தமிழக நிதி நிலை: 20ஆண்டுகளுக்குப் பின் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்த பிடிஆர் பழனிவேல் ராஜன்
தமிழகத்தின் நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை 20 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை: தமிழகத்தின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை கடந்த 2001ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18ஆம் தேதி அதிமுக ஆட்சி காலத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் வெள்ளை அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சிகாலத்தில் நிதிநிலை மோசமாக இருந்ததாகவும் கடன் அளவு அதிகரித்துள்ளதாகவும் அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக குற்றம் சாட்டியது. திமுக ஆட்சி அமைத்தால் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று திமுக தலைமையிலான ஆட்சி தற்போது அமைந்துள்ளது. திமுக அரசின் நிதித்துறை அமைச்சராக பழனிவேல் தியாகராஜன் பொறுப்பேற்றார்.
கடந்த மாதம் செய்தியாளர்களை சந்தித்த நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அரசின் நிதி நிலை குறித்து ஆகஸ்ட் மாதம் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று கூறியிருந்தார். அதன்படி இன்று வெள்ளை அறிக்கை வெளியிடப்படுகிறது.

வெள்ளை அறிக்கை என்றால் என்ன
முழு வெளிப்படைத்தன்மையுடன் அரசு நடந்து கொள்வதை அடையாளப்படுத்துவதே வெள்ளை அறிக்கை என்பது. தமிழக அரசியல் வரலாற்றில் நீண்டகால பேசுபொருளாக இருக்கும் இந்த வெள்ளை அறிக்கை, தமிழகத்தின் நிதிநிலையை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் இன்று வெளியிடப்படவுள்ளது. தமிழகத்தில் கடந்த 2001ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் நிதி அமைச்சராக இருந்த சி. பொன்னையன், பட்ஜெட் தாக்கலின் போது நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டிருந்தார். அதன்பின்னர் நிதி நிலைமை தொடர்பான வெள்ளை அறிக்கைகள் வெளியிடப்படவில்லை. தமிழக அரசியல் வரலாற்றில் இதற்கு முன்பும் வெளியிடப்பட்டுள்ள வெள்ளை அறிக்கைகளைப் பற்றி பார்க்கலாம்.

புயல் வெள்ள நிவாரணம்
கடந்த 1977ம் ஆண்டு எம்.ஜி.ஆர்.முதலமைச்சராக இருந்தபோது, டிசம்பர் 29ந்தேதி, மாநிலத்தில் வீசிய புயல் மற்றும் வெள்ளம் ஆகிய பேரிடர்களுக்கான நிவாரணம் வழங்கப்பட்டது தொடர்பான வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையின்மீது சட்டசபையில் 4 நாட்கள் விவாதம் நடைபெற்றது.
1981ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 24ந்தேதி எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது, உணவு பொருட்களின் கையிருப்பு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் தொடர்பான வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, 3 நாட்கள் விவாதம் நடைபெற்றது.

வெள்ளை அறிக்கை தாக்கல்
1983ம் ஆண்டு மார்ச் மாதம் 9ந்தேதி சட்டசபையில் தமிழகத்தில் நிலவிய வறட்சி நிலைமை குறித்தும் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு ஒரு நாள் விவாதம் நடைபெற்றது. 1984 ஆம் ஆண்டு பிப்ரவரி 20ந்தேதி வறட்சி மற்றும் வெள்ள நிவாரணம் தொடர்பாக வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு ஒரு நாள் மட்டுமே விவாதம் நடைபெற்றது.

புயல் மழை வெள்ளம்
1994ம் ஆண்டு ஜனவரி 1ஆம்தேதி, கடுமையான புயல், மழை, வெள்ள நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகள் தொடர்பாக அப்போதைய முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா வெள்ளை அறிக்கை தாக்கல் செய்தார். அந்த அறிக்கையின் மீது 2 நாட்கள் விவாதம் நடைபெற்றது.

1996ல் வெள்ளை அறிக்கை
1996ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3ஆம் தேதி கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது, மழை, புயல், வெள்ள நிவாரண நடவடிக்கைகள் தொடர்பாக வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு ஒரு நாள் விவாதம் நடைபெற்றது. 1998ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம்தேதி கோவையில் நடந்த குண்டு வெடிப்பு தொடர்பாகவும் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு ஒரு நாள் விவாதம் நடந்தது.

சட்டசபையில் விவாதம்
2000ஆம் ஆண்டு மே 11ஆம்தேதி கருணாநிதி முதல்வராக இருந்தபோது, அரசு பணிகளில் ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு அரசு பணிகளில் வழங்கிய இடஒதுக்கீடு, பின்னடைவு பணியிடங்கள் குறித்து முழுமையான தகவல் அடங்கிய வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு ஒரு நாள் விவாதம் நடைபெற்றது.

2001ல் நிதிநிலை வெள்ளை அறிக்கை
2001ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18ஆம்தேதி ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது தமிழகத்தின் நிதி நிலைமை குறித்து வெள்ளை அறிக்கை தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில், 1990ஆம் ஆண்டுகளின் மத்தியில் இருந்து தமிழகத்தின் பொருளாதாரம், நிதிநிலை ஆய்வு செய்யப்பட்டதில், அதில் மிகுந்த கவலையளிக்கும் அம்சங்கள் இடம்பெற்றிருந்ததாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் அந்த அறிக்கையின்மீது விவாதம் நடத்தப்படவில்லை.

திமுக வலியுறுத்தல்
அதன்பிறகு திமுக, அதிமுக என தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்துள்ளன. இதில் 2006 முதல் 2011 வரை திமுக ஆட்சியும் 15 ஆண்டுகள் அதிமுக ஆட்சியும் நடைபெற்றுள்ளது. அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று பலமுறை திமுக வலியுறுத்தியுள்ளது. ஆனால் ஆளுங்கட்சியாக இருந்த அதிமுக வெள்ளை அறிக்கையை வெளியிடவில்லை.

பிடிஆர் பழனிவேல் ராஜன்
இந்த நிலையில்தான் திமுக ஆட்சி வந்த முதன் முதன்முறையான நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிடப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளில், தமிழக நிதிப் பற்றாக்குறை, வருவாய்ப் பற்றாக்குறை விவரங்கள், கடன், செலுத்தப்பட்ட வட்டி உள்ளிட்ட விவரங்கள், உள்நாட்டு மொத்த உற்பத்தி, தனிநபர் வருமானம் உள்ளிட்டவை குறித்து கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக அதிகாரிகளுடன் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆய்வு செய்தார். இதுதவிர, சென்னை குடிநீர் வாரியம், மின்வாரியம், போக்குவரத்துத்துறை, மருத்துவத்துறைகளின் செலவுகள், நிதிநிலை விவரங்கள், உள்ளாட்சி அமைப்புகளின் வரவு செலவு திட்டம் உள்ளிட்டவை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

மக்களுக்காக வெள்ளை அறிக்கை
முந்தைய அரசுகள் மற்றும் இதர மாநிலங்களில் வெளியிடப்பட்ட அறிக்கைகள் ஒப்பிட்டு பார்க்கப்பட்டுள்ளன. இவற்றின் அடிப்படையில், தமிழக நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சட்டசபைக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்ட சிஏஜி அறிக்கையின் நீட்சியாக இந்த வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசியலில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன. தமிழக அரசின் நிதி நிலை, கடன் அளவை மக்கள் பிரதிநிதிகள் மட்டுமல்லாது, மக்களும் தெரிந்து கொள்வதற்கு இந்த வெள்ளை அறிக்கை உதவியாக இருக்கும்.

எகிரும் எதிர்பார்ப்பு
தமிழகத்தில் 10 ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் இருந்தது. அதிமுக ஆட்சிக் காலத்தில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள், அவைகளுக்கான செலவுகள் உள்ளிட்டவை இந்த 120 பக்க வெள்ளை அறிக்கையில் இடம்பெற்றுள்ளது அரசின் அதிகாரப்பூர்வ அறிக்கையாக இருக்கும் இந்த வெள்ளை அறிக்கை, வெளிப்படைத்தன்மையுடன் கூடிய புள்ளி விவரங்களுடம் இருக்கும். தமிழகத்தின் வரவு செலவு கணக்குகள், கடன் அளவு, நிதி இருப்பு உள்ளிட்ட அனைத்தும் இடம்பெறும் என்பதால் இன்றைய தினம் வெளியாகும் வெள்ளை அறிக்கை குறித்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications