Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அடடே செம பிளான்.! முதல்வருக்கு குவியும் பாராட்டு.. காலை உணவு திட்டம் பசியை போக்க மட்டும் இல்லையாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சமீப காலங்களாக மாணவர்களுக்குச் சத்துக்குறைபாடு அதிகரித்து வரும் நிலையில், இதைத் தடுக்க அரசு இன்று முக்கிய திட்டத்தைத் தொடங்கி உள்ளது.

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் ஊட்டச்சத்துக் குறைபாட்டை போக்கவும், இடைநிற்றலைத் தவிர்க்கும் வகையிலும் காலை சிற்றுண்டி திட்டத்தைத் தமிழக அரசு செயல்படுத்தி உள்ளது.

இதற்கான அறிவிப்பைச் சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்த நிலையில், முதற்கட்டமாகக் கிராமங்களில் இருக்கும் அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை இத்திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது.

 காலை சிற்றுண்டி திட்டம்

காலை சிற்றுண்டி திட்டம்

இதற்கான வழிகாட்டுதல்களுடன் தேவையான அரசாணைகளும் வெளியிடப்பட்டன. இந்த காலை சிற்றுண்டி திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று மதுரையில் தொடங்கி வைத்தார். மதுரையில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் காலை சிற்றுண்டி திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மாணவர்கள் உடன் இணைந்து உணவு சாப்பிட்ட அவர், மாணவர்களுக்கும் உணவை வழங்கினார். தமிழ்நாட்டில் இருக்கும் 1,545 அரசுப் பள்ளிகளில் இந்த முதல்வரின் காலை உணவுத் திட்டம் 2022-2023ஆம் ஆண்டில் முதற்கட்டமாகச் செயல்படுத்தப்படவுள்ளது.

 தமிழகம்

தமிழகம்

மதிய உணவுத் திட்டத்தில் தமிழகம் எப்போதும் முன்னோடியாகவே இருந்துள்ளது. நாடு சுதந்திரம் அடையும் முன்னரே சென்னை மாகாணமாக இருந்த போதே, முதலில் பள்ளிகளில் மதிய உணவு வழங்கும் திட்டம் சென்னையில் 1920இல் செயல்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து 1957இல் அப்போதைய முதலமைச்சர் காமராஜர் மாநிலம் முழுக்க மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தார்.

 கடந்த ஆட்சியாளர்கள்

கடந்த ஆட்சியாளர்கள்

1982இல் இத்திட்டம் எம்ஜிஆர் சத்துணவுத் திட்டமாக விரிவுபடுத்தப்பட்ட நிலையில், 1989இல் சத்துணவில் முட்டை கருணாநிதியால் கொண்டு வரப்பட்டது. அதேபோல முட்டை சாப்பிடாதவர்களுக்கு வாழைப்பழம் கொடுக்கப்பட்டது. ஜெயலலிதா ஆட்சியில் கலவை சாதம் என்று அடுத்தடுத்து வந்த ஆட்சியாளர்களும் இந்தத் திட்டத்தை அடுத்த கட்டத்திற்கே எடுத்துச் சென்றனர்.

 அனைத்து வேலைநாட்கள்

அனைத்து வேலைநாட்கள்

இந்தச் சூழலில் தமிழகத்தில் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் குழந்தைகள் பாதிப்பது சமீப காலமாக அதிகரித்து உள்ளதாகத் தகவல் வெளியான நிலையில், நாட்டிலேயே முதல் முறையாகப் பள்ளிகளில் "காலை சிற்றுண்டி" திட்டத்தை திமுக அரசு இப்போது கொண்டு வந்துள்ளது. முதற்கட்டமாக சுமார் 33 கோடி செலவில் இந்தத் திட்டம் தொடங்கப்படுகிறது. இதில் அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் மாணவர்களுக்குக் காலை உணவு கொடுக்கப்படும்.

 பல வகை உணவுகள்

பல வகை உணவுகள்

இதற்கான மெனுவும் அரசாணையில் வெளியிடப்பட்டது. திங்கட்கிழமை காலை எதாவது ஒரு உப்புமா வகை மற்றும் காய்கறி சாம்பார் அளிக்கப்படும். செவ்வாய்க்கிழமை எதாவது ஒரு காய்கறி கிச்சடி கொடுக்கப்படும் நிலையில், புதன்கிழமை அன்று பொங்கலுடன் காய்கறி சாம்பார் மற்றும் வியாழக்கிழமை உப்புமா வகையுடன் காய்கறி சாம்பார் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

 சமையல்

சமையல்

அதேபோல வெள்ளிக்கிழமை எதாவது ஒரு கிச்சடி வகையுடன் கேசரியும் வழங்கப்படவுள்ளது. இதுமட்டுமின்றி வாரத்தில் இரு நாட்களுக்கு உள்ளூர் சிறுதானியங்கள் மூலம் காலை சிற்றுண்டி வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. காலை 8.15 முதல் 8.45 மணிக்குள் சிற்றுண்டி வழங்கப்படும் என்பதால் 5.30க்கு சமையல் தொடங்கி 7.45க்குள் முடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

 அறிவிப்பு

அறிவிப்பு

தமிழகத்தில் ஊட்டச்சத்துக் குறைபாடு அதிகரித்து வருவதாகப் பரவலாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அதை போக்கவே இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. போதிய ஊட்டச்சத்து கிடைப்பதை உறுதி செய்ய மாணவர்கள் அனைவருக்கும் சுமார் 150 முதல் 200 கிராம் உணவு மற்றும் 60 மி.கிராம் காய்கறி இருக்கும் சாம்பார் கொடுக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

 பாராட்டு

பாராட்டு

இதன் மூலம் மாணவர்களின் பசியை போக்குவது மட்டுமின்றி, போதிய ஊட்டச்சத்து கிடைப்பதும் உறுதி செய்யப்படும். இதனால் மாணவர்களுக்கு உடல்நிலை பாதிப்பு எதுவும் ஏற்படாது. இந்தத் திட்டத்தை மருத்துவர்கள், சமூக ஆர்வலர்கள் வரவேற்று வருகின்றனர். மேலும், கொரோனாவுக்கு பின்னர் இடைநிற்றல் அதிகரிக்கும் நிலையில், அதைக் குறைக்கவும் இது உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+