சென்னை வேளச்சேரி டூ கிண்டி வரை புதிய மேம்பாலம்.. பட்ஜெட்டில் வெளியான தங்கமான அறிவிப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தின் 2025- 2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று சட்டசபையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். இதில் சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக மேலும் இரண்டு மேம்பாலங்கள் அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக சென்னை வேளச்சேரி டூ கிண்டி வரை புதிய மேம்பாலம் அமைக்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.

2025 - 2026 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டசபையில் தாக்கல் செய்து வருகிறார். அடுத்த ஆண்டு தமிழக சட்டசபை தேர்தல் நடைபெறுவதால், இந்த பட்ஜெட்டில் ஏராளமான அறிவிப்புகள் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்த்தது போலவே பல்வேறு முக்கிய அறிவிப்புகளை தங்கம் தென்னரசு அறிவித்து வருகிறார்.

tamil nadu budget 2025 tamil nadu budget 2025 2025

சென்னை வேளச்சேரியில் மேம்பாலம்

* ரூ.400 கோடியில் திருச்சி, மதுரை, ஈரோடு, கோயம்புத்தூர் & திருநெல்வேலி மாநகராட்சிகளில் நதிக்கரை மேம்பாட்டுப் பணிகள் நடைபெறும்.
* சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக ரூ.310 கோடியில் வேளச்சேரியில் புதிய மேம்பாலம் அமைக்கப்படும். இதன் மூலம் 7 லட்சம் பேர் பயன் பெறுவார்கள். சென்னை வேளச்சேரி டூ கிண்டி வரை இந்த புதிய மேம்பாலம் அமைக்கப்படும்.

* ரூ.77 கோடியில் மேலும் 10 இடங்களில் 800 பணிபுரியும் பெண்கள் பயனடையும் வகையில் தோழி விடுதிகள் அமைக்கப்படும்.
* சென்னை, கோவை, மதுரையில் தலா 1,000 மாணவிகள் பயன்பெறும் வகையில் ரூ.275 கோடியில் மாணவியர் விடுதிகள் அமைக்கப்படும்.
* தமிழகத்தில் 10,000 சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்படும். இதற்காக ரூ.37,000 கோடி வழங்கிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மகளிர் விடியல் பயணம்

* மகளிர் விடியல் பயண திட்டத்திற்காக ரூ.3,600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* சென்னைக்கு அருகில் உலகத் தர வசதிகளுடன் புதிய நகரம் அமைக்கப்படும்.
* ரூ.6,668 கோடியில் 7 மாவட்டங்களில் புதிய கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் அமைக்கப்படும். இதன் மூலம் 29.74 லட்சம் மக்கள் பயன் பெறுவார்கள்.
* ரூ.2,423 கோடியில் சென்னையில் சீராகக் குடிநீர் விநியோகித்திட முதன்மைச் சுற்றுக்குழாய்த் திட்டம் அமைக்கப்படும். இவ்வாறு தங்கம் தென்னரசு அறிவித்து வருகிறார்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+