முதல்வர் ஸ்டாலின் இன்று கோவை விசிட்..2 நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்..பலத்த பாதுகாப்பு ஏற்பாடு
விசைத்தறி, கைத்தறியாளர்கள் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்வதற்காக தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கோவை செல்கிறார்.
சென்னை: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று கோவை செல்கிறார். விசைத்தறியாளர்களுக்கு 750 யூனிட் வழங்கப்பட்டு வந்த இலவச மின்சாரத்தை 1000 யூனிட்டாக உயர்த்தி தமிழக அரசு அறிவித்தது. இதற்கு நன்றி தெரிவித்து விசைத்தறி, கைத்தறியாளர்கள் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடைபெறுகிறது. இதில் முதல்வர் மு.க ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.
முதல்வர் ஸ்டாலின் வருகையையொட்டி கோவை மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 2 ஆயிரத்து 700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதேபோல் முதல்வர் ஸ்டாலின் வருகையையொட்டி, கோவை மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் ஸ்டாலின் கோவை பயணம்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கோவை செல்கிறார். சென்னையில் இருந்து விமானம் மூலம் காலை 11 மணியளவில் முதல்வர் கோவை வருகிறார். விமான நிலையத்தில் முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு திமுக நிர்வாகிகள், மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர். திமுகவினரின் வரவேற்பை ஏற்றுக்கொள்ளும் முதல்வர் மு.க ஸ்டாலின், அங்கிருந்து காரில் சின்னியம்பாளையத்தில் உள்ள பிருந்தாவன் மண்டபத்திற்கு செல்கிறார்.

பாராட்டு விழா
அங்கு பிற கட்சியினர் திமுகவில் இணையும் விழாவில் பங்கேற்று முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அவினாசி ரோட்டில் உள்ள லீமெரிடியன் ஓட்டலுக்கு சென்று அங்கு மதிய உணவு சாப்பிட்டு விட்டு சிறிது நேரம் ஓய்வெடுக்க உள்ளார். அதன்பிறகு மாலை 5 மணிக்கு லீ மெரிடியன் ஓட்டலில் இருந்து கார் மூலமாக கருமத்தம்பட்டிக்கு செல்கிறார். கருமத்தம்பட்டி நால்ரோடு சந்திப்பு பகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடைபெறுகிறது.

விசைத்தறி, கைத்தறியாளர்கள்
விசைத்தறியாளர்களுக்கு 750 யூனிட் வழங்கப்பட்டு வந்த இலவச மின்சாரத்தை 1000 யூனிட்டாக உயர்த்தி தமிழக அரசு அறிவித்தது. இதற்கு நன்றி தெரிவித்து விசைத்தறி, கைத்தறியாளர்கள் சங்கம் சார்பில் நடைபெறும் பாராட்டு விழா நடைபெறுகிறது. இதில் முதல்வர் மு.க ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார். இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு இரவு 9 மணிக்கு கோவை விமான நிலையம் சென்று அங்கு இருந்து விமானம் மூலமாக சென்னை செல்கிறார்.

ட்ரோன்கள் பறக்க தடை
முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி கோவை மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. சுமார் 2,700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். பாதுகாப்பு காரணங்களுக்காக கோவை மாவட்டம் முழுவதும் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி பறக்கவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications