முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில்.. தொடங்கியது அமைச்சரவை கூட்டம்.. பட்ஜெட்டிற்கு ஒப்புதல்?
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியுள்ளது.
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியுள்ளது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
அதில் 2023-24ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டுக்கு ஒப்புதல் பெறப்படும் எனத் தெரிகிறது. பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் திட்டங்கள் மற்றும் அதற்கான நிதி ஆகிய அம்சங்களுக்கு இந்த அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும்.
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்கும் முன்னோடி திட்டமும் இடம்பெறவுள்ளது.

பட்ஜெட்
சட்டப்பேரவையில் வரும் மார்ச் 20-ஆம் தேதி காலை 10 மணிக்கு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் 2023-24ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். அதைத்தொடர்ந்து, அடுத்த நாள் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் சூழலில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியுள்ளது.

மகளிருக்கு ரூ. 1000
இந்த பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய திட்டங்கள் இடம்பெறுகின்றன. அவை தொடர்பாக விவாதிக்கப்பட்டு வருகிறம். குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் தொடர்பான அறிவிப்பு இந்த பட்ஜெட்டில் வெளியிடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதுதவிர, மாணவர்கள், இளைஞர்களுக்கான பல்வேறு புதிய திட்டங்கள் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமைச்சரவை ஒப்புதல்
பட்ஜெட்டில் இடம்பெறவுள்ள இந்த திட்டங்களுக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்படும் எனத் தெரிகிறது. ஏற்கெனவே நடைமுறையில் உள்ள பல்வேறு திட்டங்களுக்கும் அடுத்த நிதி ஆண்டுக்கான நிதி, பட்ஜெட்டில் ஒதுக்கப்பட உள்ளது. மேலும், தனியார் தொழில் திட்டங்களுக்கான ஒப்புதலும் அமைச்சரவையால் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா
மேலும், ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியது குறித்தும் ஆலோசிக்கப்படலாம் எனத் தெரிகிறது. கடந்த அக்.19-ஆம் தேதி ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இதையடுத்து, அந்த மசோதாவில் பல்வேறு விளக்கங்களை ஆளுநர் கோரியிருந்தார். அதற்கு, 24 மணி நேரத்தில் விளக்கங்களை தமிழக அரசு அளித்தது. இந்நிலையில், தற்போது ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை தமிழ்நாடு அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியுள்ளார்.
-
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications