திமுக ஆட்சிக்கு வந்த.. 3 ஆண்டுகளில் எதிர்பார்க்காத ட்விஸ்ட்! தமிழ்நாடு படைத்த சாதனை! தலைகீழ் மாற்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த 3 வருடங்களில் ஸ்டார்ட் அப் துறையில் தமிழ்நாடு புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. எதிர்பாராத வளர்ச்சியை இந்த துறையில் தமிழ்நாடு அரசு பெற்றுள்ளது.

தமிழகத்தில் உருவாகி வரும் Startup தொடர்பான வளர்ச்சி மிகப்பெரிய வளர்ச்சி அளிக்கும் ஒன்றாக மாறி உள்ளது.

🔹2021 இல் தமிழ்நாட்டில் ஸ்டார்ட்அப்களின் எண்ணிக்கை : 2,032
🔹2024 இல் தமிழ்நாட்டில் ஸ்டார்ட்அப்களின் எண்ணிக்கை : 8,416

Tamil Nadu become a new star in Start up Investments and business

அதன்படி திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த 3 ஆண்டுகளில் தமிழகத்தில் ஸ்டார்ட்அப்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. முக்கியமாக பெண்களுக்கு சொந்தமான ஸ்டார்ட்அப்கள் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. புதிய திட்டங்களில் TANSEED, SC/ST தொடக்க நிதி, TANFUND, TN வழிகாட்டி மற்றும் உலகளாவிய தமிழ் புலம்பெயர்ந்தோருடன் எளிதாக இணைத்து தமிழ்நாட்டில் ஸ்டார்ட் அப் தொடங்க காரணமாக உள்ளது.

எங்கள் வீட்டில் வளர்க்கப்படும் நிறுவனங்கள் உயரத்தை எட்டுவதைக் காண நம்புகிறேன்

கடந்த சில மாதங்கள் முன் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் இரண்டு நாட்களில் 4 இலட்சம் நேரடி புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. மொத்தமாக இந்த மாநாட்டில் 6.64 லட்சம் கோடி ரூபாய்க்கு முதலீடு செய்யப்பட்டு உள்ளன.

டாடா - 12,082 கோடி ரூபாய் முதலீடு 40,500 பேருக்கு வேலைவாய்ப்பு
வின்பாஸ்ட் - 16,000 கோடி ரூபாய் முதலீடு 3,500 பேருக்கு வேலைவாய்ப்பு
ஜே.எஸ்.டபிள்யூ - ரூ.12,000 கோடி ரூபாய் முதலீடு 6,600 பேருக்கு வேலைவாய்ப்பு
பர்ஸ்ட் சோலார்- 8,100 கோடி ரூபாய் முதலீடு 1.100 பேருக்கு வேலைவாய்ப்பு
TVS - 5,000 கோடி ரூபாய் முதலீடு 500 பேருக்கு வேலைவாய்ப்பு
பெகட்ரான் - 1,000 கோடி ரூபாய் முதலீடு 8,000 பேருக்கு வேலைவாய்ப்பு
மிட்சுபிஷி - ரூ.200 கோடி ரூபாய் முதலீடு 50 பேருக்கு வேலைவாய்ப்பு
கோத்ரெஜ்- 515 கோடி ரூபாய் முதலீடு 446 பேருக்கு வேலைவாய்ப்பு
Qualcomm - 177 கோடி ரூபாய் முதலீடு 1,600 பேருக்கு வேலைவாய்ப்பு
ஹூண்டாய் - 1,180 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளன.

இதில் கவனிக்கப்பட்ட 4 முதலீடுகள்

டாடா - 12,082 கோடி ரூபாய் முதலீடு 40,500 பேருக்கு வேலைவாய்ப்பு
வின்பாஸ்ட் - 16,000 கோடி ரூபாய் முதலீடு 3,500 பேருக்கு வேலைவாய்ப்பு
பெகட்ரான் - 1,000 கோடி ரூபாய் முதலீடு 8,000 பேருக்கு வேலைவாய்ப்பு
ஹூண்டாய் - 1,180 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளன.

இந்த முதலீடுகள் தொடர்பான முக்கிய அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாக தொடங்கி உள்ளன. புதிய சில முதலீடுகள் பற்றிய அறிவிப்புகளும் வர தொடங்கி விட்டன.

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், எறையூர் சிப்காட் தொழில் வளாகம் ஃபீனிக்ஸ் கோத்தாரி காலணிப் பூங்காவில் ரூ.400 கோடி முதலீட்டில் 4,000 பேர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் JR One காலணி உற்பத்தித் தொழிற்சாலை உருவாக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் சென்னையில் மட்டுமின்றி மற்ற மாவட்டங்களிலும் முதலீடுகள் பெருகி வருகின்றன. மிக அதிக அளவில் முதலீடுகள் செய்யப்பட்டு வருகின்றன. முக்கியமாக தென் மாவட்டங்களில், மேற்கு மாவட்டங்களில் முதலீடுகள் அதிக அளவில் செய்யப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் தமிழ்நாட்டிலேயே கிராக்ஸ் உள்ளிட்ட காலணிகளை தயாரிக்கும் விதமாக முக்கியமான தொழிற்சாலை தொடங்கப்பட்டு உள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று பெரம்பலூர் மாவட்டம், எறையூர் சிப்காட் தொழில் வளாகத்தில் அமைந்துள்ள ஃபீனிக்ஸ் கோத்தாரி காலணிப் பூங்காவில் 400 கோடி ரூபாய் முதலீட்டில் 4,000 பேர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் நிறுவப்பட்டுள்ள JR One காலணி உற்பத்தித் தொழிற்சாலையை காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார்.

தமிழ்நாட்டில் தொழிற் புரட்சி: இத்தொழிற்சாலையை அமைக்க 28.11.2022 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டினார்கள் அதன் பின்னர், மிகச் சரியாக ஓர் ஆண்டு காலத்தில் இத்தொழிற்சாலை நிறுவப்பட்டு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் இன்று காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்திய அளவில் தமிழ்நாடு பல பொருளாதாரக் குறியீடுகளில் முன்னணி மாநிலமாக விளங்கி வருகிறது. இப்பெருமை நிலைபெறவும், பெரும் அளவிலான முதலீடுகளை ஈர்த்து தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கி, அவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்திடவும், மாநிலத்தில் பரவலான வளர்ச்சியை உறுதி செய்திடவும் தமிழ்நாடு அரசின் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை பல்வேறு நடவடிக்கைகளை முனைப்புடன் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+