Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புதுக்கோட்டை தி.மு.க எம்.பி அப்துல்லா தமிழில் அனுப்பிய கடிதம்.. முதல் வரியே இப்படி.. பாஜக பதிலடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: புதுக்கோட்டையைச் சேர்ந்த தி.மு.க எம்.பி அப்துல்லாவுக்கு ஒரு மத்திய அமைச்சர் அலுவல்சார் கடிதம் ஒன்றை ஹிந்தி மொழியில் எழுதி விட்டாராம். உடனே பொங்கிய அப்துல்லா மத்திய அமைச்சருக்கு தமிழ் மொழியில் கடிதம் அனுப்பி உள்ளார். ஆனால் அவர் கைப்பட எழுதிய தமிழ் கடிதத்தில் முதல் வரியிலேயே பிழை என்று தமிழக பாஜக பொதுச்செயலாளர் எஸ்.ஜி.சூர்யா விமர்சனம் செய்துள்ளார்.


புதுக்கோட்டையைச் சேர்ந்த தி.மு.க எம்.பி அப்துல்லா ரயில்வே வழங்கும் உணவின் தரம் மற்றும் தூய்மை குறித்தும், ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் அங்கீகரிக்கப்படாத விற்பனையை நிறுத்துவது குறித்து மாநிலங்களவையி பல்வேறு கேள்விகளை முன்வைத்து பேசியிருந்தார். இதற்கு ரயில்வே துறை இணை அமைச்சர் ரவ்நீத் சிங், கடிதம் வாயிலாக திமுக எம்.பி அப்துல்லாவிற்கு பதில் அளித்தார்.

bjp dmk

ஆனால் அது இந்தி மொழியில் இருந்துள்ளது. இந்நிலையில், அவரது அலுவலக அதிகாரிகளை அழைத்து “எனக்கு இந்தி தெரியாததால் ஆங்கிலத்தில் கடிதத்தை அனுப்புங்கள்” என்று சொல்லியிருக்கிறார். ஆனால் அவர்கள் மீண்டும் இந்தியிலேயே கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று அப்துல்லா வெளியிட்டிருந்த பதிவில், “மாண்புமிகு ரயில்வே இணை அமைச்சர் அவர்களின் அலுவலகத்தில் இருந்து எப்போதும் இந்தியில்தான் கடிதம் வருகிறது. அவரது அலுவலக அதிகாரிகளை அழைத்து “எனக்கு இந்தி தெரியாததால் ஆங்கிலத்தில் கடிதத்தை அனுப்புங்கள்” என்று சொல்லியும் மீண்டும் மீண்டும் இந்தியிலேயே கடிதம் வருகிறது. தற்போது அவருக்கு “புரியும்படி” பதில் அனுப்பி உள்ளேன். இனி புரிந்து செயல்படுவார்கள் என நம்புகிறேன்” என்று கூறியிருந்தார். அத்துடன் தமிழில் கைப்பட எழுதிய கடிதத்தையும் அனுப்பி வைத்தார்.

அக்கடிதத்தில் தாங்கள் எனக்கு அனுப்பிய கடிதம் கிடைக்கப் பெற்றுள்ளார். எனக்கு இந்தி மொழி தெரியாத காரணத்தால் அதில் என்ன எழுதியுள்ளீர்கள் என எனக்குத் தெரியவில்லை. எனவே அடுத்த முறை கடிதம் அனுப்பும் போது ஆங்கிலத்தில் அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார். அத்துடன் அந்த கடிதத்தையும், தனக்கு இந்தி மொழியில் வந்த கடிதத்தையும் தனது X தள பக்கத்திலும் அப்துல்லா பதிவிட்டுள்ளார்.

bjp dmk

இதற்கு தமிழக பாஜக சார்பில் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் எஸ்ஜி சூர்யா பதிலடி கொடுத்துள்ளார். அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “ காலையிலேயே ஒரு தமிழ் பஞ்சாயத்து.. தி.மு.க எம்.பி அப்துல்லாவுக்கு ஒரு மத்திய அமைச்சர் அலுவல்சார் கடிதம் ஒன்றை ஹிந்தி மொழியில் எழுதி விட்டாராம். உடனே பொங்கிய அப்துல்லா மத்திய அமைச்சருக்கு 'நோஸ்கட்’ கொடுக்கிறேன் பேர்வழி என தமிழ் மொழியில் பதில் கடிதம் ஒன்றை எழுதினார். ஆனால் பாருங்களேன் அவர் கைப்பட எழுதிய தமிழ் கடிதத்தில் முதல் வரியிலேயே பிழை.

“நலம் விளைகிறேன்” என்ற சொற்றொடரை பயன்படுத்தி இருந்தார். ஆனால் விளைகிறேன் என்று ஒரு சொல்லே தமிழில் இல்லை. அதை எடுத்து சொல்லிய போது பிழையான தமிழுக்கு முட்டு வேறு கொடுக்கிறார், விளைகிறேன் என்றால் “விளக்குதல்” என்கிறார். காலக்கொடுமை.

bjp dmk

தமிழ் மீது தி.மு.க-வினர் போன்று போலி அன்பின்றி; உண்மையான காதல் கொண்டவனாக மீண்டும் சொல்கிறேன் விளைகிறேன் என்ற ஒரு சொல்லே தமிழில் கிடையாது. கிடையவே கிடையாது. விழைகிறேன் என்பதே சரியான பயன்பாடு. விழைகிறேன் என்றால் விரும்புகிறேன் என பொருள். நலம் விழைகிறேன் என்றால் உங்கள் நலத்தை விரும்புகிறேன் என அர்த்தம். விளைத்தல் என்றால் விளைவிப்பது, அரிசி விளைவித்தல் போல. நலத்தை விளைவிக்க எல்லாம் முடியாது அப்துல்லா சார்." இவ்வாறு கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+