சாட்டையை எடுக்கிறாரா ஸ்டாலின்? மத்திய அரசுக்கு வரி தர மறுக்கும் தீர்மானம் இன்று வெளியாகப்போகிறதா?
சென்னை: தமிழ்நாட்டுக்கான பல்வேறு துறைசார் நிதிகளை தராமல் இழுத்தடித்து வரும் மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அரசு கண்டனம் தெரிவித்தும், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு தமது வரி வருவாயை மத்திய அரசுக்கு செலுத்தாமல் இருக்கும் நிலைமை உருவாகும் என்பதை எச்சரிக்கும் வகையிலும் தமிழ்நாடு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வாய்ப்பிருப்பதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் இது பற்றி விவாதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் தமிழ்நாட்டுக்கான கல்வி நிதியை வழங்க முடியும் என்பதில் மத்திய அரசு பிடிவாதமாக இருக்கிறது; ஆனால் மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தி மொழியை திணிப்பதால் அதனை ஏற்க முடியாது என்கிறது தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசு.

இந்த நிலையில் மத்திய அரசின் இந்தி திணிப்புக்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகள் உட்பட பல்வேறு இயக்கங்கள், மாணவர் அமைப்புகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றன. தமிழ்நாட்டின் பல நகரங்களில் தன்னெழுச்சியாக இந்தி திணிப்பு எதிர்ப்பு கிளர்ச்சிகள் நடைபெறுகின்றன.
இதனிடையே மத்திய அரசுக்கு நெருக்கடி தரும் வகையில் தமிழ்நாட்டு அரசின் மாநில வரி வருவாயை மத்திய அரசு தராமல் நிறுத்தி வைக்க வேண்டும்; ஆங்கிலேயருக்கு எதிரான வரி கொடா இயக்கம் போல தமிழ்நாடு அரசு ஒரு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்; தமிழ்நாடு சட்டசபையில் மத்திய அரசுக்கு வரி செலுத்த மறுக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று திமுகவின் கூட்டணி கட்சியான தமிழக வாழ்வுரிமைக் கட்சி மற்றும் நாம் தமிழர் கட்சி உள்ளிட்டவை வலியுறுத்தி வருகின்றன.
இந்த பின்னணியில் தற்போது நடைபெற்று வரும் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டத்திலும் இது தொடர்பாக விவாதிக்கப்படுகிறது. தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான இந்த அமைச்சரவை கூட்டத்தில், மத்திய அரசின் வஞ்சகப் போக்கு குறித்து விரிவாக விவாதிக்கப்படுகிறது.
மேலும், மத்திய அரசுக்கு எச்சரிக்கை தரும் வகையில், தமிழ்நாடு சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரில் அல்லது அதற்கு முன்னதாக சிறப்பு கூட்டத்தைக் கூட்டி, மத்திய அரசு நிதி தர மறுத்தால் தமிழ்நாட்டின் வரி வருவாயை மத்திய அரசுக்கு தர இயலாத சூழ்நிலை உருவாகும் என எச்சரிக்கை விடுக்கும் ஒரு சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்படவும் வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாகவும் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.
தமிழ்நாடு அரசு வரி தர மறுத்தால், மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி அரசு, அரசியல் சாசனத்தின் 356-வது பிரிவை பயன்படுத்தி திமுக ஆட்சியை டிஸ்மிஸ் செய்யும் சூழ்நிலையும் உருவாகும் என பாஜக தரப்பில் தொடர்ந்து மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. இந்த மிரட்டலையும் கவனத்தில் கொண்டு மத்திய அரசுக்கு எதிராக தமிழ்நாடு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றுவது தொடர்பாக இன்றைய அமைச்சரவை கூட்டம் விவாதிக்கிறது என்கின்றன தலைமை செயலக வட்டாரங்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications