கையில் லிஸ்ட்டுடன்.. பிரதமர் மோடியை சந்தித்த ஸ்டாலின்.. திமுக அலுவலக திறப்பு விழாவுக்கும் அழைப்பு
பிரதமர் மோடியை இன்று நேரில் சந்திக்கிறார் முதல்வர் ஸ்டாலின்
சென்னை: டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து பேசினார்.. அப்போது தமிழக நலன் தொடர்பான ஏராளமான கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் பிரதமரிடம் முதல்வர் வழங்கினார்
Recommended Video
டெல்லியில் திமுகவின் தலைமையகமான அண்ணா - கலைஞர் அறிவாலய கட்டிடத்தின் திறப்பு விழா வரும் 2-ம் தேதி நடைபெற உள்ளது..
இதற்கான ஏற்பாடுகள் கடந்த சில தினங்களாகவே நடைபெற்று வருகிறது.. அதேபோல இந்த கட்டிடமும் ஸ்பெஷலாக கட்டி முடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அறிவாலயம்
இந்த அண்ணா- கலைஞர் மாளிகையின் முதல் தளத்தில் முக்கிய நிர்வாகிகள் அமர்ந்து பேசுவதற்கான இடமும், தலைவருக்கான பிரத்யேக ரூம்களும் அமைக்கப்பட்டுள்ளது. .. 2-வது தளத்தில் கான்ப்ரன்சிங் ரூம்கள் அமைக்கப்பட்டுள்ளது... இங்கு சென்னை அறிவாலயத்தில் உள்ளது போலவே அங்கும் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.. 3-வது தளத்தில் எம்பிக்கள் மற்றும் தமிழகத்தில் இருந்து வரும் நிர்வாகிகள் தங்குவதற்கான அறைகள் அமைந்துள்ளன.. இந்த 3 தளங்களுமே நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நிதி ஒதுக்க கோரிக்கை
இதில் பங்கேற்பதற்காகத்தான், முதல்வர் ஸ்டாலின் டெல்லி புறப்பட்டு சென்றார்.. நள்ளிரவில் டெல்லி சென்றடைந்த முதல்வருக்கு, திமுக எம்பிக்கள், நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.. இன்று காலை டி.ஆர். பாலு தலைமையில் திமுக எம்பிக்கள் முதல்வரை சந்தித்து பேசினர்.. திமுக அலுவலக திறப்பு விழா தொடர்பாக அவர்களுடன் ஸ்டாலின் விரிவான ஆலோசனை நடத்தினார்... அதற்கு பிறகு பிரதமர் மோடியை சந்திக்க கிளம்பி சென்றார்.

பிரதமர் மோடி
பாராளுமன்றத்தின் பிரதமர் அலுவலக அறையில் மோடியை ஸ்டாலின் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.. சரியாக பகல் 1 மணியளவில் பிரதமர் மோடியை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து பேசினார்... அப்போது, டெல்லி திமுக அலுவலக திறப்பு விழாவுக்கு வருமாறு பிரதமருக்கு ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்... அதற்கான அழைப்பிதழையும் வழங்கினார்.. இதையடுத்து, தமிழகத்துக்கான பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பிரதமரிடம் முதல்வர் வலியுறுத்தினார்.

அழைப்பு
நாளை அதாவது ஏப்ரல் 1-ம் தேதி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட பலருடன் ஸ்டாலின் பேச உள்ளார். அப்போது, வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக பெரிய அளவிலான கூட்டணி அமைப்பது குறித்தும் அனைத்திந்திய சமூகநீதி கூட்டமைப்பை வலுப்படுத்துவது குறித்தும் ஆலோசிக்க உள்ளார்.. ஆரம்பத்தில் ஒரு நாளாக திட்டமிடப்பட்டு இருந்த முதல்வரின் டெல்லி பயணம், திடீரென 4 நாட்களாக மாற்றப்பட்டுள்ளது, தேசிய அளவில் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது...!

சந்திப்பு
குறிப்பாக, தமிழகத்துக்கு தர வேண்டிய நிதி நிலுவை தொகையை உடனடியாக தர வேண்டும், மழை வெள்ளம் மற்றும் மாநில அரசின் திட்டங்களுக்கான நிதியையும் தாமதம் இல்லாமல் தர வேண்டும், ஜி.எஸ்.டி. நிலுவை தொகையையும் உடனே விடுவிக்க வேண்டும், தமிழகத்தில் டெல்டா விவசாயத்தை பாதிக்கும் வகையில் மேகதாது பகுதியில் கர்நாடக அரசு அணை கட்டும் திட்டத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது என்பன உட்பட பல்வேறு கோரிக்கைளை முன்வைத்தார்.

தமிழக மீனவர்கள்
மேலும், கச்சத்தீவு அருகே மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் தினமும் இலங்கை கடற்படையால் சிறைப்பிடித்து செல்லப்படுவது பற்றியும் தமிழக மீனவர்கள் பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில் நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என்றும் பிரதமரை முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டார். அதேபோல, தமிழகத்தில் நீட் தேர்வால் கிராமப்புற ஏழை மாணவ-மாணவிகள் பாதிக்கப்படுவதை பற்றி எடுத்து கூறிய முதல்வர், இந்த கோரிக்கைகள் அனைத்தும் அடங்கிய மனுவையும் ஸ்டாலின் வழங்கினார்... நீண்ட நேரம் இந்த சந்திப்பு நடந்தது..

அழைப்பு
அதன்பிறகு, மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரியை சந்தித்து தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் நெடுஞ்சாலை திட்டப்பணிகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசினார். பிற்பகல் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் ஸ்டாலின் சந்தித்து பேசுகிறார். அப்போது அவருடனும் நீட் தேர்வு மசோதா, பேரிடர் நிவாரணத் தொகை குறித்து அவருடன் விவாதிக்க உள்ளார்.. பிறகு, அப்போது திமுக அலுவலக திறப்பு விழாவுக்கு அழைப்பு விடுப்பார் என தெரிகிறது. ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட மத்திய அமைச்சர்களையும் முதல்வர் ஸ்டாலின் சந்திக்க உள்ளார்.












Click it and Unblock the Notifications