலுக்கு மட்டுமே பயன்படும்.

ஓய்வூதிய கோரிக்கை

இந்தத் திட்டத்தின் கீழ் 30 வருடங்கள் முழுமையாக பணியாற்றியவர்களுக்கே கடைசி மாதச் சம்பளத்தின் சுமார் பாதி அளவில்தான் ஓய்வூதியம் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த நிபந்தனை நீக்கப்பட வேண்டும். அரசின் கீழ் பணிபுரியும் காலமுறை ஊதிய பணியாளர்கள், தொகுப்பூதிய பணியாளர்கள், அவுட்சோர்சிங் ஊழியர்கள் என நான்கு லட்சம் பேருக்கும் இந்தத் திட்டம் கொண்டு வரப்பட வேண்டும். தொகுப்பூதிய பணியாளர்களுக்கு குறைந்தது ரூ.10 ஆயிரம் ஓய்வூதியமாக வழங்க வேண்டும்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+