இது லிஸ்ட்லயே இல்லையே.. பாஜகவிலிருந்து மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒரே ஜம்ப்! யார் இந்த முனியசாமி?
சென்னை: தமிழக பாஜகவில் முக்கிய பொறுப்பில் இருந்த வி முனியசாமி அக்கட்சிக்கு முழுக்கு போட்டு நடிகர் கமல்ஹாசன் முன்னிலையில் மக்கள் நீதிமய்யத்தில் இணைந்துள்ளார். இவர் யார்? என்பது பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் தற்போது ஒவ்வொரு அரசியல் கட்சி பிரமுகர்களும் கட்சி மாறி வருகின்றனர். குறிப்பாக அதிமுக, பாஜகவில் இருந்து நிர்வாகிகள் பிரிந்து வேறு கட்சிகளுக்கு சென்று வருகின்றனர். இதேபோல் பிற கட்சியில் இருப்பவர்கள் அதிமுக, பாஜகவில் இணைந்து வருகின்றனர்.
2024ல் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் தற்போதே திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் உள்பட அனைத்து கட்சிகளும் நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகின்றன.

பாஜகவில் விலகிய நிர்வாகி
இதனால் வரும் நாட்களில் கட்சி மாறுபவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் தான் பாஜகவின் மாநில நிர்வாகியான வி முனியசாமி அக்கட்சியில் இருந்து விலகி உள்ளார். பாஜகவில் தமிழக பொருளாதார அணியின் மாநில துணை தலைவராக பொறுப்பு வகித்த வந்த நிலையில் அவர் விலகி உள்ளார்.

மக்கள் நீதிமய்யத்தில்...
பாஜகவில் இருந்து விலகிய வி முனியசாமி கமல்ஹாசன் முன்னிலையில் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் கவனம் செலுத்தும் வகையில் மக்கள் நீதி மய்யம் பணிகளை துவங்கி ஆலோசித்து வருகிறது. இந்நிலையில் தான் நேற்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு கூட்டம் அந்த கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பங்கேற்றார். இந்த வேளையில் வி முனியசாமி, மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார்.

ட்விட்டரில் உறுதி
இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யத்தின் ட்விட்டர் பதிவில் கூறப்பட்டுள்ளது. அதில், ‛‛பாஜக மாநில துணைத் தலைவர் (பொருளாதாரம்) வி முனியசாமி, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் முன்னிலையில் கட்சியில் இணைந்துள்ளார். இந்நிகழ்வின்போது மக்கள் நீதி மய்யம் துணைத் தலைவர்கள் ஏ.ஜி.மவுரியா, ஆர்.தங்கவேலு, மதுரை மண்டல செயலாளர் அழகர் ஆகியோர் உடனிருந்தனர்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டணி அமைத்து போட்டி
கடந்த 2019ல் நடந்த நாடாளுமன்ற தேர்தல், கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் மக்கள் நீதிமய்யம் போட்டியிட்டாலும் வெற்றியை பதிவு செய்யவில்லை. இதனால் 2024 நாடாளுமன்ற தேர்தலில் எப்படியாவது வெற்றியை பதிவு செய்ய வேண்டும் என்ற முனைப்பில் கமல்ஹாசன் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார். மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலில் களமிறங்கலாம் என கூறப்படும் நிலையில் அந்த கூட்டணி திமுகவுடன் இருக்கலாம் என தகவல்கள் பரவி வருகின்றன. இருப்பினும் கூட்டணி யாருடன் என்பது பற்றி கமல்ஹாசன் தரப்பிலும், திமுக தரப்பிலும் இதுவரை எதுவும் கூறப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
"தமிழகத்தில் பாஜக வளரவில்லை".. அதிமுக தான் எங்கள் பலம்.. மேடையிலேயே தோல்வியை ஒப்புக்கொண்ட அமித்ஷா! -
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்!












Click it and Unblock the Notifications