ஊக்க மருந்து பயன்படுத்தியதாக புகார்.. தமிழக தடகள வீராங்கனை தனலட்சுமி சேகருக்கு 8 ஆண்டுகள் தடை
சென்னை: ஊக்க மருத்து புகாரில் தமிழ்நாட்டை சேர்ந்த தடகள வீராங்கனை தனலட்சுமிக்கு 8 ஆண்டுகள் தடை விதித்து தேசிய ஊக்க மருந்து எதிர்ப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. ஏற்கனவே கடந்த 2022 ஆம் ஆண்டு ஊக்க மருந்து பயன்படுத்தியதாக 3 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டிருந்தது.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மீண்டும் களத்துக்கு திரும்பிய நிலையில் தற்போது நடந்த ஊக்க மருந்து சோதனையில் தோல்வியடைந்துள்ளார். இதையடுத்து அவருக்கு 8 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தடகள வீராங்கனை தனலட்சுமி சேகர்
திருச்சி மாவட்டம் குண்டூர் பகுதியை சேர்ந்த வீராங்கனையான தனலட்சுமி பல்வேறு தேசிய தடகள போட்டிகளில் பங்கேற்றுள்ளார். தங்கம், வெள்ளி உள்ளிட்ட பதக்கங்களை வென்றுள்ள தனலட்சுமி சேகர், ஜப்பான் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் 400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்ட போட்டிக்கு தேர்வாகி இருந்தார்.
கடந்த 2021 ஆண்டு நடைபெற்ற தேசிய ஃபெடரேஷன் கோப்பை தொடரில் தனலட்சுமி 200 மீட்டர் தூரத்தை 23 புள்ளி 26 விநாடிகளில் கடந்து சாதனை படைத்து இருந்தார். இதன் மூலம் 23 ஆண்டுகள் பி.டி. உஷாவின் சாதனையை தனலட்சுமி தகர்த்து எறிந்தார். இப்படி தடகள போட்டிகளில் பல்வேறு சாதனைகளை செய்த தனலட்சுமி சேகர் தற்போது ஊக்க மருந்து சர்சையில் சிக்கி தடையை எதிர்கொண்டுள்ளார்.
ஊக்க மருந்து சோதனை
கடந்த 2022 ஆம் ஆண்டுக்கான காமன்வெல்த் போட்டிகள் பிரிட்டனின் பிர்மிங்காஹாமில் நடைபெற்றது. இந்த காமன்வெல்த் தடகள போட்டியில் இந்தியா 36 வீரர், வீராங்கனைகள் கொண்ட குழுவினை அறிவித்து இருந்தது. மொத்தம் 72 நாடுகள் பங்கேற்று இருந்த நிலையில் இதில் பல்வேறு பதக்கங்களை வென்றது.
இந்த காமன்வெல்த் தொடரில் 200 மீட்டர் தடகளம் மற்றும் ரிலே போட்டியில் தமிழக வீராங்கனையான தனலட்சுமி சேகர் கலந்துகொள்ள இருந்தார். இதனால் இப்போட்டியில் தனலட்சுமி வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் போட்டிக்கு முன்பாக ஊக்க மருந்து பயன்படுத்தியிருக்கிறார்களா என சோதிப்பதற்காக அனைத்து நாடுகளின் வீரர், வீராங்கனைகளின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைகள் நடந்தன.
3 ஆண்டுகள் தடை விதிப்பு
இந்த சோதனையின் முடிவில் தமிழக வீராங்கனை தனலட்சுமி சேகர் ஊக்கமருந்து பயன்படுத்தியது தெரியவந்தது. அதாவது தடை செய்யப்பட்ட மருந்தை பயன்படுத்தினார் என சோதனை முடிவில் தெரியவந்தது. இதன் பின்னர் இந்த போட்டியில் இருந்தே தனலட்சுமி நீக்கப்பட்டார். இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இதன்பின்னர் தனலட்சுமிக்கு 4 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. இதன் பின்னர் ஊக்க மருந்தை தான் பயன்படுத்தியதை அவரே ஒப்புக்கொண்டார். இதனால் இந்த தடையானது 3 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது. இதையடுத்து தற்போது இவரது தடைக்காலம் முடிவடைந்தது. அதாவது கடந்த ஆகஸ்டு மாதம் இவரது தடைக்காலம் முடிவடைந்து இருந்தது.
8 ஆண்டுகள் தடை
இதன் பிறகு அவர் மீண்டும் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் தான் மீண்டும் அவருக்கு நடந்த ஊக்க மருந்து சோதனையில் தோல்வியடைந்துள்ளார். இதையடுத்து அவருக்கு மேலும் 8 ஆண்டுகள் தடை விதித்து தேசிய ஊக்க மருந்து எதிர்ப்பு நிறுவனம் அறிவித்தது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications