மகளிர் உரிமைத் தொகை பெற புதிதாக விண்ணப்பிக்கலாம்! பட்ஜெட்டில் பெண்களுக்கு ஜாக்பாட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெண்களுக்கு தமிழ்நாடு பட்ஜெட்டில் சூப்பர் செய்தியை வழங்கி உள்ளார் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு. "இதுவரை கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறாத பெண்கள் புதிதாக விண்ணப்பிக்கலாம். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்." என அறிவித்துள்ளார்.

2025 - 2026ஆம் நிதி ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட், இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தலுக்கு முன்பாக தாக்கல் செய்யப்படும் முழு பட்ஜெட் என்பதால், சரவெடி அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. குறிப்பாக, பெண்களுக்கு அரசு தரும் மாதாந்திர உரிமைத்தொகை தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் வருகிறது. தேர்தலுக்கு முன்பு இடைக்கால பட்ஜெட்டைதான் இந்த அரசு தாக்கல் செய்ய முடியும். எனவே தற்போது தமிழக அரசு தாக்கல் செய்யும் பட்ஜெட்தான் முழுமையாக இருக்கும். அதனால் இந்த பட்ஜெட் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. இந்த பட்ஜெட்டில் மக்களை கவரும் வகையில் பல்வேறு பல்வேறு புதிய திட்டங்கள் இடம்பெற்று வருகின்றன,.

tamil nadu budget 2025 tamil nadu budget budget magalir urimai thogai 2025

பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு நலத்திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு தீட்டி வருகிறது. அந்த வகையில், ஏற்கனவே உள்ள திட்டங்களில் முக்கியமான திட்டமான மகளிர் உரிமைத்தொகை இந்த பட்ஜெட் மூலம் அதிகரிக்கப்படுமா? உரிமைத்தொகை பெறுவோரின் எண்ணிக்கை உயர்த்தப்படுமா? இலவசமாக பெண்கள் பயணிக்கும் பஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுமா? போன்ற எதிர்பார்ப்புகளை பெண்கள் மத்தியில் பட்ஜெட் எழுப்பியுள்ளது.

கடந்த 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின் போது திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட பல்வேறு அம்சங்கள் நிறைவேற்றப்பட்டு விட்டதாக திமுக அரசு கூறி வருகிறது. மீதம் உள்ள திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் இன்றைய பட்ஜெட்டில் இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக மகளிர் உரிமை தொகை பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பான அறிவிப்பும், மகளிர் உரிமை தொகையை உயர்த்தி தருவதற்கான அறிவிப்பும் வெளியாக வாய்ப்புள்ளது. முதியோர் உதவி தொகை, கைம்பெண்களுக்கான உதவி தொகை உள்ளிட்ட சமூக நலத்திட்டங்களுக்கான உதவித் தொகை அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது, 1.15 கோடி மகளிருக்கு மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படுகிறது. இதில், விடுபட்ட அனைத்து மகளிருக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும் என தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். அதற்கான அறிவிப்பு, இன்றைய பட்ஜெட்டில் வெளியாகி இருக்கிறது.

"இதுவரை கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறாத பெண்கள் புதிதாக விண்ணப்பிக்கலாம். மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் புதியவர்கள் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படும். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்." என அறிவித்துள்ளார். மேலும், மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு ரூ.13,807 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

கல்லூரி மாணவ - மாணவிகளுக்கு வழங்கப்படும் புதுமை பெண் திட்டம்,தமிழ் புதல்வன் திட்டம் மூலமாக மாதம் தோறும் வழங்கப்பட்டு வரும் 1000 ரூபாய் தொகை மேலும் உயர்த்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+