தமிழர்கள் அதிகம் வசிக்கும் வெளிநாடுகளில் புத்தக திருவிழா.. அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் ஆலோசனை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் நடத்தப்படும் புத்தக திருவிழாக்கள் சர்வதேச அளவில் கவனம் பெற்றிருக்கிறது. இதேபோல தமிழர்கள் அதிகம் வசிக்கும் வெளிநாடுகளிலும் புத்தக திருவிழாவை நடத்த திட்டமிடப்பட்டு வருகிறது. இதற்காக அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

சென்னை பன்னாட்டு புத்தகக் கண்காட்சி, தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் புத்தகத் திருவிழாக்கள் என அறிவைப் பரவலாக்கும் திராவிட மாடல் அரசின் அடுத்தகட்ட முன்னெடுப்பாக 'தமிழர்கள் அதிகம் வாழும் பிற மாநில நகரங்கள் மற்றும் வெளிநாடுகளில் தமிழ் புத்தகத் திருவிழாக்கள் நடத்தப்படும்' என 2025- 2026 நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

tamil nadu Anbil Mahesh

அதையொட்டி, ஐக்கிய அரபு அமீரகம் , மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் தமிழ் புத்தகத் திருவிழா நடத்துவது, அங்கு நடைபெறும் பன்னாட்டு புத்தகக் கண்காட்சிகளில் கலந்து கொள்வது குறித்து இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

இதில் , எஸ் எஸ் மீரான்,அமீரக திமுக அமைப்பாளர் மற்றும் தமிழ்நாடு அரசு அயலகத் தமிழர் நல வாரிய உறுப்பினர், மலேசியா நாட்டின் கல்வித் துறை முன்னாள் துணை அமைச்சர் டத்தோ கமலநாதன், வெளிநாடு வாழ் தமிழர் நல வாரிய உறுப்பினர்கள் சிங்கப்பூர் ராம், புகழ் காந்தி, பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் சந்திரமோகன் IAS, தமிழ்நாடு பாடநூல் நிறுவன நிர்வாக இயக்குனர் சங்கர் IAS ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+