இவங்களுக்கு எல்லாம்.. இனி அரசு பட்டா உறுதி.. தங்கம் தென்னரசு சொன்ன இனிப்பான செய்தி.. அப்படி போடு!
சென்னை: ஆட்சேபனையற்ற அரசு புறப்போக்கும் நிலங்களில் வசிக்கும் 77,800 பேருக்கு வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டு உள்ளது.. கடந்த 5 ஆண்டுகளில் ஆட்சேபனையற்ற அரசு நிலங்களில் வசிப்போருக்கு ஒருமுறை சிறப்பு வரன்முறைப்படுத்தும் திட்டத்தில் 77,800 இணையவழி பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.. தொடர்ந்து பட்டா வழங்கப்படும் என்று இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.
2026-2027 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் ரூ.902 கோடியில் நெல்லை, கோவை, திருச்சியில் நவீன நூலகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.48,534 கோடிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மருத்துவத்துறைக்கு ரூ.22,090 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. நலன் காக்கும் ஸ்டாலின் முகாம் மூலம் 17 லட்சம் பேர் பயன் பெற்றுள்ளனர். இன்னுயிர் காப்போம் திட்டத்தில் 5.11 லட்சம் பேர் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது, இதற்காக ரூ.413 கோடி செலவிடப்பட்டுள்ளது. வடசென்னை வளர்ச்சி திட்டம், இலட்சிய திட்டமாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது; பேருந்து நிலையம், உடற்பயிற்சி நிலையம், பூங்காக்கள், தொழில்நுட்ப கல்லூரி அமைப்பது என ரூ.6,048 கோடி மதிப்பில் செயல்பட்டு வருகிறது.
தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களில், 41% பெண்கள் தமிழ்நாட்டில் பணிபுரிகின்றனர். நாட்டின் இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. இரட்டை இலக்க பொருளாதார இலக்கை அடைய பல திட்டங்களை செயல்படுத்திய முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி. மகளிர் சுய உதவி குழுக்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
புதிய அருங்காட்சியகங்கள் ரூ.285 கோடி மதிப்பில் அமைக்கப்பட உள்ளன. சோழர் அருங்காட்சியகம், நொய்யல் அருங்காட்சியகம், எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் வெண்கல அருங்காட்சியகம், திருவண்ணாமலையில் தமிழர் பண்பாட்டு அருங்காட்சியகம் ரூ.287 கோடி மதிப்பில் அமைக்கப்படும். உலகத் தரத்தில் கீழடி மற்றும் பொருநை அருங்காட்சியம் திறந்து வைக்கப்பட்டு பெரிய வரவேற்றை பெற்றுள்ளன.
தமிழகத்தில் 10,649 புதிய வீடுகள் கட்டித் தரப்படும். இலங்கை தமிழர்களுக்கு ரூ.630 கோடியில் புதிய வீடுகள் கட்டித்தரப்படும். மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு வீடுகள் கட்டித் தரும் திட்டத்தில் 10,469 வீடுகள் கட்டுவதற்கு, ரூ.630 கோடி ஒதுக்கப்பட்டு, 6,010 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ளவை கட்டப்பட்டு வருகின்றன. ஏற்றுமதி பெருக்கி, பண வீக்கத்தைக் குறைத்து, தொழிலாளர் நலன் காக்கும் பெரும் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு அதிக நிதி வழங்கப்பட்டுள்ளது;
உணவு உற்பத்தியில் வரலாறு காணாத வளர்ச்சியைப் பெற்றுள்ளோம்; செயற்கை நுண்ணணுறவு உள்ளிட்ட துறைகளில் இளைஞர்கள் வளர திட்டங்கள் தீட்டப்படும் வகையில் தமிழர் பெருமையைப் பறைசாற்றும் வகையில் பல அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது; நாட்டிற்கே வழிகாட்டும் வரலாற்றுக் கடமையை நாம் செய்து வருகிறோம். திருக்குறளை அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மகளிர் உரிமை தொகை ரூ. 5000 முன்கூட்டியே வழங்கப்பட்டு உள்ளது. இதை மொத்த நாடும் திரும்பி பார்த்து உள்ளது. இந்தியாவுக்கே வழிகாட்டும் வரலாற்று கடமையை நாம் செய்து வருகிறோம். அந்த தொகை பாதிக்கக்கூடாது என்பதால் முன்கூட்டியே வழங்கி உள்ளோம்.. இந்த திட்டம் தொடர்ந்து தடைபடாமல் வழங்கப்படும்.
விடியல் பேருந்து திட்டத்தில் 888 கோடி முறை மகளிர் பயணம் செய்து பயனடைந்துள்ளனர். 6 லட்சம் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1.40 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. 19 தோழி விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. மகளிர் நலன் காக்கும் இத்தகையை திட்டங்களை பல மாநிலங்கள் பின்பற்ற தொடங்கி உள்ளன. மகப்பேறு இறப்பு விகிதம் மற்றும் சிசு இறப்பு விகிதம் தேசிய சாராசரியை விட தமிழ்நாட்டில் குறைவாக உள்ளது. பெண் ஓதுவார் நியமனம் நமது அரசின் மகத்தான சாதனை,
அரசு மருத்துவமனையில் பாதுகாப்பான பிரசவத்தில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம். பிரசவத்தின் போது உயிரிழப்பு தேசிய சராசரியை விட தமிழ்நாட்டில் மிகவும் குறைவாக உள்ளது.
விடியல் பயணத் திட்டத்தின் மூலமாக பெண்கள் 881 கோடி முறை அரசு பேருந்துகளில் பயணம் செய்துள்ளனர். பெண்களின் வளர்ச்சி திட்டங்களில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது என்று இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.












Click it and Unblock the Notifications