தமிழக பாஜகவில் அதிரடி மாற்றம்.. 33 மாவட்டங்களுக்கு புதிய தலைவர்கள் நியமனம்.. முழு லிஸ்ட் இதோ
சென்னை: நாடு முழுவதும் பாஜகவில் உள்கட்சி தேர்தல் நடந்து வருகிறது. அந்த வகையில் பாஜகவில் நடைபெற்ற உட்கட்சி தேர்தலின் அடிப்படையில் தமிழ்நாட்டில் 33 மாவட்டங்களுக்கு புதிய தலைவர்களை நியமித்து அந்த கட்சியின் மாநில தேர்தல் அதிகாரி எம் சக்கரவர்த்தி அறிவித்துள்ளார். இதில் ஜோஹோ நிறுவனத்தின் ஸ்ரீதர் வேம்புவின் ஆதரவாளர் ஆனந்தன் அய்யாசாமிக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது.
பாஜகவில் தேசிய தலைவர், மாநில தலைவர், மாவட்ட தலைவர்களின் பதவிக்காலம் என்பது 3 ஆண்டுகளாக உள்ளது. 3 ஆண்டுகளுக்கு பிறகு ஒருமுறை வேண்டுமானால் அவர்களின் பதவிக்காலம் என்பது நீட்டிப்பு செய்யப்படும்.

இல்லாவிட்டால் புதிய தலைவர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். இதற்கிடையே தான் தற்போது நாடு முழுவதும் பாஜகவில் உள்கட்சி தேர்தல் என்பது நடந்து வருகிறது. விரைவில் தேசிய தலைவர் பதவிக்கும் தேர்தல் என்பது நடத்தப்பட உள்ளது.
அந்த வகையில், தமிழக பாஜகவில் கடந்த செப்டம்பர் மாதம் உறுப்பினர் சேர்க்கை பணிகள் தொடங்கப்பட்டன. இதையடுத்து, உட்கட்சித் தேர்தல் தொடங்கின. அதில், கிளை தலைவர், மண்டல தலைவர், மாவட்ட தலைவர் என பல்வேறு பதவிகளுக்கு வாக்குப்பதிவு அடிப்படையில் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். மொத்தம் உள்ள 68 ஆயிரம் கிளைகளில் 47 ஆயிரம் கிளைகளுக்கும், 1,231 ஒன்றியத்தில் 950 ஒன்றியங்களுக்கும் தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே தான் தமிழக பாஜகவில் உள்ள 67 மாவட்டங்களில் முதற்கட்டமாக 33 மாவட்டங்களுக்கு அமைப்பு தேர்தல் மூலம் மாவட்ட தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக மாநில தேர்தல் அதிகாரியும், மாநில துணை தலைவருமான எம் சக்கரவர்த்தி புதிய மாவட்ட தலைவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
தேசிய தேர்தல் அதிகாரி அறிவுறுத்தலின்படி அமைப்பு தேர்தலில் கீழ்கண்ட மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
கன்னியாகுமரி கிழக்கு - கே.கோபகுமார்
கன்னியாகுமரி மேற்கு - ஆர்டி சுரேஷ்
தூத்துக்குடி வடக்கு - கே சரவண கிருஷ்ணன்
திருநெல்வேலி வடக்கு - ஏ முத்து பலவேசம்
திருநெல்வேலி தெற்கு - எஸ்பி தமிழ்ச்செல்வன்
தென்காசி - ஆனந்தன் அய்யாசாமி(இவர் ஜோஹோ நிறுவனத்தின் சிஇஓ ஸ்ரீதர் வேம்புவின் தீவிர ஆதரவாளர்)
விருதுநகர் கிழக்கு - ஜி பாண்டுரங்கன்
சிவகங்கை - டி பாண்டிதுரை
மதுரை கிழக்கு - ஏபி ராஜசிம்மன்
மதுரை மேற்கு - கே சிவலிங்கம்
திண்டுக்கல் கிழக்கு - டி முத்துராமலிங்கம்
தேனி - பி ராஜபாண்டி
திருச்சி நகர் - கே ஒண்டிமுத்து
திருச்சி புறநகர் - ஆர் அஞ்சாநெஞ்சன்
புதுக்கோட்டை கிழக்கு - சி ஜெகதீசன்
அரியலூர் - ஏ பரமேஸ்வரி
தஞ்சாவூர் வடக்கு - தங்க கென்னடி
திருவாரூர் - விகே செல்வம்
மயிலாடுதுறை - நாஞ்சில் ஆர் பாலு
கடலூர் கிழக்கு - அக்னி கிருஷ்ணமூர்த்தி
கடலூர் மேற்கு - கே தமிழழகன்
செங்கல்பட்டு தெற்கு - எம் பிரவீன் குமார்
செங்கல்பட்டு வடக்கு - என் ரகுராமன்
காஞ்சிபுரம் - தாமரை ஜெகதீசன்
திருவள்ளூர் கிழக்கு - எஸ் சுந்தரம்
கள்ளக்குறிச்சி- எம் பாலசுந்தரம்
வேலூர் - வி தசரதன்
திருப்பத்தூர் - எம் தண்டாயுதபாணி
சேலம் நகர் - டி வி சசிகுமார்
நாமக்கல் கிழக்கு - கேபி சரவணன்
நாமக்கல் மேற்கு - எம் ராஜேஷ் குமார்,
கோவை தெற்கு - ஆர் சந்திரசேகர்
நீலகிரி - ஏ தர்மன் என்று 33 மாவட்டங்களுக்கான தலைவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள மாவட்ட தலைவர்கள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் ஆதரவாளர்கள் என்று சொல்லப்படுகிறது. மாவட்ட தலைவர் நியமனத்தை தொடர்ந்து, மாநில தலைவர், தேசிய தலைவர் தேர்தல்கள் நடைபெறவிருக்கின்றன. அண்ணாமலையின் ஆதரவாளர்கள் தான் அதிகமாக மாவட்ட தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் நடக்கும் பாஜக மாநில தலைவர் தேர்தலிலும் மீண்டும் அண்ணாமலையே அந்த பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த தலைவர்களுக்கு பாஜக நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், பிரதமர் நரேந்திர மோடி பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா ஆகியோரின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு பாஜகவின் புதிய மாவட்டத் தலைவர்களாகப் பொறுப்பேற்றிருக்கும் அனைவருக்கும், மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தேசப் பணிகளிலும், மக்கள் பணிகளிலும் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, தமிழகத்தில், நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின்படி நல்லாட்சியைக் கொண்டு வரவும், வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி, நமது தமிழகத்தைக் கொண்டு செல்லவும், அயராது உழைக்க வேண்டும் என்று அனைவரையும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்'' என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications