சொன்னபடியே சிக்ஸர்.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சுதந்திர தின நாளில் சர்ப்ரைஸ்! ஸ்டாலின் மாஸ் அறிவிப்பு
சென்னை: மாநிலம் முழுவதும் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆக.25 முதல் காலை உணவுத்திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் சுதந்திர தின நாளில் அறிவித்துள்ளார்.
இந்தியாவின் 77-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டை கொத்தளத்தில் காலை 9 மணிக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் தேசியக் கொடி ஏற்றினார். பின்னர் மக்களுக்கு உரை நிகழ்த்தி பேசினார். இந்த 77 வது சுதந்திர தின விழாவில் முதல்வர் ஸ்டாலின், திராவிட கழக தலைவர் கி வீரமணிக்கு தகை சால் விருது வழங்கி சிறப்பித்தார்.

இந்த விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், கொடியேற்றும் வாய்ப்பை எனக்கு வணங்கிய தமிழக மக்கள் அனைவருக்கும் எனது அன்பான வணக்கங்கள். இந்திய நாட்டின் முக்கிய அங்கம் தமிழ்நாடு. குடும்ப தலைவிகளுக்கு மாதம் தோறும் ஆயிரம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது.
கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும், அவ்வாறு செய்தால்தான் நீட் போன்ற கொடூரமான தேர்வு முறையை அகற்ற முடியும். விடுதலை போராட்ட வீரர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் மாதாந்திர ஓய்வூதியம் 10 ஆயிரம் ரூபாயில் இருந்து 11 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
அனைவருக்குமான அரசாக, அனைவரின் வளர்ச்சிக்குமான அரசாக செயல்பட்டு வருகிறோம். அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கும் திட்டத்திற்கு விடியல் பயணம் திட்டம் என பெயர் சூட்டல். மாநிலம் முழுவதும் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆக.25 முதல் காலை உணவுத்திட்டம் விரிவாக்கம்.
அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆக.25 முதல் காலை உணவுத்திட்டம் விரிவாக்கம் செய்யப்படும், ராணுவத்தில் இருந்து திரும்பும் தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவத்தினர்களுக்கு 7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 10 ஆயிரம் நபர்களுக்கு உரிய பயிற்சி வழங்கப்படும், ஸ்விகி, ஸொமட்டோ ஊழியர்களுக்கு தனி வாரியம் அமைக்கப்படும், ஆட்டோ ஓட்டும் பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு 1லட்சம் மானியம் அறிவிக்கப்படும், என்று சென்னை கொத்தளத்தில் தேசியக் கொடியேற்றி முதல்வர் மு.க ஸ்டாலின் உரையாற்றி வருகிறார்.
வெற்றிகரமான திட்டம்: வரும் கல்வி ஆண்டு முதல் தமிழ்நாட்டில் உள்ள 30 ஆயிரத்து 122 அரசு தொடக்கப் பள்ளிகளில் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும்.
ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் 18 லட்சம் மாணவர்கள் பயனடையும் வகையில், இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். இதற்கு 500 கோடி ரூபாய் செலவு செய்யப்படும். தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் தொடங்கப்பட்ட காலை உணவு திட்டம் காரணமாக பள்ளிகளுக்கு மாணவர்களின் வருகை அதிகரித்து உள்ளதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
திட்டம் வெற்றி: இந்த திட்டம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் முதல்முறையாக காலை உணவு திட்டம் பள்ளிகளில் தொடங்கப்பட்டு உள்ளது. மாநகராட்சி, நகராட்சி மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு இந்த உணவு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை ₹404 கோடியில் விரிவாக்கம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. இதன்மூலம் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊரக பகுதிகளில் செயல்படும் 31,008 அரசுப் பள்ளிகளில் பயிலும் 15.75 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர். இதன் மூலம் இன்று மூலம் விரிவுபடுத்தப்பட்டு இடங்களிலும் இந்த திட்டம் அமலுக்கு வருகிறது.
ஸ்டாலினின் கனவு திட்டங்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. வரும் நாட்களில் அனைத்து வகுப்புகளுக்கும் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தம் ரூ.33.56 கோடியில் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. முதற்கட்டமாக 15 மாவட்டங்களில் உள்ள 292 கிராமப் பஞ்சாயத்துகளில் சோதனை முறையில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
அதை தொடர்ந்து சென்னை உள்ளிட்ட அனைத்து மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி மற்றும் மலைப் பகுதிகளில் உள்ள 1,543 அரசு தொடக்கப் பள்ளிகளில் 37 மாவட்டங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது.
மேலும் விரிவாக்கம்: இதையடுத்து முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை மேலும் விரிவாக்கம் செய்ய தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதுவரை இந்த திட்டம் செயல்படுத்தப்படாத தொடக்க பள்ளிகளில் செயல்படுத்தப்படும். ஆகஸ்ட் 25ம் தேதி இந்த திட்டம் மேலும் விரிவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
திட்டம் வெற்றி: கடந்த வருடம் மே மாதம் 7ம் தேதி இதற்கான அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் விதி எண் 110ன் கீழ் அறிவித்தார். தேசிய அளவில் இந்த திட்டம் கவனம் பெற்றுள்ளது. இந்த திட்டம் கொண்டு வரப்பட்ட 1,543 பள்ளிகளில் 1,319 பள்ளிகளிள் மாணவ, மாணவியர் வருகை பதிவேடு அதிகரித்து உள்ளது. மாநில திட்டமிடல் துறை சார்பாக எடுக்கப்பட்ட சர்வேயின் கீழ் இந்த தகவல் வெளியாகி உள்ளது.
திருப்பத்தூர், பெரம்பலூர், அரியலூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களின் வருகை 100 சதவீதம் உள்ளது. அதிலும் கவனிக்க வேண்டிய விஷயம் 1,086 பள்ளிகளில் வருகை 20% வரை அதிகரித்து உள்ளது. அதே நேரத்தில் 22 பள்ளிகளில் 40% அளவிற்கு வருகை பதிவுவேடு உயர்ந்துள்ளது. இந்த திட்டம் மூலம் ஒரு மாணவருக்கு ₹12.71 ரூபாய் வரை ஒருநாளுக்கு செலவு செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
-
பெண்கள், படித்தவர்களுக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்..டாக்டர் பட்டம் பெற்றவர்கள் மட்டும் இத்தனை பேரா? -
நம்பர் 1 முதல்வர் யார்? டாப் 5 லிஸ்ட்டில் யார் யார்? 1952 ராஜாஜி முதல் 2021 ஸ்டாலின் வரை! -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
Election Exclusive: வரம் கொடுத்த சாமி தலையில் கை வைத்த பிரேமலதா.. திமுக தொகுதிகளை கேட்டு அடம்! குட்டையைக் குழப்பு காங்.! -
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
ஸ்டாலின் கவுன்டவுன் ஸ்டார்ட்.. முன் கூட்டியே தொடங்கும் பிரச்சாரம்.. ஏவப்போகும் அஸ்திரம் -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா?











Click it and Unblock the Notifications