மூளையை தின்னும் அமீபா.. தமிழகத்திலும் குளம், குட்டை, ஏரிகளில் குளிக்க தடை! உஷார் மக்களே!
சென்னை: கேரளாவில் அசுத்தமான நீர் நிலைகளில் குளித்தவர்களுக்கு மூளை அழற்சி பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இந்நிலையில், தமிழகத்தில் அசுத்தமான நீர் நிலைகளில் குளிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று உள்ளாட்சி அமைப்புகளுக்கு பொது சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.
கேரளாவில் ஆறுகள், ஏரிகள், குளம், குட்டைகளில் குளித்தவர்களுக்கு மூளை அழற்சி பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இந்த பாதிப்பு ஏற்பட்டவர்கள் மரணமடைந்திருக்கிறார்கள்.

மூளையை தின்னும் அமீபா
இந்த மூளை அழற்சிக்கு காரணம் 'நெக்லேரியா ஃபோலேரி' எனும் தனி செல் கொண்ட அமீபாதான். வழக்கமாக இந்த அமீபா உள்ள நீரை மனிதர்கள் குடிப்பதால் எந்த பாதிப்பும் ஏற்படாது. ஏனெனில் இது நேரடியாக குடல் வழியாக இரைப்பைக்குள் செல்கிறது. இப்படி உள்ளே வரும் அமீபாவை, வயிற்றுக்குள் இருக்கும் நொதிக்கும் அமிலங்கள் தாக்கி அழித்துவிடும். பின்னர் மலம் வழியாக இந்த அமீபா வெளியேற்றப்பட்டுவிடும். பிரச்சனை மூக்கு வழியாக செல்வதால்தான் ஏற்படுகிறது.
மூக்கு வழியாக பயணிக்கும் அமீபா
மூக்கு வழியாக பயணிக்கும் இந்த அமீபா, மோப்ப நரம்பு வழியாக சென்று மூளையை அடைகிறது. அங்கு தங்கி, மூளையை தாக்கி அதை முடக்கி மூளை அழற்சியை ஏற்படுத்துகிறது. இந்த அமீபா மூளையை தாக்கியவுடன் அதன் அறிகுறிகள் தெளிவாக தெரியும். குறிப்பாக கடுமையான தலைவலி, காய்ச்சல், குமட்டல் மற்றும் வாந்தி ஆகியவை ஏற்படும். கழுத்து இறுக்கம், குழப்பம், கவனம் செலுத்துவதில் சிரமம், வலிப்பு ஏற்பட்டு இறுதியாக பாதிக்கப்பட்ட நபர் கோமா நிலைக்கு சென்று விடுவார்.
பம்பை ஆறு
உடனடியாக நோய் கண்டறியப்பட்டு தீவிர சிகிச்சை அளித்தாலும், இந்த நோயிலிருந்து தப்பிக்கும் வாய்ப்பு மிக மிகக் குறைவு. இந்தத் தொற்று மிக வேகமாக பரவுவதால், பெரும்பாலும் அறிகுறிகள் தோன்றிய 5 நாட்களுக்குள் மரணம் ஏற்படுகிறது. கேரளாவில் இப்படியான மரணங்கள் பதிவாகியிருக்கின்றன. எனவே நீர் நிலைகளில் குளோரின் கலப்பதை அம்மாநில அரசு கட்டாயமாக்கியிருக்கிறது. குளம், குட்டை எனில் ஓகே.. ஆனால், ஆறுகள் போன்ற ஓடும் தண்ணீரில் குளோரின் கலப்பது பலனளிக்காது. எனவே சபரி மலைக்கு வரும் ஐயப்ப பக்தர்கள், பம்பை ஆற்றில் மூக்கை மூடிக்கொண்டு குளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கின்றனர்.
கேரளாவில் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த வைரஸ், தமிழ்நாட்டிலும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று அஞ்சப்படுவதால், அசுத்தமான நீர் நிலைகளில் குளிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று உள்ளாட்சி அமைப்புகளுக்கு பொது சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.
அறிவுறுத்தல்கள்
இது தொடர்பாக பொது சுகாதாரத்துறை இயக்குநர் சோமசுந்தரம், உள்ளாட்சி அமைப்புகளுக்கு சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, "தேங்கிய நீரிலோ, அசுத்தமான அல்லது மாசடைந்த நீரிலோ பொது மக்களும், குறிப்பாக குழந்தைகளும் குளிக்கக் கூடாது. குளம், ஏரி உள்ளிட்ட நீர்நிலைகள் அனைத்தும் தூய்மையான சூழலில் இருப்பதை உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்ய வேண்டும். தனியார் மற்றும் அரசு நீச்சல் குளங்கள் அனைத்தும் அரசு வழிகாட்டுதலின்படி தூய்மையாக பராமரிக்க வேண்டும்.
தண்ணீரில் குறிப்பிட்ட அளவு குளோரின் கலந்திருத்தல் முக்கியம். நீா் நிலைகள் தூய்மையாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அதேபோன்று அதில் இறங்குவதற்கும், குளிப்பதற்கும் தடை விதிக்க வேண்டும். மூளையழற்சி அறிகுறிகளுடன் மருத்துவமனைகளுக்கு வருவோரை தீவிர மருத்துவக் கண்காணிப்புக்கு உட்படுத்த வேண்டும். உயா் சிறப்பு சிகிச்சைகள் தேவைப்படுவோருக்கு அந்த வசதிகள் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
-
பத்திரப்பதிவு செய்ய இனி சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம்! தமிழக அரசு அதிரடி! -
செந்தில் பாலாஜி கைதாகிறாரா? தவெக கடிதத்திற்கு ஓகே சொன்ன ஆளுநர்! மறுபடியும் முதல்ல இருந்தா? -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
கமல், கார்த்திக் கூடதான் கட்சி ஆரம்பிச்சாங்க! என்னாச்சு? அண்ணாமலைலாம் ஒரு ஆளே இல்லை! முஸ்தபா விமர்சனம் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
விஜய் வந்தும் வேலைக்கு ஆகல! சர்ச்சையை கிளப்பும் சட்டம் ஒழுங்கு.. டிஜிபி அதிரடி உத்தரவு! -
தேசிய விருது பெற்ற பிரபல காமெடி நடிகர் சலீம் குமார் திடீர் மரணம்.. சோகத்தில் மூழ்கிய மலையாள திரையுலகம்! -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி!












Click it and Unblock the Notifications