விரிவாக்கப்படும் முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டம்! மக்களுக்கு குட் நியூஸ்.. யாருக்கு பொருந்தும்
சென்னை: இந்தியாவின் முதல் மாநில நிதியுதவி மருத்துவக் காப்பீட்டுத் திட்டமான தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது.
நடுத்தர மற்றும் உயர் பொருளாதார பின்னணியை கொண்ட குடும்பங்களுக்கு சுகாதார பாதுகாப்பு கிடைக்கச் செய்வதற்கான அரசு ஒரு குழுவை அமைத்துள்ளது. அதாவது வறுமைக்கோட்டிற்கு மேலே உள்ளவர்களுக்கும் இன்சூரன்ஸ் கிடைக்க வகை செய்யும் விதமாக இந்த திட்டத்தை விரிவு செய்ய உள்ளது.

தற்போது 1.4 கோடி பிபிஎல் குடும்பங்கள் அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 1,000க்கும் மேற்பட்ட நோய்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.5 லட்சம் காப்பீடு பெறுகின்றனர். பிற பொருளாதார பின்னணியை கொண்ட குடும்பங்களுக்கும் இதே திட்டத்தை விரிவுபடுத்த அரசு முடிவு செய்துள்ளது.
குழு அமைப்பு: முதலமைச்சரின் உடல்நலக் காப்பீட்டுத் திட்டத்தின் செயல்பாடுகளை பற்றி ஆய்வு செய்ய 6 பேர் கொண்ட குழு, அமைக்கப்பட்டு உள்ளது. அரசால் நியமிக்கப்பட்ட 6 பேர் கொண்ட குழு விரிவான அறிக்கையைத் தயாரித்து வருகிறது. இது நவம்பர் மாதத்திற்குள் சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
தேசிய சுகாதார அமைப்பு வள மையத்தின் முன்னாள் இயக்குநர் டாக்டர் டி.சுந்தரராமன் தலைமையிலான குழு, பல மாவட்டங்களுக்குச் சென்று, மருத்துவமனைகள், மருத்துவர்கள், மருத்துவ உதவியாளர்கள் மற்றும் நோயாளிகள், தனியார் மருத்துவமனைகளின் பங்கேற்பை எவ்வாறு மேம்படுத்தலாம், எப்படித் திட்டத்தை மேம்படுத்தலாம் என்பதைப் புரிந்துகொள்வதற்காக மருத்துவமனைகள், மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் நோயாளிகளை பார்வையிட்டு ஆலோசனைகளை செய்து வருகின்றனர். இதன் மூலம்தான் திட்டத்தை. விரிவாக்கம் செய்ய முடியும் என்று அரசு தரப்பு தெரிவித்துள்ளது..
திட்டம் முக்கியம்: இந்த அறிக்கை விரைவில் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கப்படும். இத்திட்டத்தின் கீழ் 1.4 கோடி குடும்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாநில பதிவுகள் காட்டுகின்றன. ஒவ்வொரு குடும்பமும் 1,000 க்கும் மேற்பட்ட நோய்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் 5 லட்சம் வரை அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காப்பீடு பெறுகிறது.
ஆனாலும் பலருக்கு இந்த திட்டத்தின் கீழ் பணம் வழங்கப்படுவது இல்லை. பல இடங்களில் கார்டுகளை பெற அரசு மாறுகிறது. இதெல்லாம் போக சில இடங்களில் இன்சூரன்ஸ் பணம் போதுமான அளவு கிடைப்பது இல்லை. இதை எல்லாம் தடுக்கும் விதமாக தற்போது ஆலோசனை நடந்து வருகிறது.
பல தனியார் மருத்துவமனைகள் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நோயாளிகளுக்கு 10%க்கும் குறைவான படுக்கைகளை ஒதுக்கியுள்ளன. இதனால் அவசர சிகிச்சைகளை பெறுவது சிக்கல் ஆகி உள்ளது. இதனால் அதிக அளவில் நோயாளிகள் அரசு மருத்துவமனைக்கு வருவதாகவும், அதனால் அரசு மருத்துவமனைகள் மீதான அழுத்தங்கள் அதிகரித்து வருவதாக தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தனியார் பங்களிப்பை அரசு அதிகரிக்க வேண்டும் என இந்த சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. இதன் மூலம் இந்தியாவின் முதல் மாநில நிதியுதவி மருத்துவக் காப்பீட்டுத் திட்டமான தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது. இதன் மூலம் வறுமைக்கோட்டிற்கு மேலே உள்ளவர்களுக்கும் இன்சூரன்ஸ் கிடைக்க வகை செய்யும் விதமாக இந்த திட்டத்தை விரிவு செய்ய உள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications