தமிழக அமைச்சரவை மாற்றம் இன்று இல்லை- தற்காலிகமாக நிம்மதி பெருமூச்சு விடும் அமைச்சர்கள் யார் யார்?
சென்னை: தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் இன்று நடைபெறக் கூடும் என்ற தகவலை முதல்வர் மு.க.ஸ்டாலின் மறுத்துள்ளார். இதனால் அமைச்சர் பதவி இழக்கக் கூடும் என கூறப்பட்ட மூத்த அமைச்சர் காந்தி மற்றும் அமைச்சர்கள் மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான் ஆகியோருக்கு தற்காலிக நிம்மதி கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில் அமைச்சர் பதவிக்காக கோவி செழியன், பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன் ஆகிய எம்.எல்.ஏ.க்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். முதல்வர் ஸ்டாலின், ஆகஸ்ட் 27 முதல் 17 நாட்கள் அமெரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.

முதல்வர் ஸ்டாலினின் அமெரிக்கா பயணத்தை முன்னிட்டு தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்பது நீண்டகாலமாக சொல்லப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று மாலை அதிகாரப்பூர்வமாக அமைச்சரவை மாற்றம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என கூறப்பட்டது.
ஆனால் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று அமைச்சரவை மாற்றம் இல்லை என தெரிவித்துவிட்டார்.
இது தொடர்பாக நாம் விசாரித்த போது, தற்போதைய அமைச்சர்களில் சீனியரான காந்தி மீது முதல்வருக்கு அதிருப்தி இருந்து வருகிறது. இதனால் அமைச்சர் பதவியில் இருந்து காந்தி நீக்கப்படக் கூடிய வாய்ப்புகளை மறுப்பதற்கு இல்லை. அதேபோல அமைச்சர்கள் மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான் ஆகியோரது செயல்பாடுகளிலும் முதல்வர் ஸ்டாலின் திருப்தியை தெரிவிக்கவில்லையாம். இதனால் அமைச்சர்கள் காந்தி, செஞ்சி மஸ்தான், மனோ தங்கராஜ் ஆகிய மூவரும் பதவி இழக்க நேரிடுமாம். ஆனால் இன்று அமைச்சரவை மாற்றம் இல்லை என்பதால் மூவருமே நிம்மதியில் உள்ளனராம்.
இந்த மூவருக்கு பதில் 3 புதிய முகங்கள் அமைச்சரவையில் இடம் பெறக் கூடும் எனவும் கூறப்பட்டது. செஞ்சி மஸ்தானை நீக்கிவிட்டால் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த மாஜி அமைச்சர் ஆவடி நாசரை மீண்டும் அமைச்சரவையில் சேர்க்கக் கூடும்; கோவி செழியன் மற்றும் பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன் ஆகிய எம்.எல்.ஏ.க்கள் அமைச்சரவையில் புதியதாக இணைக்கப்படவும் கூடும் எனவும் கூறப்பட்டது. தற்போதைக்கு அமைச்சரவை மாற்றம் இல்லை என்பதால் இந்த 3 பேரும் இன்னும் காத்திருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கின்றன அரசியல் வட்டாரங்கள்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications