தமிழினத்தை சாதி மதங்களால் பிரிக்க சிலர் முயற்சி! விழிப்பாக இருக்க வேண்டும்! முதல்வர் ஸ்டாலின் பேச்சு
சென்னை : தமிழினத்தை சாதி மதங்களால் பிரிக்க சிலர் முயற்சி செய்கின்றனர் எனவும், தமிழினத்தை பிரிக்கும் சதிகளை தெரிந்து கொண்டு விழிப்பாக இருக்க வேண்டும் என சென்னையில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
Recommended Video
இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாதத்தில் 30 நாட்களுக்கு நோன்பு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. உலகெங்கிலும் உள்ள இஸ்லாமிய மக்கள் முக்கிய கடைமையான ரமலான் நோன்பை கடைபிடித்து வருகின்றனர்.
இந்நிலையில் ரம்லான் மாதத்தை முன்னிட்டு சென்னை திருவான்மியூரில் திமுக சிறுபான்மையினர் பிரிவின் சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திமுக அரசு
இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு நோன்பு திறந்து, இஸ்லாமிய மக்களிடையே சிறப்புறை ஆற்றினார். நிகழ்ச்சியில் பேசிய முதல்வர், " இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கியது கலைஞர் கருணாநிதி தலைமையிலான திமுக அரசு, பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இஸ்லாமியர்களுக்கு 3.5 இட ஒதுக்கீடு 2007ஆம் ஆண்டு அளித்தது திமுக அரசு. இஸ்லாமிய மக்களுக்காக சிறுபான்மை நல இயக்கம் அமைத்தது திமுக

தமிழக முதல்வர் ஸ்டாலின்
தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களான பேரறிஞர் அண்ணாவையும், கழக தலைவர் கலைஞர் கருணாநிதியையும் இணைத்தது இஸ்லாமிய மக்கள் கொண்டாடும் மீலாது நபி நிகழ்ச்சிதான். சிறுபான்மையினர் உடனான திமுகவின் உறவு காலங்காலமாக தொடர்ந்து வருகிறது. 1990 ஆம் ஆண்டு சிறுபான்மையினர் நலக்குழுவை உருவாக்கியவர் கலைஞர் கருணாநிதி.

திமுகவின் உறவு
மேலும் ஹஜ் புனித பயணத்திற்கான மானியத்தை அவர் அதிகப்படுத்தினார். கலைஞர் கருணாநிதியின் வாழ்க்கையில் இணைந்தும், பிணைந்தும் இருந்தவர்கள் இஸ்லாமிய தோழர்கள். இஸ்லாமிய மக்கள் ரம்ஜான் மாதத்தை மிக புனிதமான மாதமாகவே கடைபிடிக்கின்றனர். நான் ஆற்றுவது எழுச்சி உரை அல்ல, உணர்ச்சி உரை.
|
புனிதமான ரம்ஜான் மாதம்
இஸ்லாமிய மக்கள் ரம்ஜான் மாதத்தை மிக புனிதமான மாதமாகவே கடைபிடிக்கின்றனர். நான் ஆற்றுவது எழுச்சி உரை அல்ல, உணர்ச்சி உரை. மதம், சமயம் என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பத்துக்குரியவை. தமிழினத்தை சாதி, மதங்களால் பிரிக்க சிலர் முயற்சி செய்கின்றனர். தமிழினத்தை பிரிக்கும் சதிகளை தெரிந்து கொண்டு விழிப்பாக இருக்க வேண்டும்" என பேசினார். இந்த நிகழ்ச்சியில் திமுக அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இஸ்லாமிய பெருமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்












Click it and Unblock the Notifications