போதைப் பொருள் கடத்தல்...பாஜகவில் இருந்து லுவாங்கோ பி. அடைக்கலராஜ் நீக்கம்!!
சென்னை: ஓபிசி அணியின் தமிழ்நாடு பாஜக செயற்குழு உறுப்பினராக இருந்த லுவாங்கோ பி. அடைக்கலராஜ் கட்சிக் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்ட காரணத்தினால் கட்சி பொறுப்பு மற்றும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்கப்படுகிறார் என்று தமிழ்நாடு பாஜக இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு பாஜக பொதுச் செயலாளரும், மாநில தலைமை அலுவலக பொறுப்பாளருமான கரு. நாகராஜன் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், ''பெரம்பலூர் பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில செயற்குழு உறுப்பினரான லுவாங்கோ பி. அடைக்கலராஜ் கட்சியில் இருந்து நீக்கப்படுகிறார். அவருடன் கட்சியின் நிர்வாகிகள மற்றும் உறுப்பினர்கள் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

திருச்சி போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலிஸாருக்கு திருச்சி பகுதியில் காரில் போதை பொருள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, டி.எஸ்.பி செந்தில்குமார் மற்றும் காமராஜ் தலைமையிலான போலீஸார் நடத்திய வாகன சோதனையில் அந்த கார் தடுத்து நிறுத்தப்பட்டது. காரை சோதனையிட்டதில், காரில் ஓபியம் போதைப்பொருள் இருந்தது தெரிய வந்தது.


விசாரணையில் காரை ஓட்டி வந்தவர் பெரம்பலூரை சேர்ந்த அடைக்கலராஜ், உடன் வந்தது திருச்சி நொச்சியம் மாந்திரி மங்களத்தை சேர்ந்த ஆதடையான் என்பது தெரிய வந்தது. விசாரணையில் பெரம்பலூர் பாஜக மாவட்ட துணைத்தலைவர் மற்றும் ஓபிசி அணி மாநில செயற்குழு உறுப்பினராக லுவாங்கோ பி. அடைக்கலராஜ் இருப்பது போலீசாருக்கு தெரிய வந்தது. அவரது காரை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து தற்போது பாஜக அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.
-
உதயமாகும் "தமிழ்நாடு கரப்பான் பூச்சி ஜனதா கட்சி.." தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பம்! -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய்.. எந்த வகையிலும் நியாயமற்ற அணுகுமுறை.. ஏன்? -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
நடுக்கடலில் உயிரிழந்த தமிழக மாலுமி.. 3 நாட்களுக்கு பிறகு ஒரு வழியாக மீட்கப்பட்ட உடல்! என்ன நடந்தது? -
4874 EV சார்ஜிங் நிலையங்கள் ரூ.2000 கோடியில்! தமிழகத்தில் எங்கே தெரியுமா? மத்திய அரசின் மாஸ் பிளான் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பூனைக்குட்டி வெளியே வந்துருச்சு! Don't care.. அண்ணாமலை பற்றி அமித் ஷா சொன்ன வார்த்தை! கலகல கமலாலயம்! -
திருவள்ளூர் முட்புதரில் 3 வயது குழந்தை... ஒரே நாளில் 5 சிறுமிகளுக்கு கொடுமை! சிங்கப்பெண் படை எங்கே? -
அண்ணாமலையின் புதிய அரசியல் அத்தியாயம்! செப்டம்பர் 14ல் வெளியாகிறது கட்சிப் பெயர்? -
கரண்ட் கட் பற்றி நான் சொன்ன விஷயத்தில் பின்வாங்க மாட்டேன்.. ஏனென்றால்..? மாஸ்டர் மகேந்திரன் விளக்கம் -
Waiting Is Over.. பாஜகவுக்கு டாடா சொன்ன அண்ணாமலை! புதிய கட்சி எப்போது உதயம்? லீக்கான தகவல்!












Click it and Unblock the Notifications