Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தியாவுக்குள் போட்டியா? தமிழகம் பெரிய மாநிலம்.. உலக நாடுகளுடன் போட்டி! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை : நம்முடைய போட்டி என்பது இந்திய மாநிலங்களோடு மட்டுமல்லாமல் - உலக நாடுகளுக்கு இணையானதாக இருக்க வேண்டும் எனவும், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவில் தமிழ்நாடு 2-ஆவது பெரிய மாநிலமாக திகழ்கிறது என தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழ்நாடு அரசின் துணிநூல் துறை, ஒன்றிய அரசின் ஜவுளித் துறை மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு இணைந்து நடத்தும் பன்னாட்டு தொழில்நுட்ப ஜவுளிகள் கருத்தரங்கு இன்றும் நாளையும் நடைபெற இருக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆழ்வார்பேட்டை முதலமைச்சரின் முகாம் அலுவலகத்திலிருந்து இருந்து காணொளி காட்சி மூலம் கலந்து கொண்டு பேசினார். இதில் தமிழக அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்

நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின்,"ஒவ்வொரு துறையிலும் நமது அரசு பன்னாட்டளவிலான முன்னெடுப்புகளைச் செய்து வருகிறது. அதில் தொழில்துறை முன்னணியில் இருக்கிறது உலகத்தரத்திலான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருகிறோம் விளையாட்டுத் நுறையில் உலகப் புகழை அடைந்து வருகிறோம். பன்னாட்டு நிறுவனங்கள் இங்கு நிறுவனங்களைத் தொடங்கும் முயற்சியில் இருக்கிறார்கள் இந்த வரிசையில் துணிநூல் துறையின் சார்பில் முதன்முறையாக ஜவுளித் தொழில் குறித்தான பன்னாட்டுக் கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

உலக நாடுகளுடன் போட்டி

உலக நாடுகளுடன் போட்டி

நம்முடைய போட்டி என்பது இந்திய மாநிலங்களோடு மட்டுமல்லாமல் - உலக நாடுகளுக்கு இணையானதாக இருக்க வேண்டும் அதற்காகத்தான் இது போன்ற கருத்தரங்குகள் நடத்தப்படுகிறது. தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறையானது மிகச்சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது மகாத்மா காந்தியடிகளின் அடையாளம் கதர் என்பதைப் போல நம்முடைய அமைச்சர் காந்தியின் அடையாளமாகத் துணிநூல் துறையானது அமைந்துவிட்டது.

ஜவுளிப்பூங்காக்கள்

ஜவுளிப்பூங்காக்கள்

சிறிய அளவிலான ஜவுளிப்பூங்காக்கள் ரூ 2 கோடியே 50 லட்சம் அரசு மானியத்துடன் உருவாக்கப்பட்டு வருகிறது. சென்னையில் ஜவுளி நகரம் (Textile City) அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. துறையின் கீழ் இயங்கும் கூட்டுறவு நூற்பாலைகளில் பணிபுரியும் நிரந்தரத் தொழிலாளர்களுக்கு மாதம் ஒன்றுக்கு தலா ரூ. 2.500/- வீதம் ஊதிய உயர்வு வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட உள்ளது. மூன்று கூட்டுறவு நூற்பாலைகளில் 11 கிலோவாட் உயர் மின்னழுத்த மின்பாதைகள் (Dedicated Electrical Power Feeder Line} நிறுவிடத் தொகை விடுவிக்கப்பட்டுள்ளது. இப்படி பல்வேறு சாதனைகளை முன்னின்று செய்துள்ளார் நம்முடைய அமைச்சர் காந்தி.

 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

எனவே அவரையும் இத்துறையின் அதிகாரிகளையும் நான் மனதாரப் பாராட்டுகிறேன். தொழில்நுட்ப ஜவுளிகளின் முக்கியத்துவம் மற்றும் மாநிலத்தின் சமூகப் பொருளாதார மேம்பாட்டிற்கு அதன் பங்களிப்பு குறித்த விழிப்புனர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் தமிழ்நாடு அரசின் ஜவுளித் துறை ஒன்றிய அரசின் ஜவுளி அமைச்சகம் மற்றும் இந்தியத் தொழில் கூட்டமைப்புடன் இணைந்து. இக்கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொழில்நுட்ப ஜவுளிகள் குறித்த பன்னாட்டுக் கருத்தரங்கில் அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் மற்றும் உள்நாட்டு நிறுவனங்களின் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டதை அறிந்து நான் மகிழ்ச்சி அடைகிறேன்,

தமிழ்நாடு

தமிழ்நாடு

கல்வி, பொருளாதாரம், சுகாதாரம், மருத்துவம் வேளாண்மை ஏற்றுமதி மற்றும் மனிதவளம் ஆகியவற்றில் தமிழ்நாடு இந்தியாவுக்கு முதன்மையான பங்களிப்பை அளித்து வருகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள்.
தொழில்வளம் அமைதியான சூழல் தொழில் தொடங்குவதற்கான எளிய நடைமுறைகள், முன்னேறிவரும் பொருளாதாரச் சூழ்நிலை, திறன்மிகு மனிதவளம் ஆகியவற்றின் காரணமாக அனைவரையும் ஈர்க்கும் மாநிலமாக நமது தமிழ்நாடு இருக்கிறது. நமது அரசின் முனைப்பான நடவடிக்கைகளால் தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்குப் பன்னாட்டுத் தொழில் முனைவோர்களும் ஆர்வம் காட்டி வருகிறார்கள்

பெரிய மாநிலம்

பெரிய மாநிலம்

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவில் தமிழ்நாடு 2-ஆவது பெரிய மாநிலமாக திகழ்கிறது 4 பெரிய பன்னாட்டு விமான நிலையங்கள், 2 உள்நாட்டு விமான நிலையங்கள் 3 பெரிய துறைமுகங்கள் 19 சிறிய துறைமுகங்களைத் தமிழ்நாடு கொண்டிருக்கிறது. 2 இலட்சத்து 53 ஆயிரத்து 510 கிலோமீட்டர் நீளமுள்ள சாலைவழி வசதியைக் கொண்டு முதலீட்டாளர்களும் ஏற்றுமதியாளர்களும் மிகவும் விரும்பும் மாநிலமாக விளங்குகிறது. தமிழ்நாடு அதிக விழுக்காடு கல்வி அறிவு பெற்ற மாநிலமாகத் திகழ்கிறது.

மெகா ஜவுளி நகரம்

மெகா ஜவுளி நகரம்

தமிழ்நாட்டில் உலகத் தரத்தின் மெகா ஜவுளி நகரம் (Textile City) உருவாக்கிட முயற்சிகள் எடுத்து வருகிறோம். மாமல்லபுரத்தில் ரூபாய் 30 கோடி செலவில் கைத்தறி அருங்காட்சியகம் (Hardioom Museum) அமைத்திடவும் திட்டமிட்டுள்ளோம் ரூபாய் 10 கோடி செலவில் நவீன தகவல் தொழில்நுட்பம் மற்றும் இணை உட்கட்டமைப்புடன் கூடிய வடிவமைப்பு நிலையம் (Design ard Incutiation Centre) நிறுவிடவும் நமது அரக நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இவை அனைத்திற்கும் அடித்தளம் அமைக்கும் கருத்தரங்காக இந்த இரண்டு நாள் கருத்தரங்கம் அமைய வேண்டும்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+