ஹீராபென் மறைவு: தாயாரை இழந்த துயரம் யாராலும் தாங்க முடியாதது -பிரதமர் மோடிக்கு மு.க ஸ்டாலின் ஆறுதல்!
சென்னை: பிரதமர் மோடியின் தாயர் ஹீராபென் மோடி இன்று அதிகாலை காலமானார். அவரது மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தாயாரை இழந்த துயரம் யாராலும் தாங்க முடியாதது. உங்களுக்கு ஏற்பட்ட இழப்புக்காக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என்று பிரதமர் மோடிக்கு மு.க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியின் தாயர் ஹீராபென் மோடி. கடந்த ஜூன் மாதம் 100-வது பிறந்த நாளை ஹீராபென் மோடி கொண்டாடினார்.
குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள பிருந்தாவன் சொசைட்டியில் தனது இளைய மகன் பங்கஜ் மோடியுடன் வசித்து வந்தார். பிரதமர் மோடி குஜராத் மாநிலம் செல்லும் போதெல்லாம் தவறாமல் தனது தாயார் ஹீராபென் மோடியை சந்தித்து விட்டு செல்வார்.

உடல் நலம் குறித்து விசாரிக்க
கடந்த 2 தினங்களுக்கு முன்பாக பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து,நேற்று முன் தினம் அகமதாபாத்தில் உள்ள யு.என்.மேத்தா இதய நோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தாயாரின் உடல் நலம் குறித்து விசாரிக்க பிரதமர் மோடி உடனடியாக நேற்று முன் தினம் அகமதாபாத் சென்றார்.

உடல் நலம் தேற வேண்டி..
தாயார் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு சென்ற பிரதமர் மோடி, தனது தாயாரின் உடல் நலம் குறித்து மருத்துவர்களிடமும் விசாரித்தார். ஹீராபென் மோடியின் உடல் நலனில் முன்னேற்றம் இருப்பதாகவும் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. பிரதமர் மோடியின் தாயார் உடல் நலம் தேற வேண்டு என்று ராகுல் காந்தி உள்பட நாடு முழுவதும் உள்ள அரசியல் தலைவர்கள் விருப்பம் தெரிவித்து இருந்தனர்.

அதிகாலையில் உயிரிழந்தார்
இந்த நிலையில் இன்று அதிகாலை 3.39 மணியளவில் பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி காலமானார். தாயார் மறைவையடுத்து பிரதமர் மோடி அவசர அவசரமாக அகமதாபத் புறப்பட்டு சென்றார். பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு நாடு முழுவதும் உள்ள அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

யாராலும் தாங்க முடியாதது
அந்த வகையில், தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினும் பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தனது ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார். முதல்வர் மு.க ஸ்டாலின் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: - தாயார் ஹீராபென்னுடன் நீங்கள் கொண்டிருந்த உணர்ச்சிப்பூர்வமான பிணைப்பை நாங்கள் அறிவோம். தாயாரை இழந்த துயரம் யாராலும் தாங்க முடியாதது. உங்களுக்கு ஏற்பட்ட இழப்புக்காக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். தாயாருடன் நீங்கள் பகிர்ந்து கொண்ட நினைவுகளில் அமைதி ஆறுதலை நீங்கள் பெறுவீர்கள்" என்று பதிவிட்டுள்ளார். இதேபோல தமிழக முன்னாள் முதல்வரும் தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் தமிழக முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் உள்பட பலரும் ஹீராபென் மோடி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
-
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்!












Click it and Unblock the Notifications